Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த திருமணத்துக்கு ரெடியாகும் கோபி.. இனி தந்தை எடுக்கும் திடீர் முடிவு.. கதையே மாறப் போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலின் கோபிக்கு எதிராக அவருடைய தந்தை எடுக்கும் முடிவால் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட போகின்றது.

ரசிகர்கள் யாரும் யூகிக்க முடியாத பல திருப்பங்கள் இந்த சீரியலில் வரும் வாரங்களில் ஏற்பட போகிறதாம்.

விறுவிறுப்பான கதைக்களம்

விறுவிறுப்பான கதைக்களம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் இதுவரைக்கும் இல்லாத வகையில் தற்போது கதையின் திருப்புமுனை விறுவிறுப்பை கூட்டி உள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் இந்த சீரியலுக்கு ஆர்வத்தை கூட்டும் விதமாக தான் சீரியலின் கதைக்களம் நகர்த்தபட்டு வருகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். பொதுவாக ரசிகர்கள் எதிர்பார்க்கும விஷயத்தை தாண்டியும் பல பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

மகளிடம் கேள்வி கேட்ட கோபி

மகளிடம் கேள்வி கேட்ட கோபி

என்னதான் புது திருப்பங்கள் வந்தாலும் வழக்கமாக பல சீரியல்களில் நடக்கும் திருப்பங்கள் தான் என்று ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வகையில் பாக்கியலட்சுமி ஏற்கனவே கோபியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகத்தை மனதில் இருக்கும் போது கோபி இன்று தன் மகளிடம் நான் வெளி ஊருக்கு சென்றால் நீ என் கூடவே வந்து விடுவியா?? என்று கேள்வி கேட்டிருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய நண்பரிடம் எனக்கு என்னுடைய மகள் மற்றும் அம்மா மட்டும்தான் பிடிக்கும். அவர்களைத்தான் எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை. அவர்களைப் பிரிந்து என்னால் இருக்கவே முடியாது என்று கூறி இருக்கிறார். அதனால் தன்னுடைய மகளின் முடிவை தெரிந்து கொள்வதற்காக அவர் இப்படி கேள்வி கேட்டுள்ளார்.

மயூ கூறிய அதிர்ச்சி செய்தி

மயூ கூறிய அதிர்ச்சி செய்தி

கோபியின் கேள்வியால் மேலும் சந்தேகம் அடைந்த பாக்கியா தன்னுடைய கணவரிடம், என்கிட்ட எதையாவது மறைக்கிங்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கோபி சமாளித்து முடித்திருக்கிறார். அடுத்தநாள் மயு கோபியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தான் அவருடைய அம்மா ராதிகா இரண்டாவது திருமணம் செய்து போவதாக குழந்தைத்தனமாக கூறிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு கோபியின் தந்தை அதிர்ச்சி அடைந்து உங்க அம்மா யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு எங்க அம்மாவின் பிரண்ட் கோபி அங்கிள் தான் என்று கூறியிருக்கிறார். அதனால் கண்கலங்கிய படி அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.

என்ன நடக்கப் போகிறதோ!!

என்ன நடக்கப் போகிறதோ!!

இனி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கோபி தந்தை முடிவெடுத்து வீட்டில் அனைவரும் டைனிங் ஹாலில் சாப்பிட அமர்ந்திருக்கும்போது மயூவிடம் கோபியின் குடும்ப புகைப்படத்தை காட்டி இவரை உனக்கு தெரியுமா?? என்று கேள்வி கேட்டிருக்கிறார். இந்த எபிசோடு நாளைதான் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனால் இதை பார்த்ததும் மயூ என்ன சொல்ல போகிறார் என்றுதான் ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கோபியின் தந்தை எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா? ? அல்லது கோபி ராதிகாவின் திருமணம் நடைபெற்று விடுமா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+