கோபியின் ஒரு மாத கெடு.. வில்லியாக மாறிய ஈஸ்வரி.. வெளிச்சத்துக்கு வந்த செழியன் உண்மை முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தன்னுடைய வீட்டை கோபி விற்க போகிறார் என சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

தன்னுடைய வீட்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு மாத கெடு கொடுக்கிறேன் அதற்கு 70 லட்சம் பணம் வேண்டும் என்று கோபி கூறுகிறார்.

கோபியின் முடிவு

கோபியின் முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், வீட்டுக்கு வந்த கோபி இந்த வீட்டை விற்க போவதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி இந்த வீட்டை விற்றா? நாங்க எங்க போவோம் என்று கேட்க, அதற்கு நான் உங்களுக்கு இருக்கிறேன் அம்மா, உங்களை நல்லபடியா பார்த்துக்கொள்வேன் என்று சொல்ல ஈஸ்வரி நடக்கிற விஷயமா பேசு என்று கோபத்தோடு பேசுகிறார். பின்பு ராமமூர்த்தி மனசாட்சியே இல்லையா? உனக்கு என்று கேட்க உங்களுக்கு மனசாட்சி இருக்குல அது போதும் என்று கோபி நக்கல் அடிக்கிறார்.

ஒரு மாதம் கெடு

ஒரு மாதம் கெடு

அடுத்து கோபி இந்த வீடு என்னுடைய பெயரில் தான் இருக்கிறது. நான் விற்றா, நீங்க என்ன கேஸா போட போறீங்க என கேட்க நான் இந்த வீட்டை விற்கப் போறேன். உங்களுக்கு வேண்டுமென்றால் இந்த வீட்டை நீங்கள் வாங்கிக்கோங்க என்று சொல்கிறார். பிறகு பாக்கியாவை பார்த்து அடுத்தவர் சொத்தை ஆட்டைய போடலாம் என்று பார்த்தியா? அது நடக்காது நடக்க விடமாட்டேன் என்று கூறுகிறார். ஒரு மாசம் டைம் அதுக்குள்ள இந்த வீட்டோட மொத்த பணத்தையும் கொடுத்துட்டு இந்த வீட்டை உன் பெயர் மாத்திக்கோ, நீ போர்ட்வை அல்லது பேனர் அதை பத்தி யாரும் கேட்க போறது கிடையாது. ஆனா ஒரு மாதம் தான் டைம் முடிஞ்சா பணத்தை கொடுத்து வீட்டை வாங்கு இல்லன்னா வீட்டை காலி பண்ணிக்கிட்டு போயிட்டே இரு என்று கூறுகிறார்.

எழிலின் சவால்

எழிலின் சவால்

கோபியின் பேச்சை கேட்ட எழில், நீங்க சொல்ற மாதிரி ஒரு மாசத்துல இந்த வீட்டை நாங்களே வாங்கிக்கிறோம் என சவால் விடுகிறார். அதற்கு கோபி நான் வாங்கும் போது செலவான பணத்தை கொடுக்கக் கூடாது. இன்னையோட மார்க்கெட் ரேட் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்ல அப்போது ராமமூர்த்தி இதுல என்னோட பங்கும் இருக்கு என சொல்ல கரெக்ட் நீங்க கொடுத்த பங்கு 30% போக மீதி எனக்கு 70 லட்சம் கொடுத்துட்டு இந்த வீட்டை வாங்கிக்கோங்க என கராராக பேசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

ராதிகாவின் எதிர்பார்க்காத பதில்

ராதிகாவின் எதிர்பார்க்காத பதில்

நீங்க சொன்ன மாதிரி ஒரு மாசத்துல இந்த வீட்டை வாங்கிக்கிறோம் என எழில் சவால் விட்டதும், கோபி அங்கிருந்து கிளம்புகிறார். ராதிகாவிடம் கோபி நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் ராமமூர்த்தி நீ நல்லாவே இருக்க மாட்ட என்ன சாபம் விட, கோபி எப்போதும் போல நக்கல் செய்கிறார். அதற்கு ராதிகா அவரும் எவ்வளவு நாள்தான் பொறுமையா இருப்பாரு, அவர் உங்களையும் பொன்னையும் நல்லா தான் பார்க்கிறார். அதே மாதிரி அந்த குடும்பத்தையும் நல்லா தானே பார்த்துக்கிட்டு இருப்பார் .ஆனால் அங்க நடக்கிற பிரச்சனைகள் அவரை இப்படி எல்லாம் பண்ண வைக்கிறது. கடவுள் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காரு என சொல்கிறார்.

வெளியே வரும் உண்மை முகம்

வெளியே வரும் உண்மை முகம்

அதே நேரத்தில் ஈஸ்வரி எழிலை திட்டிக் கொண்டிருக்கிறார். அத்தனை பிரச்சனைக்கும் காரணம் நீதான் என்று பேசிக் கொண்டிருக்க பாக்கியா நியாயமே இல்லாமல் யார் பண்ணுன தப்புக்கு யாரை திட்டிக்கிட்டு இருக்கீங்க அத்தை என கேள்வி கேட்கிறார். உருப்படாத புள்ள அவனுக்கு சப்போர்ட் பண்ற அம்மா, என்னமோ போங்க என்னை திட்டி விட்டு உள்ளே செல்கிறார். பிறகு பாக்கியா எழிலுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் மேலே மொபைல் போனில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்க, அங்கே வரும் ஜெனி இந்த வீட்டுக்கு நீ என்ன பண்ண போற எனக்கு கேட்க, நான் என்ன பண்ணனும்? நான் வச்சுக்கிட்டு இருக்கிற பணத்தை எல்லாம் தூக்கி அப்பாகிட்ட கொடுக்க நான் என்னை இளிச்சவாயனா? என சொல்ல ஜெனி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+