முகத்தில் மயக்கப் பொடி பூசி.. சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. மிரட்டிய 4 பேர் கும்பல்!
சென்னை: திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜக்ட் செய்ய வந்த கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவியின் புகாரில் உள்ள உண்மைத்தன்மை தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மதுராந்தகம் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம், கிருஷ்ணகிரி பெண் குழந்தை வன்கொடுமை உள்ளிட்டவை பேசுபொருளாகியது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜக்ட் செய்ய வந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி திருச்சியில் இருந்து பிராஜக்ட் பணிக்காக அந்த மாணவி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த சில நாட்களிலேயே மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப் மூலமாக சிலர் அனுப்பி இருக்கின்றனர்.
அடையாறில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவி CLRIக்கு சென்ற மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி இருக்கிறது. இதன்பின் அந்த கும்பல் மாணவியின் முகத்தில் மயக்கப் பொடி பூசியதாகவும், ஒரு மணி நேரத்திற்கு பின் வேறு இடத்தில் இறக்கிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி உடல்நிலையில் மாற்றத்தை உணர்ந்துள்ளார்.
இதனால் கடந்த 10ஆம் தேதி மாலை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்பின் மாணவிக்கு என்ன நடந்தது என்ற அதிர்ச்சி தெரிய வந்துள்ளது. இதன்பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வந்த பின், மீண்டும் அந்த கும்பல் காரில் கடத்தி இருக்கிறது.
அப்போது போலீசாரிடம் சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மீண்டும் காரில் கடத்தி சென்று வன்கொடுமை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆண் நண்பரிடம் நடந்ததை கூறி கதறி அழுதிருக்கிறார். இதன்பின் கல்லூரி மாணவி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாணவி புகார் தொடர்பான உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications