Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bakkiyalakshmi : இனியா ரிசப்ஷனில் நடந்த சம்பவம் கோபப்பட்ட ஈஸ்வரி இவங்க இன்னும் திருந்தலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 6, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடு, இனியா மற்றும் ஆகாஷின் திருமண ஏற்பாடுகளால் மகிழ்ச்சியாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது. ஒரு காலத்தில் அவர்களின் காதலை ஏற்காத குடும்பத்தினர், தற்போது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது, இந்த எபிசோடின் முக்கிய அம்சமாக இருந்தது.

Baakiyalakshmi Serial vijay TV

செல்வியின் மனதில் இருந்த ஆசை

ஆகாஷ் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இனியா அவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்புகிறார். ஈஸ்வரி, "நான் செல்வியிடம் பேசட்டுமா?" என்று பாக்கியாவிடம் கேட்கிறார். ஆனால், பாக்கியா வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். செல்வி, கிளம்பும்போது ஒரு நிமிடம் யோசித்து, மீண்டும் திரும்பி வந்து, "உங்களிடம் இதைக் கேட்கலாமான்னு தெரியல. என் பையன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். இதுக்கு முன்னாடியே இனியாவும் ஆகாஷும் காதலிச்சாங்க. ஆனா, வேலைக்காரி செல்வியா என்னால அதைக் கேட்க முடியலை. இப்போ கலெக்டரோட அம்மாவா கேட்கிறேன், இனியா பாப்பாவை ஆகாஷுக்குக் கொடுப்பீங்களா?" என்று கேட்கிறார்.

செல்வியின் இந்த எதிர்பாராத பேச்சைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஈஸ்வரி, "நான் இதைப்பத்திதான் உன் கிட்ட பேசணும்னு பாக்கியா கிட்ட சொன்னேன்," என்று சொல்ல, கண் கலங்கிய செல்வி, "அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்," என்று சொல்கிறார்.

சங்கீத் ஃபங்ஷன்

திருமண ஏற்பாடுகள் வேக வேகமாக நடக்க, குடும்பத்தினர் இனியாவுடன் சங்கீத் ஃபங்ஷனுக்குக் கிளம்புகின்றனர். மண்டபத்தில் மேளதாளத்துடன் ஆகாஷ் குடும்பத்தை இனியா குடும்பத்தினர் வரவேற்க, காரிலிருந்து ஆகாஷ் இறங்குகிறார். செழியன் அவருக்கு மாலை போட்டு மரியாதை செய்ய, ஜெனி சந்தனம் வைக்கிறார். பின்னர், அனைவரும் அவர்களை உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.

செல்வியின் கணவர் செல்வியை தனியாக அழைத்து, "இப்ப எதுக்கு உள்ளே போக விடாம இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்க," என்று கேட்கிறார். அதற்கு அவர், "நீ சாதிச்சுட்ட செல்வி," என்று சொல்கிறார். "நான் என்னத்த சாதிச்சேன்?" என்று கேட்க, "அவங்க ரெண்டு பேரும் காதலிச்சப்போ இந்தக் குடும்பம் அவனை அடிச்சு துரத்திவிட்டது. ஆனால், இப்போ அவங்க கையாலேயே மேளதாளத்துடன் மாலை மரியாதை செய்ய வச்சுட்ட," என்று கூறுகிறார். "அதுக்குக் காரணம் நான் இல்லை, என்னோட பையன் ஆகாஷ் தான்," என்று செல்வி சொல்ல, "அவன் காரணமாக இருந்தாலும், அவன் கலெக்டர் ஆகணும்னு சொன்னது நீதானே," என்று சொல்லிப் பாராட்டுகிறார்.

பிரசவம் குறித்த பேச்சு

ரிசப்ஷன் ஹாலில், அமிர்தாவின் அம்மா ஈஸ்வரியிடம், "நீங்களே சொல்லுங்க சம்மந்தி, அமிர்தாவோட பிரசவம் நாங்க தானே பாக்கணும்?" என்று கேட்கிறார். அங்கு வந்த பாக்கியா, "இன்னும் அமிர்தாவுக்குப் பிரசவம் ஆகல. அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு. அதுக்காக இப்போவே பேசிக்கிட்டு இருக்கணுமா? வாங்க ரிசப்ஷன் ஸ்டார்ட் பண்ணலாம்," என்று சொல்லி அனைவரையும் அழைத்துச் செல்கிறார்.

கொஞ்ச நேரத்தில், எழில் மற்றும் செழியன் ஆகாஷை அழைத்து வர, அமிர்தாவும் ஜெனியும் இனியாவை அழைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மண்டபத்தில இருக்கிற எல்லாரும் இப்ப தான் இனியா ரொம்பவே சந்தோசமா இருக்கிறாள் என்று சொல்லுறார்கள். அந்த நேரம் பார்த்து மண்டபத்திற்கு நிதீஷோட அம்மா போய் நிற்கிறார். அதைப் பார்த்த ஈஸ்வரி ஷாக் ஆகுறார். பின், பாக்கியா ஓடிப்போய் உள்ள வாங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து, நிதீஷோட அம்மா ஆகாஷை பார்த்து இனியா நல்ல பொண்ணு அவள நல்ல மாதிரி பாத்துக்கோ என்று சொல்லுறார். இப்படியாக, இன்றைய எபிசோடில் இனியா மற்றும் ஆகாஷின் திருமணம் உறுதியாகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+