மலையாள சினிமாவை விட்டு எதுக்கு வந்தீங்க? பயில்வான் கேட்ட கேள்வி.. ஷகிலா கடும் வாக்குவாதம்
சென்னை: நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகை ஷகிலாவோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது ஷகீலாவிடம் நீங்கள் எதற்காக மலையாள சினிமாவை விட்டு வந்தீங்க என்று கேட்ட கேள்விக்கு ஷகிலா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மலையாள சினிமாவில் ஷகிலா நடிக்க கூடாது என்று விரட்டி விட்டார்களா? என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கேள்வி கேட்க, அதற்கு கோபமான ஷகீலா இப்படித்தான் சிலர் என்ன நடந்தது என்று தெரியாமலேயே இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபப்பட்டு இருக்கிறார்.

அந்த வகையில் நடிகை ஷகிலா பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் தமிழை விட அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்திருந்தார். அதிலும் கவர்ச்சி படங்களில் நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கிய ஷகிலா தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதுவரைக்கும் தான் வாங்கி இருந்த பெயரை மாற்றி இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகிலாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. ஷகிலா இப்போது ஒரு சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பல பிரபலங்களையும் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதனை ஷகீலா பேட்டி எடுத்திருந்தார்.
அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது பயில்வான் ரங்கநாதன் நீங்க மலையாள சினிமாவை விட்டு எதற்காக வந்தீங்க? என்று கேட்க அதற்கு ஷகிலா நான் அந்த நேரத்தில் 25க்கு மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் நடிக்காத படத்தில் என்னுடைய "பிட்" காட்சிகளை இணைத்து விட்டார்கள்.
அதனால் கோபத்தில் தான் நான் மலையாள சினிமா படங்களை வேண்டாம் என்று விட்டு விட்டு வந்தேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பயில்வான் ரங்கநாதன், அப்படியா? அப்போ அந்த நேரத்தில் உங்க படத்தில் அதிகமா பிட் காட்சிகள் இருப்பதால் மற்ற நல்ல படங்களை பார்க்க மக்கள் போகவில்லை என்பதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டதால் உங்களை துரத்தி விட்டதாக எல்லாம் செய்திகளில் சொல்லி இருந்தார்களே? என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு ஷகிலா கோபப்பட்டு யார் அப்படி சொன்னது? யாராவது என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டார்களா? அவர்கள் இஷ்டத்திற்கு எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எப்படி அடுத்தவர்கள் பர்சனல் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ அப்படித்தான் சிலர் இஷ்டத்துக்கு எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் என்னை மலையாளத்தில் இருந்து துரத்தி விட்டார்கள், எனக்கும் மம்முட்டிக்கும் பிரச்சனை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது வேறு கதை அதை விட்டு விடுங்கள். நீங்கள் எதற்காக அடுத்த நடிகைகள் பற்றி தவறாக பேசுறீங்க? அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று சகிலா கேட்க அதற்கு பயில்வான் ரங்கநாதன் பிரபலம் என்று வந்துவிட்டால் எல்லா விஷயங்களும் மக்களுக்கு தெரிய தானே செய்ய வேண்டும்.
அதை நான் சொல்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்ல, அதற்கு ஷகிலா அப்போ நீங்களும் பிரபலம்தான். உங்களுடைய பர்சனல் விஷயங்களைப் பற்றியும் எல்லோரும் அவர்கள் இஷ்டத்துக்கு பேசலாமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications