குடும்பத்தினரிடம் பாக்கியா கேட்ட கேள்வி.. வர்ஷினியின் அப்பாவின் மிரட்டல்.. எழிலின் எதிர்பாராத முடிவு
எழில் கடைசி நேரத்தில்தான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன் என்ற உண்மையை அனைவர் முன்னிலையிலும் கூறிவிட்டார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுடைய திருமணத்தை பாக்யா தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
மணமேடையில் இருந்த எழில் பணத்திற்காக தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார் என்ற உண்மையை அனைவர் முன்னிலையிலும் பாக்யா கூறிவிட்டார்.
வர்ஷினியோடு இந்த திருமணம் நடைபெறவில்லை என்றால் நான் என்ன செய்வேன் தெரியுமா என்று வர்ஷினியின் அப்பா எழிலை மிரட்டுகிறார்.
எழில் நான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன் என்று அனைவரும் முன்னிலையிலும் உண்மையை ஒத்துக் கொண்டார்.

பாக்கியாவின் மாஸ் பேச்சு
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாக்யா அமிர்தாவை கூட்டிக்கொண்டு வந்து எழில் இந்த பெண்ணை தான் விரும்பினான் என்று சொல்ல மண்டபத்தில் இருந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது ஈஸ்வரி உனக்கு என்ன பைத்தியமா? எழில் விருப்பப்பட்டு தானே இந்த கல்யாணம் நடக்குது என்று கூறுகிறார். அப்படியே அமிர்தா குடும்பத்தினரிடம் நான் அன்னைக்கே உங்க வீட்டுக்கு வந்து என்ன சொன்னேன். இதெல்லாம் செட்டாகாது எங்க பையனுக்கு உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டுதானே வந்தேன். இப்ப என்ன எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுகிறீர்களா? என கேட்க அதற்கு பாக்கியா அவங்களை எதுவும் சொல்லாதீங்க நான் தான் கிளம்பி வர சொன்னேன் என்று கூறுகிறார்.

வர்ஷினி அப்பாவின் மிரட்டல்
அப்போது இதுக்கு மேலயும் பேச என்ன இருக்கு வா வர்ஷினி போகலாம் இன்னும் அவமான பட முடியாது என்று வர்ஷினியின் அப்பா சொல்கிறார். அப்போது ஈஸ்வரி கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க, கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும். எழில் வர்ஷினி கழுத்தில்தான் தாலி கட்டுவான் என்று சொல்கிறார். ஆனால் பாக்யா நீங்க ஒரு நாளுக்காக பாக்கறீங்க ஆனா இந்த கல்யாணம் மட்டும் நடந்தா ரெண்டு பேர் வாழ்க்கையுமே முழுக்க சந்தோஷமா இருக்க முடியாது என்று கூறுகிறார்.

எழிலுடைய அமைதி
பிறகு ஒரு பெண்ணை மனசுல நினைச்சுக்கிட்டு என் பையனால உங்க பொண்ணோட எப்படி சந்தோஷமாக வாழ முடியும் என்று கேட்கிறார். எழிலைக் கூட்டி வந்து இப்பவாவது சொல்லு உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு என நிற்க வைத்து கேட்கிறார். ஆனால் எழில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது ஈஸ்வரி சொல்லுடா எனக்கு வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லு என்று சொல்ல, அப்பவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார்.

பாக்கியாவின் கேள்வி
அப்போது அமைதியாக இருந்த எழிலிடம் பாக்யா பணத்துக்காக ஒரு பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்குவியா? நம்பிக்கை துரோகத்தால் நம்ம வீட்ல என்ன பிரச்சனை எல்லாம் நடந்தது என்று உனக்கு தெரியாதா? ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு இப்படி நிற்கதியாக நிற்க வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் பண்ணிக்குவியா? நான் தானே உன்னை வளர்த்தேன். உன்னால எப்படி இப்படி ஒரு முடிவெடுக்க முடிந்தது என்று பாக்யா கேட்க? எழில் அமிர்தாவின் பக்கம் போய் நின்று நான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் இந்த முடிவை எடுத்தேன். நான் எடுக்கிற முடிவு சரியா? தவறா? என்று யோசிக்காமல் தான் எடுத்தேன். நான் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று வாக்கு கொடுத்து இருந்தேன் என்று அனைவரும் முன்னிலையிலும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கோபியின் கேள்வி
இதைப் பார்த்த வர்ஷினியின் அப்பா வர்ஷினியை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது என்னுடைய பெண்ணை நீ கல்யாணம் பண்ணவில்லை என்றால் ரொம்ப வாழ்க்கையில் வேதனைப்படுவாய், இனி ஒரு படம் கூட உன்னால் பண்ண முடியாது இனி தான் உன் வாழ்க்கையில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறாய் என்று பேசிவிட்டு செல்கிறார். பாக்யா கல்யாணத்துக்கு ஆன செலவை நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று வாக்கு கொடுக்கிறார் .அப்போது கோபி எல்லோரும் பிடித்தவர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் சந்தோஷமா வாழ்றாங்களா? கிடைச்ச வாழ்க்கையை சந்தோஷமாக வாழவில்லையா? இப்போ உன்னால இந்த கல்யாணம் நின்னு போச்சு, அவனுடைய கேரியரும் நாசமா போச்சு, இப்போ என்ன பண்ண போற? என்று பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications