பாக்யாவும், ராதிகாவும் "நடுத்தெருவில்" செய்த செயல்.. இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கலையே
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா மற்றும் ராதிகாவின் டான்ஸ்சை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
சீரியலில் இருவரும் வெவ்வேறு துருவங்களாக இருக்கும் நிலையில் சீரியலை தாண்டி இவர்களுடைய டான்ஸ் வீடியோ ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இரு வேறு துருவங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாக்கியாவாக சுசித்ரா ரெட்டி நடித்து வருகிறார். அதுபோல ராதிகாவாக ரேஷ்மா நடித்து வருகிறார். ரேஷ்மாவை ஏற்கனவே பலருக்கும் தெரியும் இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். குணச்சித்திர வேடத்திலும், வில்லியாகவும் பல சீரியல் களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமானவர்தான் ரேஷ்மா பசுபுலேட்டி இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மரியாதை இல்லையே
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மற்றும் ராதிகா இவர்கள் இருவரும் இருவேறு துருவங்கள் ஆக இருந்து வருகின்றனர் .ஆரம்பத்தில் பாக்யாவின் தோழியாக இருந்த ராதிகா இப்போது பாக்யாவின் கணவர் கோபியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர் .பாக்யாவை டீச்சர் என்று அழைத்துக் கொண்டு அவர் மீது நல்ல மரியாதையை வைத்திருந்த ராதிகா இப்போது பாக்கியாவின் மீது கொலவெறியில் இருக்கிறார் .பாக்கியாவுக்கு தான் அனைத்து மரியாதையும் கிடைக்கிறது தனக்கு இல்லையே என்று கோபத்தில் இருக்கிறார்.

உச்சி கொட்டும் ரசிகர்கள்
அதுபோல பாக்கியலட்சுமி சீரியலிலும் இப்போது பாக்யாவில் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக ராதிகாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் பாக்யாவின் கணவர் ராதிகாவை காதலித்து ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு இப்போது இனியா, பாக்யாவுடன் சண்டை இட்டு ராதிகா வீட்டுக்கு போய்விட்டார் .அதைத் தொடர்ந்து பாக்யாவின் மாமனாரும் ராதிகா வீட்டிற்கு சென்றிருக்கிறார். சீரியலில் இவர்களுடைய நடிப்பை பார்த்த ரசிகர்கள் பலர் ஐயோ பாக்கியா பாவம் என்று உச்சி கொட்டி வருகின்றனர். அதுபோல ராதிகாவை வசைப்பாடி வருகின்றனர்.

நடுத்தெருவில் குத்தாட்டம்
இந்த நிலையில் நாங்கள் நடிப்பை தாண்டி எங்களுக்குள் நட்பு மட்டும்தான் இருக்கிறது என்று இவர்கள் இருவரும் நடு ரோட்டில் போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இருவரும் புடவையில், "வலையை விரிச்சி பார்க்கனும்" என்கிற மாடலுக்கு டான்ஸ் போட்டு இருக்கின்றனர் .அதில் பாக்யாவின் வீட்டில் செல்வியாக இருக்கும் கம்பம் மீனாவும் இவர்களோடு ஆட்டம் போட்டு இருக்கிறார் .இவர்களுடைய இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு சீரியலில் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் நடுத்தெருவில் போட்ட குத்தாட்டத்தை பாருங்கள் என்று கேப்ஷனோடு பகிர்ந்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications