வெறுப்பேற்றி மாஸ் காட்டிய பாக்கியா.. எழில் செய்த செயல்.. கோபத்தில் கோபி எடுத்த முடிவு!?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தன்னை அடிக்கடி நக்கல் செய்யும் கோபி இடம் பாக்கியா ஸ்டைலை காட்டி வெறுப்பேத்த கோபி திகைத்துப் போய் விடுகிறார்.
வீட்டில் இருந்த நேம் போர்டை மாற்றி பாக்கியலட்சுமியின் பெயரை வைத்த எழிலால் கோபி கோபத்தில் இருக்கிறார்.
எழில் செய்த செயலால் கோபி வீட்டிற்கு சென்று பாக்யாவிடம் சண்டை இடுகிறார்.

மாஸ் காட்டிய பாக்கியா
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி வாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, அங்கே பாக்யாவும் செல்வியும் இருவரும் நடந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் இருவரையும் நக்கலாக கோபி பேசி விட்டு செல்கிறார். அடுத்து கோபி ஒரு இடத்தில் நின்று எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கும் போது அங்கே வரும் பாக்கியா தன்னுடைய தலை முடியை அவிழ்த்துவிட்டு ஸ்டைலாக நடந்து கோபியை வெறுப்பேத்துகிறார். கோபி பாக்யாவை பார்த்து அதிர்ச்சியாகி அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறார். அவர் செல்வதை பார்த்த செல்வியும் பாக்கியாவும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

கோபிக்கு கொஞ்சம் பொறாமை தான்
அடுத்து கோபி தன்னுடைய நண்பனை பார்த்து சந்தித்து பேசிக் கொண்டிருக்கும்போது, பாக்கியா ரொம்ப சந்தோஷமாக இருக்கா, என் கூட இருக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்ட மாதிரியும், இப்போ என்னமோ அவ ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரியும் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் என்னை வெறுப்பேற்றும் விதமாக செய்கிறார் என புலம்பி கொண்டிருக்கிறார். அடுத்ததாக எழில் வீட்டின் வாசலில் இருந்து கழட்டி போட்ட கோபியின் பெயருக்கு பதிலாக பாக்கியலட்சுமி என்ற பெயர் பலகையை மாட்ட அதை பார்த்து தாத்தா ராமமூர்த்தியும் சந்தோஷப்படுகின்றார். இவர்கள் இருவரும் நேம் போர்ட் முன்னாடி நின்றபடியே செல்பி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்பாவிடம் கோபம்
பிறகு வீட்டிற்கு வரும் கோபி காம்பவுண்டில் மாட்டப்பட்டிருக்கும் புது நேம் கோட்டை பார்த்து கடுப்பாகி வீட்டிற்கு சென்று அப்பாவிடம் சண்டை இடுகிறார். நீங்க எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி பண்றீங்களா? எத்தனை நாளைக்கு உங்க ஆட்டோம்னு பார்க்கிறேன் நான் அந்த வீட்டில் பிரச்சனை பண்ணாம இருப்பதற்கு காரணம் என்னுடைய அம்மா அங்க இருக்காங்க என்கிற காரணத்தினால் தான் ஆனால் நீங்க ரொம்ப பண்றீங்க என்று கோபத்தோடு பேசிவிட்டு செல்ல ராதிகா கோபியை சமாதானம் செய்கிறார்.

இது எல்லாம் சரியா கோபி
அடுத்ததாக பாக்யா வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் கோபி சண்டை போடுகிறார். இந்த வீடு என் பேர்ல இருக்கு, லோன் கட்டி நான் வாங்கி வச்சிருக்கேன். பிளான் பண்ணி என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டு நான் உனக்காக ஒன்றும் இந்த வீட்டை விட்டு வெளியே போகல, என் அம்மாவுக்கும் குழந்தைகளுக்காக தான் நான் போனேன். அப்படியே இந்த வீட்டை உன் பெயருக்கு ஆட்டைய போட்டு விடலாம் என்று பார்க்கிறாயா? இது உனக்கு வெட்கமா இல்லையா? என் பேர தூக்கிக்கிட்டு உன் பெயரை வச்சிருக்க என்று பாக்கியாவிடம் கோபமாக பேச, அதான் வீட்டை விட்டு போனீங்களா எதற்காக மறுபடியும் இங்கே வந்து ஏதாவது சொல்லி பிரச்சனை பண்ணிட்டே இருக்கீங்க என பாக்கியா கேட்க பாக்யாவை மேலும் கோபி திட்டுகிறார். பாக்யா என்ன நடந்தது என எதுவும் தெரியாமல் முழிக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications