“தேவயானி”யை மட்டும் அப்படி சொல்லலாமா? “அந்த” படம் பார்க்கலையா? பயில்வானிடம் ஷகிலா வாக்குவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஷகிலாவும் பயில்வான் ரங்கநாதனும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பயில்வான் நடிகை தேவயானி போன்ற ஒரு சில நடிகைகள் கிளாமராக நடிக்கவில்லை என்று சொன்னதற்கு ஷகிலா கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் பயில்வான் பல நடிகர் நடிகைகள் பற்றி பல்வேறு தகவல்களை தன்னுடைய youtube சேனலில் பேசிக் கொண்டிருப்பதால் அது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பயில்வான் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று பலரும் அவரை திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Bailwan Ranganathan about actress Devayani are not acting glamorous

ஆனாலும் அவருக்கு அதிகமான பாலோவர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியான நிலையில் சமீபத்தில் நடிகை ஷகிலாவோடு பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். நடிகை ஷகிலா ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் அதிகமாக நடித்திருந்தாலும் இப்போது தமிழ் சினிமாக்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அதோடு பல பிரபலங்களையும் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இப்போது பயில்வானிடம் பேட்டி எடுத்திருக்கிறார். இருவரும் ஆரம்பத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது பயில்வான் தமிழ் சினிமாவில் நடிகை தேவயானி போன்ற ஒரு சில நடிகைகள் அதிகமாக கிளாமரில் நடிக்காமல் இருக்கிறார்கள். நான் அவர்களைப் பற்றி எல்லாம் தவறாக எதுவும் பேசவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதை கேட்டு கோபமான ஷகிலா நீங்க எப்படி தேவயானி கிளாமராக நடிக்கவில்லை என்று சொல்லலாம்? தேவயானி ஆரம்பத்தில் "தொட்டால் சிணுங்கி" என்ற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை நீங்கள் பார்த்திருக்கீங்களா? அந்த திரைப்படத்தில் தேவயானி பிகினி டிரஸ்சும் போட்டு இருந்தார். நீச்சல் குளத்திலும் குளித்து இருந்தார்.

ஆனால் நீங்கள் தேவயானி கிளாமர் டிரஸ் போட்டது கிடையாது என்று எப்படி சொல்லலாம் என்று கேள்வி கேட்க, அதற்கு பயில்வான் அப்படியா?நான் பார்த்த வரைக்கும் தேவயானி திரைப்படங்களிலும் சரி சீரியல்களிலும் சரி குடும்ப பாங்காக மட்டும்தான் நடித்திருக்கிறார். ஒருவேளை அவர் கிளாமரில் நடித்து இருந்தால் அதை மக்கள் பார்த்து இருப்பார்கள் என்று சொல்ல,

அதற்கு ஷகிலா அப்படி என்றால் நீங்கள் நான் சொல்வது மட்டும் தான் உண்மை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதையே ரசிகர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இந்த விஷயத்திலேயே நீங்கள் எதையும் தெரியாமல் அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுகிறீர்கள் என்று மக்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் அதை நீங்களே ஒத்துக்கொள்ளுங்கள்.. என்று ஷகிலா பயில்வானிடம் சொல்ல, அதற்கு பயில்வான் நான் எல்லா விஷயங்களையும் தெரிந்துதான் சொல்லுவேன். செய்தி சேனல்களில் என்ன வருகிறதோ அதை விசாரித்து தகவலை கொடுக்கிறேன். யாரையும் தவறாக பேச வேண்டும் என்று நான் எதுவும் பேசவில்லை என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+