அவமானப்படுத்திய ஈஸ்வரிக்கு பாக்கியாவின் பதிலடி.. ஜெனிக்கு கிடைத்த அதிர்ச்சி.. தாத்தாவின் மாற்றம்
எழில், அமிர்தாவுக்கு சாபம் விட்டு வீட்டை விட்டு வெளியேற ஈஸ்வரி கூறுகிறார். ஆனால் பாக்கியா அனைவரையும் வீட்டுக்குள் கூட்டி வந்திருக்கிறார்.
சென்னை: ஈஸ்வரி, அமிர்தா, எழில் மற்றும் பாக்கியாவை வீட்டிற்குள் வரக்கூடாது என்று வீட்டு வாசலில் தடுத்து நிறுத்துகிறார்.
ஆரம்பத்தில் ஈஸ்வரி இடம் பாக்கியா கெஞ்சிக் கொண்டு இருக்க பிறகு ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டுகிறார்.
பிறகு அமிர்தாவின் குழந்தை நிலாவை கூட்டிக்கொண்டு வரக்கூடாது என்று ஈஸ்வரி சொல்ல எழில் அதற்கு முடியாது என்று பதில் அளிக்கிறார்.
அனைவரும் வீட்டிற்குள் வந்து விட்டதால் இனி தன்னால் இந்த வீட்டிற்குள் இருக்க முடியாது என்று செழியன் துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்ப ரெடி ஆகுகிறார்.

வீட்டை விட்டு விரட்டும் ஈஸ்வரி
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எழில் மற்றும் அமிர்தா மாலையும் கழுத்துமாக வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்க, ஈஸ்வரி பாக்யாவையும் அவர்களோடு வீட்டிற்குள் வரக்கூடாது. அனைவரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்ல,பாக்கியா ஈஸ்வரியிடம் கெஞ்சுகிறார். இந்த மாதிரி நிலைமையில் நான் எங்கே கூட்டிக்கொண்டு செல்வேன் என்று கேட்க தெருவில் போய் நில்லுங்க என்று ஈஸ்வரி திட்டுகிறார். அதற்கு முடியாது வீட்டிற்குள் வர விடுங்க பிறகு பேசிக்கலாம் என்று தொடர்ந்து பாக்கியா கூறிக் கொண்டிருக்கிறார்.

தப்பு பண்ணுனது நீங்க தான் ஈஸ்வரி
எனக்கு இவளை பிடிக்கவில்லை, வீட்டுக்குள்ள இவங்க வரக்கூடாது என்று ஈஸ்வரி கூறிக் கொண்டிருக்கும் போது பாக்யா செல்வியை நீ போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா என்று சொல்ல, ஈஸ்வரி தடுத்து நிறுத்துகிறார். தப்பு மேல தப்பு பண்ற பாக்யா என்று ஈஸ்வரி மிரட்டுகிறார். அதற்கு பாக்யா தப்பு பண்ணுனது உங்க மகன்தான். அப்போ நான் தப்பு பண்ணல, இப்பவும் அதே மாதிரி என் புள்ள தப்பு பண்ணல. ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்கான். தப்பு பண்ணுனது நீங்க தான். பணத்துக்காகவும் வீட்டுக்காகவும் என் பிள்ளைக்கு விருப்பமில்லாத கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தீங்க என்று பதில் கொடுக்கிறார்.

குழந்தையை குறித்து கேள்வி
ஈஸ்வரி யாரையும் உள்ளே விட முடியாது என்று உறுதியாக இருக்க, ராமமூர்த்தி ஈஸ்வரியை சத்தம் போட்டு திட்டுகிறார். பிறகு பாக்கியா இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல ஈஸ்வரி கோபத்தோடு இந்த குழந்தையும் இங்குதான் இருக்குமா? என கேட்கிறார். அதற்கு எழில் நான் அமிர்தாவை தனியாக பார்த்தது கிடையாது. இந்த குழந்தையும் சேர்த்து தான் பார்த்தேன் என்று பதில் கொடுக்கிறார். இதனால் மேலும் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

ஈஸ்வரியின் சாபம்
வீட்டிற்குள் சென்றதும் பாக்கியா தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்கிறார். பிறகு ஈஸ்வரியிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்ல, ஈஸ்வரி இது எல்லாம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. நீ இந்த கல்யாணம் பண்ணி வச்சதுக்காக தினம் தினம் கண்ணீர் விடுவாய் என்று சாபம் விடுகிறார். இதனால் பாக்கியா வாழ்த்தவில்லை என்றாலும் பரவாயில்ல இப்படி சபிக்காதிங்க என்று சொல்ல, அதற்கு நான் அப்படித்தான் சபிப்பேன் என்று சத்தம் போடுகிறார். இதோடு இனிமே என்னை அத்தை என்று கூப்பிடாத, நான் சாகுற வரைக்கும் உன் கிட்ட பேசவே மாட்டேன். என்கிட்ட நீங்க ரெண்டு பேரும் பேசாதீங்க என்று எழிலையும் பாக்கியாவையும் திட்டுகிறார்.

தாத்தாவிடம் செட் ஆன நிலா
பிறகு நான் என்னுடைய பேரன்களின் திருமணத்தை எப்படி எல்லாம் பண்ணனும் நினைச்சிருந்தேன் ஆனா ரெண்டு திருமணத்தையும் நீ உனக்கு பிடிச்ச மாதிரி நடத்திட்ட. நீ என்ன ஜெயிச்சுட்டேன்னு நினைக்கிற நீ என்ன தோற்கடித்துவிட்டாய் என்று கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு பாக்கியா, எழில் அமிர்தாவுக்கு பாலும் பழமும் கொடுக்க நிலா பாப்பா ராமமூர்த்தி அருகே சென்று தாத்தா தாத்தா என்று கூப்பிட, அவர் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சுகிறார். பிறகு ஜெனி டிரஸ் மாத்தி விட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார். ராமமூர்த்தி நானும் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கிறேன் என்று கிளம்புகிறார்.

செழியனின் மிரட்டல்
ஜெனி ரூமுக்கு போகும்போது செழியன் கோபத்தோடு இருக்கிறார். செழியனிடம் ஜெனி, நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா? என்று கேட்க, ஆமாம் நான் உன்னை காதலிக்கும் போது நீ ஆறாவது வகுப்பு படித்த, ஒரே ஸ்கூலில் படித்தோம். அப்ப இருந்தே காதலிச்சிட்டு தான் இருக்கேன் என்று சொல்ல, அப்போ எனக்கும் அமிர்தாவின் நிலைமை இருந்திருந்தால் நீ காதலிச்சு இருப்பியா? என்று கேட்க சத்தியமா நான் திரும்பி கூட பார்த்து இருக்க மாட்டேன் என்று கூறுகிறார். பிறகு இனி இந்த வீட்டில் இருக்க முடியாது என்று பேக்கில் துணிமணிகளை எடுத்துக்கொண்டு கிளம்ப, ஜெனி நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது என்று சொல்கிறார். மீண்டும் மீறி செழியன் வீட்டை விட்டு கிளம்ப இது இந்த குழந்தை மேல சத்தியம் நீ வீட்டை விட்டு போக கூடாது என்று சொல்ல,செழியன் எதுவும் செய்ய முடியாமல் கோபத்தோடு நிற்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications