எழில், அமிர்தாவுக்கு நடந்த திருமணம்..கடைசியில் மன்னிப்பு கேட்ட பாக்கியா.. ஈஸ்வரி எடுத்த முடிவு
எழில் மற்றும் அமிர்தாவுக்கு திருமணம் முடிவடைந்து இருக்கிறது.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் பாக்கியாவால் நடத்தி வைக்கப்படுகிறது.
ஈஸ்வரி கோபத்தில் மண்டபத்தை விட்டு கிளம்பி விட்டார்.
ராமமூர்த்தியிடம் பாக்கியா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

பாக்யா சொன்ன உண்மை
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்கியா அமிர்தாவிடம் எதற்கும் கவலை வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி எழில் எங்கேஜ்மென்ட் அன்று இரவு அனுப்பி வைத்ததை அனைவரிடமும் கூறுகின்றார். பிறகு எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் இனி யாரும் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது என்று கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்பு அமிர்தா மற்றும் எழில் இருவரையும் அழைத்து மணமேடையில் உட்கார வைக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

கோபத்தில் ஈஸ்வரி
இதைப் பார்த்த ஈஸ்வரி கோபத்தில் மேடையில் இருந்து இறங்க செல்ல ராமமூர்த்தி தடுத்து நிறுத்துகிறார். பின்பு எழில் அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார். திருமணத்திற்கு பிறகு நிலாவை மடியில் வைத்து அமிர்தா மற்றும் எழில் இருவரும் கொஞ்சுவதை பார்த்து கோபத்தில் ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பி செல்ல, பின்னாடியே எழில் செல்கிறார். அதைத் தொடர்ந்து கோபி, இனியா மற்றும் ராதிகாவை அழைத்துக் கொண்டு மேடையில் மண்டபத்தில் இருந்து கிளம்புகிறார்.

பாக்யாவுக்கு நன்றி கூறிய எழில்
அடுத்ததாக எழில் அமிர்தாவோடு பாக்யாவை தனியாக அழைத்து சென்று பாக்கியாவின் காலில் விழுந்து ரொம்ப நன்றி என்று கதறி அழுகிறார். எப்படி அம்மா உன்னால இதெல்லாம் முடிந்தது என்று கேட்க, நிஜமாகவே நீ சந்தோஷமா இருக்கியா இல்லையா என்று உன்னுடைய முகத்தை பார்த்தால் எனக்கு தெரியாதா? நீ எப்படி இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா என்று கேட்க எனக்கு வேற வழி தெரியவில்லை என்று எழில் கூறுகிறார். சரி விடு எல்லாம் நல்லபடியாக நடந்தது என்று சொல்ல எழில் மற்றும் அமிர்தா இருவரும் பாக்யாவை கட்டிபிடித்து அழுகின்றனர். இனி இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பாக்யா கூறுகிறார்.

மன்னிப்பு கேட்ட பாக்யா
அடுத்து தனியாக இருக்கும் ராமமூர்த்தி இடம் பாக்கியா ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க மாமா என்று கையெழுத்து குப்பிட்டு அழுகிறார். நீ பண்ணுனது தப்பு என்று நான் பேச முடியாத அளவிற்கு நீ பேசிட்ட நான் உனக்கு பண்ணின தப்பை, நீ உன் பிள்ளைக்கு பண்ணாம இருந்துட்ட, அதுவரைக்கும் எனக்கு சந்தோசம் என்று சொல்ல, நான் உங்களை குத்தம் சொல்றதுக்காக இதை சொல்லல்லை ஆனால் பிடிக்காத வாழ்க்கையில் எழில் போயிரக்கூடாது என்று சொல்றதுக்காகத்தான் இதை சொன்னேன் என்று ராதிகா சொல்ல, நீ நம்பற நம்பிக்கை பழிக்கட்டும் என்று நான் ஆண்டவரிடம் வேண்டுகிறேன் என்று ராமமூர்த்தி கூறுகிறார்.

ஈஸ்வரியின் முடிவு
பிறகு எல்லோரும் மண்டபத்தில் இருந்து கிளம்பிய பிறகு அமிர்தாவின் அப்பா அம்மாவிடம் பாக்யா தப்பா நினைச்சுக்காதீங்க என்று சொல்ல, ,நீங்க ராத்திரியோடு ராத்திரி கிளம்பி வரச் சொல்லி போன் பண்ணுன போது நான் எதிர்பார்க்கலை. நடக்கிறது எல்லாம் நல்லதுக்கா இல்லையா என்று கூட எங்களுக்கு தெரியல, சரி நாங்க உங்களை நம்பித்தான் அமிர்தாவை விட்டுட்டு போறோம் என்று பிறகு கிளம்புகின்றனர். நிலாவை அவர்களோடு கொண்டு செல்கிறோம் என்று அவர்கள் கூற அது முடியாது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று எழில் மற்றும் அமிர்தா கூறுகின்றனர். பிறகு அப்பா அம்மா மட்டும் செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளை எபிசோட்டில் அனைவரும் வீட்டிற்கு செல்கின்றனர் அங்கே ஈஸ்வரி இங்கே எதற்கு எல்லோரும் வந்தீங்க, ஒரு பிள்ளையோட அம்மாவை கட்டிக்கிட்டு வந்திருக்க உனக்கு அசிங்கமா இல்லையா என்று எழிலை கேட்டு? என்னை எதிர்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டா இல்ல, பாக்கியா நீயே கூட்டிட்டு போ, இங்க உனக்கு இடம் இல்லை என்று கூறுகிறார்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications