பயில்வான் மனநிலை சரியில்லாதவரா? வெங்கடேஷ் பட் போட்ட வீடியோ.. பிரச்சனைக்கு காரணம் இதுவா?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வெங்கடேஷ் பட் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயில்வான் ரங்கநாதன் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னை பயில்வான் ரங்கநாதன் விமர்சித்த போது அவரை தன்னுடைய ரசிகர்கள் சிலர் திட்டி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் மனநிலை சரியில்லாதவரா? அல்லது பணத்திற்காக இப்படி பேசுகிறாரா? என்று தெரியவில்லை, அவரை யாரும் திட்ட வேண்டாம் என்று அந்த வீடியோவில் வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரமுகராக இருந்தாலும் தான் பத்திரிக்கையாளர் என்ற அடையாளத்தோடு சினிமா நடிகைகள், நடிகர்கள் பற்றியும் அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும் பல தகவல்களை youtube சேனல்களில் பேசி வருகிறார். இதற்கு நடிகர்கள், நடிகைகள் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் தொடர்ச்சியாக பயில்வான் வீடியோக்களில் ட்ரெண்டில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதுபோல தான் சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் இணைந்தது குறித்து பேசி இருக்கிறார். வெங்கடேஷ் பட் கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே தான் அதிலிருந்து விலகி விட்டதாக அறிவித்திருந்தார்.
அதற்கு காரணம் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது மீடியா மேஸன்ஸ் நிறுவனம் தான். அந்த நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகி விட்டது அந்த நிறுவனம் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன் அவர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதை, விசுவாசம் என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் வெங்கடேஷ் பட் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதாகவும் அதற்கு விஜய் டிவி மறுத்துவிட்டதால் தான் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார் என்று பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோவிற்கு கீழே வெங்கடேஷ் பட்டின் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை திட்டி வருகிறார்கள். அதற்கு வெங்கடேஷ் பட் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். பயில்வான் ரங்கநாதன் எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா? அல்லது பணத்துக்காக இப்படி பேசுகிறாரா? என்று புரியவில்லை.
எது எப்படியோ நம்மைப் பற்றி ஒருவர் தவறாக பேசி விட்டார் என்றால் அவரைப் பற்றி நாமும் அதேபோல தவறாக பேச வேண்டும் என்று அவசியமில்லை. அதனால் என்னுடைய ரசிகர்கள் தயவு செய்து அவரைப் போலவே நீங்களும் தவறாக பேச வேண்டாம். சாக்கடையில் கல்லை தூக்கி எறிந்தால் அது நம் மீதும் விழ தான் செய்யும். நடக்காதது, இல்லாததை பற்றி தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் அதற்காக நாம் ரியாக்ட் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் நம்முடைய வேலையை பார்த்து போய்விட்டால் இப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களைப் பற்றி பேசுவதை குறைத்து விடுவார்கள் என்று அந்த வீடியோவில் வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications