பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி
சென்னை: நேற்று நள்ளிரவு 2 மணி.. வேளச்சேரி மெயின் ரோட்டில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசை. கண்ணை மூடினால் 2021-ன் கொரோனா லாக்டவுன் நாட்கள் நினைவுக்கு வந்து செல்லும் அளவிற்கு ஒரு பதற்றம். "நாளைக்கு பெட்ரோல் கிடைக்காது" என்கிற வாட்ஸ்அப் மெசேஜ்களால் மக்கள் தங்கள் வாகனங்களின் டேங்குகளை நிரப்ப முண்டியடிக்கிறார்கள்.
அரசு தரப்பில் "25 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளது" என்று உறுதி அளித்தாலும், கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. குறிப்பாக, வணிக ரீதியான LPG சிலிண்டர்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் ஹோட்டல் தொழிலை மட்டுமல்ல, நமது மொபைல் இணைப்பையும் ஆட்டங்காணச் செய்துள்ளன.

அதாவது செல்போன் டவர்கள் ஜெனரேட்டர் மூலம் இயங்குகின்றன. இதற்கு பெட்ரோல் , டீசல் போட வேண்டும். அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் டவர்கள் இயங்காது. இதனால் சிக்னல் பிரச்சனை ஏற்படும். டவர் அத்தியாவசியம் என்றாலும் அதை விட பாதுகாப்பு வாகனங்கள் அரசு வாகனங்கள், மருத்துவமனைகள் இதெல்லாம் அத்தியாவசியம். இதனால் அங்கேதான் முதலில் பெட்ரோல் டீசல் வழங்கப்படும். அதற்கு பின்பே டவர்களுக்கு வழங்கப்படும். அப்படி இருக்க டவர் ஜெனெரேட்டர்கள் பெட்ரோல், டீசல் இல்லாமல் பாதிக்க நேரிடும்.
டவர்கள் ஏன் முடங்கும் அபாயம்?
ஆனால் நம்மில் பலரும் நினைப்பது போல, செல்போன் டவர்கள் மின்சாரத்தால் மட்டுமே இயங்குவதில்லை.
மின்சாரம் (TANGEDCO): கரண்ட் இருக்கும் வரை பிரச்சனை இல்லை.
பேட்டரிகள்: மின்சாரம் துண்டிக்கப்பட்டால், 4 முதல் 8 மணி நேரம் வரை இவை டவரை இயக்கும்.
டீசல் ஜெனரேட்டர்கள் (DG Sets): நீண்ட நேர மின் தடையின் போது, இவைதான் டவர்களின் உயிர்நாடி.
தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் வணிக எரிவாயு விநியோக முடக்கம் காரணமாக, டவர்களை பராமரிக்கும் நிறுவனங்கள் (Tower Infrastructure Companies) பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றன. DIPA (Digital Infrastructure Providers Association) அமைப்பு, மத்திய அரசுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில், "எரிபொருள் கிடைக்கவில்லை என்றால் மொபைல் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்படலாம்" என எச்சரித்துள்ளது.
பிராட்பேண்ட் மட்டுமே இயங்குமா?
"டவர் வேலை செய்யவில்லை என்றால் வைஃபை (Broadband) வேலை செய்யுமா?" என்பதுதான் பலரின் கேள்வி.
பிராட்பேண்ட் இணைப்புகள் பெரிய தரவு மையங்களில் (Data Centers) இருந்து வருவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் பெரிய அளவிலான எரிபொருள் கையிருப்பு இருக்கும்.
ஆனால், உங்கள் தெருமுனையில் இருக்கும் அந்தச் சிறிய 'டிஸ்ட்ரிபியூஷன் பாக்ஸ்' (Distribution Box) இயங்க மின்சாரம் தேவை. மின்சார வாரியம் தடையின்றி மின்சாரம் வழங்கினால் மட்டுமே பிராட்பேண்ட் முழுமையாகக் கைக்கொடுக்கும்.
அடுத்தது என்ன?
தற்போதைய சூழலில், தொலைத்தொடர்புத் துறையை 'அத்தியாவசிய சேவை' (Essential Service) பட்டியலில் சேர்த்து, டவர் ஜெனரேட்டர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டீசல் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதுவரை, தேவையில்லாத டேட்டா பயன்பாட்டைக் குறைப்பதும், போலி வதந்திகளைப் பரப்பாமல் இருப்பதும் மட்டுமே ஒரு பொறுப்பான குடிமகனாக நாம் செய்ய வேண்டியது.
-
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்!












Click it and Unblock the Notifications