Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோபியை அடித்து விரட்டிய ராதிகா.. இவ்வளவு சீக்கிரம் நடந்து விட்டதே.. பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராதிகாவை பற்றி தப்பாக பேசிய மூர்த்தியிடம் ராதிகா தான் தன்னுடைய மனைவி என்று கோபி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

கோபிக்கு இரண்டாவது திருமணம் முடிந்தது தெரியாமல் இருந்த கண்ணனும் முர்த்தி நேற்றைய எபிசோடில் குழப்பத்தில் இருந்தனர்.

பாண்டியன் ஸ்டோர் பாக்கியலட்சுமி சீரியல் மகா சங்கமத்தில் நடந்த பிரச்சனைகள் காரணமாக கோபியை பாக்கியா அடித்திருக்கிறார்.

மூர்த்திக்கு அதிர்ச்சி கொடுத்த கோபி

மூர்த்திக்கு அதிர்ச்சி கொடுத்த கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மகா சங்கமத்தில் இன்றைய எபிசோட்டில் கோபி மூர்த்தியிடம் ராதிகா தான் என்னுடைய மனைவி என்று கூறியிருக்கிறார். அதற்கு கோபி மூர்த்தி அப்போ பாக்யாவின் நிலைமை என்ன என்று கேட்கும் போது பாக்யாவிற்கு எனக்கும் எப்போதே டைவர்ஸ் ஆகிவிட்டது என்று கூறுகிறார். இதனால் கண்ணனும் மூர்த்தியும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அப்போது அவர்கள் இருவரையும் எழில் இதனால்தான் இங்கே வரவேண்டாம் என்று நான் சொன்னேன். இந்த ஆளுகிட்ட நாம பேச வேண்டாம் வாங்க போகலாம் என்று கூப்பிடுகிறார். கோபியும் நக்கலாக அதான் அவன் கூப்பிடறான் இல்ல போங்க இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திமிராக பேசுகிறார்.

தனத்திடம் உண்மையை கூறிய பாக்யாதனத்திடம் உண்மையை கூறிய பாக்யா

தனத்திடம் உண்மையை கூறிய பாக்யாதனத்திடம் உண்மையை கூறிய பாக்யா

திருமண மண்டபத்தில் இருக்கும் போது பாக்கியா உங்க கல்யாணம் முடியும் முன்பு ஒரு போன் பண்ணி இருந்தா? நாங்க வந்து அங்க நடக்கிறதே வேற மாதிரி பண்ணி இருக்போம் ஆனால் உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டது என்று ரொம்ப ஆடாதிங்க என்று கோபிக்கு வார்னிங் கொடுத்துவிட்டு மூர்த்தி அங்கிருந்து கிளம்புகிறார். தனத்திடமும் பாக்கியா கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் தங்களுக்கு டைவர்ஸ் ஆகிவிட்டதையும் கூறுகிறார். அதிர்ச்சி அடைந்த தனம்,பாக்யாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். கோபியின் அப்பாவாகிய ராமமூர்த்தி கோபியை திட்டிக் கொண்டிருக்கிறார்.

யார் அந்த டீச்சர்

யார் அந்த டீச்சர்

அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருக்கும் ராதிகா உடனே பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்புவதற்கு தயாராகிறார். கோபி சஎன்னாச்சி ராதிகா எங்க கிளம்புகிறாரா என்று பின்னாடியே கெஞ்சி கொண்டு அலைகிறார். நான் இங்கே இருக்கவில்லை ஊருக்கு கிளம்புகிறேன், சென்னையில் இருக்கும்போது தான் நீங்க என்ன சொன்னீங்க? கல்யாணத்தில்தான் பிரச்சனை இனி நம்முடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது என்று தானே இங்கே கூட்டிக்கொண்டு வந்திங்க. ஆனால் இங்கேயும் வந்து பிரச்சனை பண்றாங்க என்னை எல்லோரும் கேவலமா பேசுறாங்க என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த டீச்சரும் இங்கேதான் வந்திருக்காங்க என்று சொன்னதும் யார் அந்த டீச்சர் என்று கோபி கேட்கிறார்.

கோபியை அடித்த ராதிகா

கோபியை அடித்த ராதிகா

கோபி இப்படி பேசியதும் கடுப்பான ராதிகா பில்லோவை எடுத்து கோபியை அடிக்கிறார். தெரியாத மாதிரி நடிக்காதீங்க என்று சொல்லவும் ராதிகா பாக்கியவைதான் நீ அப்படி சொல்கிறாயா? பத்தாங்கிளாஸ் வரை கூட படிக்காதவள் நீ டீச்சர் என்று சொல்லாதே என்று கூறுகிறார். அதோடு ராதிகாவை சமாதானம் செய்து நாம வேணா வேற ஹோட்டலுக்கு சென்று விடலாம் என்று கூறுகிறார். ராதிகாவும் அதற்கு சரி என்று கூறுகிறார். தன்னுடைய நண்பனிடம் கோபி தனக்கு தலை வலிக்கிறது இந்த சூழ்நிலை எனக்கு பிடிக்கவில்லை வேற ஹோட்டல் பார்த்து சொல் என்று கூறுகிறார். அதற்கு அவரும் இங்கே தான் நல்லா இருக்கும் என்று கூறுகிறார். கோபி ரூமுக்கு செஞ்சதும் அங்கே பாக்யா குடும்பத்தோடு காரில் வந்து இறங்குகிறார். கோபியின் நண்பர் பாக்யாவை பார்த்து விடுகிறார். நலம் விசாரித்து கொண்டு நாளைக்கு நடக்க இருக்கும் விருது பங்ஷனுக்கு வரவேண்டும் என்று கூறுகிறார். அதே நேரத்தில் கோபி ராதிகாவிடம் தனக்கு எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்தாலும் எங்கேயும் ஹோட்டல் கிடைக்கவில்லை. அதனால் அவார்டு ஃபங்ஷன் முடியுற வரைக்கும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+