எதிர்நீச்சல் 2வில் என்ட்ரி ஆகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. மாற்றப்பட்ட கதை.. ஆனால் இது தப்புங்க!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மயூ கேரக்டரில் நடித்து வரும் பேபி ஷெரின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய கேரக்டரில் என்ட்ரி கொடுக்கிறார்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கும் பேபி ஷெரின் எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகியாக மாறி இருக்கிறார். அதுவும் அந்த சீரியலில் தர்ஷனுக்கு ஜோடியாக ஷெரின் அறிமுகம் ஆகி இருக்கிறார். அது குறித்து அதிகாரப்பூர்வமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் இது தப்பான உதாரணம் என்று இணையத்தில் அதிகமான எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. ஆனாலும் 700 எபிசோடுகளை தாண்டிய பிறகு அந்த சீரியலில் கதை வந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்தது. அதோடு அதிருப்தி அடைந்து ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக கொடுத்து வந்தனர். அதனால் திடீரென்று அந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
அதிலும் எதிர்நீச்சல் சீரியலில் மாரி முத்துவின் இறப்பிற்கு பிறகு அடிக்கடி கல்யாண காட்சிகளும் அது குறித்த சண்டைகளும் மட்டும் தான் இருந்தது. எதிர்நீச்சல் பெண்கள் எப்போது தான் எதிர்நீச்சல் போடுவார்கள் என்பது பலருடைய கேள்வியாகவும் இருந்தது. ஆனால் எல்லாவற்றிற்கும் விடை சொல்லாமல் பெண்கள் இனி வீரநடை போடுகிறார்கள் என்று குணசேகரனை ஜெயிலில் அடைத்தது போல முதல் சீசனை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்று முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இந்த இரண்டாவது பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதல் சீசன் போலவே இப்போது இரண்டாவது சீசனிலும் கல்யாணம் பிரச்சனை தான் தலை தூக்கி இருக்கிறது.
எதிர்நீச்சல் பெண்கள் எப்போது பிசினஸில் சாதிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் தர்ஷன் கல்யாணத்தை வைத்து குணசேகரன் ஜெயிலில் இருந்து வெளிய வருவதற்காக பிளான் போட்டு இருக்கிறார். அதுபோல ஆண் ஆதிக்கத்தின் உச்சத்தில் தர்ஷன் இப்போது இருக்கிறார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் மயூவாக நடித்துக் கொண்டிருந்த குழந்தை நட்சத்திரமான பேபி ஷெரின் தர்ஷனுக்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடைய எண்ட்ரியில் இனி எதிர்நீச்சல் 2 சீரியலில் என்னென்ன ட்விஸ்ட் இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் 2k கிட்ஸ்கள் பலர் கல்லூரி காலத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் வாழ்க்கையை தொடங்கி சில வருடங்களிலேயே பிரிந்து போய்விடுகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் இயக்குனர் முதல் பாகத்தில் ஆதிரைக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது போல இப்போது கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் தர்ஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications