அந்த வார்த்தை கூறி பாக்யாவை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி.. அதிர்ச்சியான கோபி.. எழிலின் திடீர் சப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பார்லர் சென்றதை அறிந்து ஈஸ்வரி பாக்யாவை அசிங்கப்படுத்துகிறார்.

கோபி ராதிகா பியூட்டி பார்லரில் 16 ஆயிரம் செலவு செய்ததை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

ஈஸ்வரி பாக்கியவாவை திட்டுவதால் எழில் பாக்யாவுக்கு ஆதரவாக ஈஸ்வரியிடம் கேள்வி கேட்கிறார்.

தன்னை ரசிக்கும் பாக்கியா

தன்னை ரசிக்கும் பாக்கியா

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் வீட்டுக்கு வந்த பாக்கியா ரூமுக்கு சென்று கண்ணாடியில் தன்னுடைய அழகை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஜெனி பிடித்திருக்கிறதா? என கேட்க இதுவரைக்கும் நான் எப்படி பார்லர் போனது எல்லாம் கிடையாது. என்னையே அழகாக பார்க்க எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கிறது என கூறுகிறார். இதுவரைக்கும் நான் இப்படி கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து பார்த்தது கிடையாது. அவர் பக்கத்துல பலமுறை தான் தலை வாராமல் போய் உட்கார்ந்து இருக்கிறேன். மாவு அரைத்த கையோடு போய் உட்கார்ந்து இருக்கிறேன். வெங்காயம் கட் பண்ணி விட்டு அதே வாசனையோடு நான் அருகில் இருந்து இருக்கிறேன். அவர் ஒரு மாதிரி பார்ப்பாரு என பாக்யா சொல்லி வருத்தப்பட ஜெனி உங்களுக்கு புடிச்ச மாதிரி இருங்க என அறிவுரை கூறுகிறார்.

கோபிக்கு கிடைக்கும் அதிர்ச்சி

கோபிக்கு கிடைக்கும் அதிர்ச்சி

அடுத்ததாக கோபி வீட்டில் இருக்கும்போது அவருடைய போனில் 16 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக மெசேஜ் வர அதை பார்த்து அதிர்ச்சி ஆகி சத்தம் போடுகிறார். கோபி போட்ட சத்தத்தில் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த மயூ அலறி எழுந்து கொள்கிறார்.பிறகு கோபி ராதிகாவை கூப்பிட்டு என்னுடைய டெபிட் கார்ட் உன்னிடம் பத்திரமாக இருக்கா பாரு, யாரோ அதை யூஸ் பண்ணுகிறார்கள் 16,000 போய் இருக்கிறது என சொல்ல நான் தான் பார்லர்ல ஸ்பை பண்ணேன் என சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.

பார்லர் பஞ்சாயத்து

பார்லர் பஞ்சாயத்து

எனது பார்லருக்கு 16,000 என கோபி கேட்க மாசத்துக்கு ஒரு தடவை தானே அதனால என்ன இருக்கு என ராதிகா சொல்ல, அப்படியா என எதுவும் பேச முடியாமல் திகைத்தபடியே முடித்துக் கொண்டு நிற்கிறார் கோபி. நீ தானே யூஸ் பண்ண? நீதானே யூஸ் பண்ண ஒன்னும் பிரச்சனை இல்லை என்று வெளியே நடித்துக் கொண்டு சமாளித்து முடிக்கிறார். நான் சலூனுக்கு போனா 200 ரூபாய் தான் செலவாகுது, 16 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு செலவாகுதா? என கேட்க என்னவெல்லாம் பண்றோம் என்பதை சொல்லி, செலவாகத்தான் செய்யும் என ராதிகா பேசுகிறார். அடுத்து பாக்யா வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது செழியன் பாக்யாவை பார்த்து என்னமோ இன்னைக்கு வித்தியாசமாக இருக்க ஹேர்கட் பண்ணியா? என கேட்க அதெல்லாம் இல்லை என சொல்லி சமாளித்து விடுகிறார்.

 என்னவெல்லாம் பேசுறாங்க

என்னவெல்லாம் பேசுறாங்க

அடுத்து எல்லோரும் சாப்பிட்டு எழுந்து சென்றதும் பாக்கியா எழில் இடம் பியூட்டி பார்லர் சென்று வந்த விஷயத்தையும் முடிவெட்டிய விஷயத்தையும் சொல்லி எழிலிடம் காட்டிக் கொண்டிருக்க, அப்போது ஈஸ்வரி பார்த்து விடுகிறார். வீட்டில் என்ன பிரச்சனை போய்கிட்டு இருக்கு உனக்கு விவாகரத்து ஆயிடுச்சு, உன் பொண்ணு உன்னை விட்டு அப்பாவோட போயிருக்கா, இந்த நேரத்துல உனக்கு இதெல்லாம் தேவையா? உனக்கு வெட்கமா இல்லையா? என சொல்ல பாக்கியாகண்ணீர் விட்டு அழுகிறார். எழில் பாக்யாவுக்காக, அப்பா அம்மாவ விட்டுட்டு போனதையும் இனியா இங்கு இல்லாததையும் இதோடு எதற்கு முடிச்சு போட்டு பேசுறீங்க என்று பாக்கியாவிற்காக சப்போர்ட் பண்ணி பேச ஈஸ்வரி என்னமோ பண்ணுங்க என கோபப்பட்டு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+