பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது..இப்பவாது இந்த முடிவை எடுத்தார்களே
சென்னை: பாக்யலட்சுமி சீரியலின் கோபியின் அம்மா தற்போது எடுத்திருக்கும் முடிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக இருக்கிறது.
பாக்கிய லட்சுமி சீரியல் ப்ரோமோ தான் தற்போது சீரியல் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல்களில் இப்போது ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரசிகர்கள் பலர் எதிர்பார்த்திருந்த தருணம் தற்போது தான் வந்திருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீரியலுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமான ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது சமூக வலைதளத்திலும் அதிகமான ஆதரவு குவிந்து வருகிறது.

குடும்பத் தலைவியின் போராட்டம்
பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப தலைவியின் கஷ்டங்களை மையமாகக் கொண்டதாக இருந்தாலும் படிக்காத ஒரு பெண் வீட்டில் இருக்கும் கணவர் மற்றும் மாமியாரிடம் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருப்பது, வீட்டின் குடும்ப சுமையை தன் தலையின் மீது வைத்துக்கொண்டு குடும்பத்திற்காக பல்வேறு ஆசைகளை மனதிற்குள்ளே புதைத்துக்கொண்டு தனது வாழ்நாளை குடும்பத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பப் தலைவியின் போராட்டமாக இருந்து வருகிறது.

மாமியாரின் மனமாற்றம்
பாக்கிய லட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவராக கோபி வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலுக்காக பாக்கிய லட்சுமியை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது கோபியின் தோழியான ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தியாகங்களை இதுவரைக்கும் வீட்டில் உள்ளவர்கள் யாரும் சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையில் பாக்கியாவின் மாமனாரின் உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் நிலையில் பாக்கியா அவருக்கு செய்யும் உதவிகளை பார்த்ததும் பாக்யாவின் மாமியார் தற்போது தான் மனம் மாறி இருக்கிறார். இதுவரைக்கும் தனது மகனுக்கு மட்டுமே ஆதரவாக இருந்த மாமியார் தற்போது பாக்கியாவிற்கு ஆதரவாக மாறி இருக்கிறார்.

எதிர்பாராத திடீர் திருப்பம்
இன்றைய ப்ரோமோவில் கோபி, பாக்கியாவிடம் தான் அப்பாவின் மருத்துவ செலவிற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து இருப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா அமைதியாக பேசும்படி எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காத கோபி பேசுவதை கேட்டு கோபியின் அம்மா தன்னுடைய நகைகளை பாக்கியாவிடம் கொடுத்து நீ மருத்துவ செலவிற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். அதனால் இதனை வைத்துக்கொள் என்று கூறுகிறார். இதனை பார்த்ததும் கோபியின் முகம் சுருங்கிப் போய்விட்டது. தான் என்ன செய்தாலும் தனக்கு மட்டுமே ஆதரவாக இருந்த அம்மா இப்படி மாறி விட்டாரே என்று கோபி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஏற்கனவே தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய அம்மா தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று குழப்பத்தில் இருக்கும் கோபிக்கு இப்போது அம்மாவின் மனமாற்றம் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது .
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications