திருமண விஷயத்தில் எழிலுக்கு எதிராக பேசிய தாத்தா... கடைசி நேரத்தில் பாக்கியா கொடுத்த பதிலடி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை காதலிக்கும் விஷயம் அவருடைய தாத்தாவுக்கு தெரிகிறது.
அமிர்தாவுக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறது. அமிர்தாவுடைய குழந்தைக்கு அப்பா ஆகும் வயது உனக்கு இல்லை. அதனால் அமிர்தாவை மறந்துவிடு என்று எழில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் அவருடைய தாத்தா.
இந்த நிலையில் முதல் முறையாக எழிலுக்கு ஆதரவாக ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியை பாக்யா எதிர்த்து பேசுகிறார்.

காதலை எதிர்க்கும் குடும்பம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் எழில் நான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க போகிறேன் என அவங்களுக்கும் அவங்க அப்பா அம்மாவுக்கும் வாக்கு கொடுத்திருக்கிறேன் என சொல்ல, ஈஸ்வரி நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அது நடக்காது என கூறுகிறார். உன் காதலை எல்லாம் இதோடு மறந்திடு நான் யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும் என எச்சரிக்கிறார். செழியனும் எழிலுக்கு எதிராக பேசுகிறார்.

கோபியின் மிரட்டல்
பிறகு பாக்யா கடைக்கு சென்று வரும்போது செல்வி அவரிடம் பேசிக் கொண்டு வருகிறார். அப்போது செழியனும் காதலித்து தானே திருமணம் செய்து கொண்டார். ஆனால் எழில் விஷயத்தில் மட்டும் செழியன் எப்படி நடந்து கொள்கிறார். நீ செழியனுக்கு அப்போவும் சப்போர்ட் பண்ணுனா தானே? எனக்கு இப்போது உங்க வீட்டில் வேலைக்கு வரவே பிடிக்கவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி வழியில் பார்த்து கூடிய சீக்கிரம் வீட்டை காலி பண்ண வேண்டியது இருக்கும். என் குடும்பத்தை என்னால பார்த்துக்க முடியும் நீயும் உன் செல்ல புள்ளையும் என்ன பண்ணனும்னு இப்பவே முடிவெடுத்துக்கோங்க என மிரட்டி விட்டு செல்கிறார்.

எதிர்த்து பேசும் பாக்கியா
அடுத்தது ராமமூர்த்தி வீட்டுக்கு வர ஈஸ்வரி நடந்த விஷயங்களை சொல்ல பாக்கியா சரியாக அப்போது அங்கே வருகிறார். பிறகு தாத்தா எழிலை கூப்பிடுகிறார். எழில் கீழே வந்ததும் இதெல்லாம் நமக்கு செட்டாகாது அமிர்தாவை மறந்துவிடு என சொல்ல ஈஸ்வரி சொல்றதை நல்லா கேட்டுக்க என கூறுகிறார். அதற்கு எழில் இனி நானும் இந்த வீட்டில் அமிர்தாவை பற்றி பேசமாட்டேன். அதே மாதிரி நீங்களும் வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க என்று பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார். பிறகு பாக்கியா ஈஸ்வரியிடம் அவன் தான் இனி அமிர்தாவை பற்றி பேச மாட்டேன்னு சொல்லிட்டான்ல. அதே மாதிரி அவனுக்கு பிடிக்காத வாழ்க்கையை அவனுக்கு அமைச்சு கொடுக்க வேண்டாம். உங்க பையனுக்கு பிடிக்காத மனைவியா நான் இங்க வந்து இப்ப வரைக்கும் பிடிக்காத வாழ்க்கை தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். அதே வலி என் பையனுக்கும் வேண்டாம் என சொல்ல ஈஸ்வரியும், ராமமூர்த்தியும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இனியாவுக்கு கிடைத்த அதிர்ச்சி
பிறகு பாக்கியா தனியாக அமர்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது வீட்டுக்கு வரும் எழில் எவ்வளவு நாள் ஆனாலும் நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என சொல்கிறார். இந்த வீட்டு பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் நீ உன் வேலையை பாரு என பாக்கியா சொல்ல, என்னால் அப்படி இருக்க முடியாது. இந்த வீட்டை நான் மீட்டெடுத்து தான் ஆகணும் என சொல்கிறார். அடுத்து ராமமூர்த்தி கோபியிடம் உன்னால வீட்டில் எல்லோரும் நிம்மதியை இழந்து இருக்காங்க என சண்டை போடுகிறார். அதற்கு கோபி இதற்கு நான் பொறுப்பல்ல வேண்டுமென்றால் எழிலையும் அவனுடைய அம்மாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்க என்று திமிராக பேசிக்கொண்டு கிளம்புகிறார். இதை பார்த்து இனியா அதிர்ச்சியாகி இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications