விஜய்யால் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து பாதியில் விலகிய பாக்கியலட்சுமி ஹீரோ..விஜயின் அன்பு பெருசுதான்
சென்னை: மாஸ்டர் திரைப்படத்திலிருந்து பாதியில் விலகிய பாக்கியலட்சுமி ஹீரோ அதற்கு காரணம் விஜய்தான் என்று கூறியுள்ளார்.
விஜய் தன் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்த்து மெய்சிலிர்த்து போய் இருக்கிறாராம்.

சின்னத்திரை கதாநாயகன்
திரைத் துறையில் பெரிய அளவில் முன்னணியில் இருக்கும் விஜய் ஒரு அறிமுக நடிகராக அறிமுகமான நடிகரிடம் காட்டிய அன்புதான் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் விஜே விஷால் பலருக்கும் அறிமுகம்தான். இவர் விஜேவாக இருந்து தற்போது ஹீரோவாக மாறி இருக்கிறார். விஷால் முதல்முதலாக விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில்தான் கலந்துகொண்டார். அதற்கு பிறகு கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலின் இவருடைய கேரக்டர் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்துள்ளார். இதிலெல்லாம் சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அம்மா பிள்ளை எழில்
பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகனாக இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் பல பெண்களின் மனதை கவர்ந்த கேரக்டராக இருந்துவருகிறார். தன்னுடைய அம்மாவிற்கு இவர் கொடுக்கும் மரியாதையை பார்த்து இவர் மீது பலருக்கு மரியாத கூடியுள்ளது. அம்மாவின் செல்லமகனாக இருக்கும் இவர் எடுக்கும் அதிரடியான முடிவுகளால் அம்மாவின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்துக் கொண்டு இருக்கிறதாம். அதனாலேயே பல ரசிகர்கள் இவருக்கு ரசிகர்கள் மாறிவிட்டார்கள்.

தள்ளிப்போன மாஸ்டர் பட வாய்ப்பு
விஜய் நடிப்பில் பெரிய அளவில் வெற்றி அடைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவரும் அந்த திரைப்படத்தில் பாதி வரைக்கும் நடித்துள்ளாராம். ஆனால் இவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து நடிக்க முடியவில்லையாம். அதனால் பார்த்த விஜய் இவரை திட்டி அனுப்பி இருக்கிறார். அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் ஆனால் முதலில் உடம்பு முக்கியம். அதனால் அதனை பார் என்று அறிவுரை கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு வந்து ஒரு சில நாட்கள் கழித்தும் கூட இவருடைய உடல் நிலை குறித்து போன் செய்து விசாரித்து உள்ளாராம். அதை இப்போது நினைத்தாலும் பெருமையாக உள்ளது என்று விஷால் கூறியுள்ளார்.

விஜய்யின் உருக வைத்த அன்பு
தன்னைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாவிட்டாலும் விஜய் தனக்கு கீழே அறிமுகமான புது நடிகரிடம் கொண்ட அன்பு பலரையும் கவர்ந்துள்ளது. ஒரு சிலர் புகழின் உச்சத்தில் இருக்கும் போது தனக்கு கீழே இருக்கும் நடிகர்களை கண்டுகொள்வதில்லை. ஆனால் விஜய் எப்போதும் அப்படி கிடையாது என்று விஷால் உருக்கமாக சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்று தன்னுடைய ஆசையும் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் விஷாலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications