அப்பாவிடம் பயந்தபடி கெஞ்சும் கோபி..ஈஸ்வரியால் எழில் எடுத்த எதிர்பாராத முடிவு.. இனி வரபோவது இதுதான்!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவிற்க்கு டியூஷன் பீஸ் பாக்யா கொடுத்தது என்று அறிந்த கோபி பணத்தை கொடுக்க அதை ராமமூர்த்தி வாங்க மறுக்கிறார்.
ராதிகா வீட்டு செலவுக்காக 50,000 பணம் கேட்க கோபி அதிர்ச்சி ஆகிறார்.
ஈஸ்வரி எழிலிடம் வர்ஷினியின் அப்பாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு பேச சொல்ல எழில் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

டியூசனுக்கு கிளம்புங்க இனியா
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்க அப்போது அங்கே வரும் ராமமூர்த்தி இனியா இனி டியூசனுக்கு போறியா என கேட்க கோபி அதெல்லாம் வேண்டாம் நானே சொல்லிக் கொடுத்துக் கொள்கிறேன் என சொல்ல, ஏன் வேண்டாம் ரெண்டு தெரு தள்ளி தான் டியூஷன் சென்டர் இருக்கு, அங்கே சென்று இனி இனியா படித்துக் கொள்ளட்டும் என ராமமூர்த்தி கூற, அதற்கு ராதிகாவும் அவள் போறது சரிதான் இப்போது 12ஆம் வகுப்புக்கு போகிறாள். அது நல்ல முடிவு தான் என சொல்ல பிறகு கோபி அதற்கு சரி என்று கூறுகிறார்.

பாக்கியா கிட்ட கொடுங்க கோபி
பின்பு கோபி பீஸ் எவ்வளவு ஆச்சு என கேட்க ராமமூர்த்தி அதற்கு 12 ஆயிரம் என சொல்ல, கோபி அதை எடுத்து வந்து கொடுக்க, அப்படின்னா இதை எடுத்துட்டு போய் பாக்கியா கிட்ட கொடு, அவா தான் பீஸ் கட்டி டியூசன் சேர்த்து விட்டாள். இனியா கூட படிக்கிற பிள்ளைகளிடம் எந்த இடத்தில் நல்லா டியூஷன் எடுப்பாங்க என தெரிஞ்சி விசாரிச்சு அங்க அட்மிஷன் போட்டு இருக்காள் என்று சொன்னதும், கோபி அவ கிட்ட கொடுத்துடுங்க என சொல்லி பணத்தை கொடுக்க, அதை ராமமூர்த்தி வாங்க மறுக்கிறார். இனியாவிற்கு பாக்கியா செய்யும் செயல்கள் தெரிய வந்ததும் பாக்யாவின் மீது மேலும் பாசம் கூடுகிறது.

கோபி புராணத்தை ஆரம்பிச்சுட்டாங்க
அடுத்ததாக வீட்டில் பாக்கியா குடும்ப வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டு இருக்கிறார். அப்போது ஜெனி இடம் செலவு அதிகம் என சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த ஈஸ்வரி, கோபி இருக்கிற வரைக்கும் வீட்டு கஷ்டமே தெரியல. நான் எவ்வளவோ சொன்னேன் அந்த காண்ட்ராக்ட் வேண்டாம் என்று அப்போ அதை கேட்கல, இப்போ அதுக்கும் சேர்த்து கஷ்டப்படு, இனிமே தான் உனக்கு அவனோட அருமை புரியும் என திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இதுதான் சென்டிமென்ட் அட்டாக்
அடுத்ததாக எழில் ஈஸ்வரி இடம் சென்று பேச, ஈஸ்வரி வர்ஷினி ஓட அப்பா கிட்ட போய் மன்னிப்பு கேட்டு அவர் என்ன சொல்றாருன்னு அதுக்கு சரின்னு சொல்லி படம் பண்ண வேலையை பாரு என சொல்ல, எழில் அவர் போடுற கண்டிஷன் எல்லாம் என்னால் ஒத்துக்க முடியாது என்று சொல்ல, நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும். பாக்கியா அவ்வளவு கவலைப்படுறான்னு சொல்றியே உனக்கு அது பிரச்சனையா இல்லையா? பாக்கியாவா இல்ல உன்னுடைய ஈகோவான்னு நீ யோசி, நீ போய் வர்ஷினியோட அப்பா கிட்ட பேசினா இந்த படம் நடக்கும், பாக்யாவுக்கு உதவி செய்யலாம். இல்லனா பாக்கியாவை நீ நினைக்கலன்னு அர்த்தம் என்று கூறுகிறார். அதற்கு எழில் நான் வர்ஷினியின் அப்பாவிடம் சென்று மன்னிப்பு கேட்பது மட்டும் நடக்காது. நான் கண்டிப்பா படம் பண்ணுவேன் என சொல்லி வெளியேறுகிறார்.

இனி தான் இருக்கு கோபி உங்களுக்கு
அடுத்ததாக கோபி மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு தூக்க முடியாமல் தூக்கி வர, அதை பார்த்த ராமமூர்த்தி கிண்டல் அடிக்கிறார். அந்த வீட்டில் இருக்கும்போது ஒரு சின்ன பொருளை கூட தூக்கி வைத்தது கிடையாது என்று கலாய்க்கிறார். அடுத்து ராதிகா வீட்டிற்கு என்னென்ன செலவு இருக்கு என்னென்ன எவ்வளவு செலவு ஆகும் என கணக்கு பார்த்துக் கொண்டிருக்க, கோபி வந்து என்ன என்று கேட்க, வீட்டு வரவு செலவு கணக்கு பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, கோபி எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன். நீ எவ்வளவு வேணும் என்பதை மட்டும் சொல்லு என கேட்க, வீட்டு செலவுக்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என சொல்கிறார். இதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். அந்த வீட்டில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு என்னென்ன பேசுவா? இப்போ ஐம்பதாயிரம் என ராமமூர்த்தி கிண்டல் அடிக்க, அப்பா மெதுவா பேசுங்க ராதிகா காதுல விழுந்துட போகுது என கோபி பதற, ஏன் பயமா இருக்கா? இதுக்கு மேல தான் பயங்கரமா இருக்க போகுது என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications