கோபிக்கு ராதிகா கொடுத்த பெரிய அதிர்ச்சி... ஈஸ்வரி இடம் பாக்கியா பொய் சொல்லி செய்யும் செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இன்று தான் சமைக்கப் போவதில்லை வெளியே கடையில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் நான் பியூட்டி பார்லர் போக போகிறேன் என ராதிகா கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

முதல் முறையாக பாக்கியாவை ஜெனி பியூட்டி பார்லர் கூட்டி போகிறார்.

பியூட்டி பார்லரில் இருக்கும் ராதிகா தன்னுடைய குடும்ப வாழ்க்கையை பற்றி உளறி விட்டார்.

கோபியின் வாக்குவாதம்

கோபியின் வாக்குவாதம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எழில் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கோபமாக தன்னுடைய அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் நினைச்சா இப்பவே அந்த வீட்டுக்குள்ள வந்து எல்லாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும். இத்தனை வருஷமா அந்த மொத்த குடும்பத்தையும் முதுகு மேல போட்டு சுமந்து இருக்கேன். எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கிறேன் என்று தன்னைத் தியாகி ஆக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

பியூட்டி பார்லர் செல்லும் பாக்யா

பியூட்டி பார்லர் செல்லும் பாக்யா

அடுத்ததாக பாக்கியா சோபாவில் உட்கார்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி நீ எத்தனை வருஷமா சமையல் செஞ்சுகிட்டு இருக்க என கேட்க நாம் ஒருநாள் சமைக்கா விட்டாலும் வீட்டில் குழந்தைகள் பட்டினியாக தானே இருக்கும் என்று பாக்கியா கூற, அப்போது பாக்யாவின் தலைமுடியில் வெள்ளை முடி வந்திருப்பதை பார்த்து என்ன அக்கா உனக்கு வெள்ளை முடி வந்துடுச்சு என சொல்ல, பாக்கியா எனக்கு வயசு ஒன்னும் ஆகல 43 வயசு தான் ஆகுது அதற்குள் வந்துவிட்டது என சொல்ல செல்வி இதைத்தான் பல வருஷமா சொல்லிட்டு இருக்க என கிண்டல் செய்கிறார். பிறகு பாக்யா வெள்ளை முடிக்கு கருப்பு மை தடவிக் கொண்டிருக்க அப்போது அங்கே வரும் ஜெனி பியூட்டி பார்லர் போகலாம் என சொல்ல பாக்கியா வேண்டாம் என மறுத்தாலும் அதெல்லாம் ஒன்னும் பெரிய செலவு இல்லை வாங்க போகலாம் என அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் செய்கிறேன் என்று கூறி செல்கிறார். அப்போது அங்கே ஈஸ்வரி வர எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க ஆபீசுக்கு செல்கிறோம் என்று கூறுகின்றார். இன்னைக்கு ஒரு நாள் கூட வீட்டில் இருக்கக் கூடாதா என்று ஈஸ்வரி கேட்க ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் சாப்பிடுவாங்களா? அன்னைக்கு போகணும் என்று கூறிக்கொண்டு செல்வி, ஜெனி,பாக்கியாவும் ஒரு பியூட்டி பார்லர் போகின்றனர்.

ராதிகா கொடுத்த அதிர்ச்சி

ராதிகா கொடுத்த அதிர்ச்சி

அதே நேரத்தில் ராதிகா வீட்டில் கோபி ராதிகாவிடம் வந்து இன்னைக்கு காலையில் டிபன் ஆர்டர் பண்ணியாச்சி, மதியம் என்ன ஸ்பெஷல் என்ன கேட்க, என்ன நீங்க ஃபோரிங்க் புருஷன் மாதிரி காலையில் என்ன சாப்பாடு மதியம் என்ன சாப்பாடு என்று கேட்டுகிட்டு இருக்கீங்க. இன்னைக்கு மதியமும் வெளியே பார்த்துக்கோங்க நான் பியூட்டி பார்லர் போக போறேன். வர்றதுக்கு மூணு மணி நேரம் ஆகும் மாசத்துக்கு ஒருமுறை போனால் தான் முகம் க்ளோவாக இருக்கும் வாஷிங்மெஷின்ல துணி போட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் எடுத்து காய போட்டு விடுங்க என்று சொல்லிட்டு கிளம்புகிறார். கோபிக்கு ராதிகா வேலை சொன்னதும் தாத்தா கிண்டல் அடித்து சிரிக்கிறார்.

வாழ்க்கையைப் பற்றி புலம்பும் ராதிகா

வாழ்க்கையைப் பற்றி புலம்பும் ராதிகா

அடுத்து ஜெனி, பாக்யாவை பியூட்டி பார்லர் கூட்டி வர அங்கே ஏற்கனவே ராதிகா முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டு பேசியல் செய்து கொண்டிருக்க, அப்போது வரும் ஜெனி இடம் பியூட்டி பார்லரில் இருக்கும் பெண்கள் நீங்க வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ராதிகா விடமும் நீங்கள் கல்யாணத்துக்கு பிறகு இங்கே வரவே இல்லையே என்று கேட்டுக் கொண்டிருக்க கல்யாணத்துக்கு பிறகு வேலை சரியாக இருக்கிறது. எப்போதும் வேலைதான் போய்க்கிட்டே இருக்கிறது என்று ராதிகா பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+