Barathi Kannamma: வெண்பாவை ஏய்யா வெளில அனுப்பி வச்சீங்க!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா பாரதியுடன் படிச்சவள். படிக்கும்போதே பாரதியை காதலிக்கறா ஆனால், பாரதி வெண்பாவை காதலியா கண்டுக்கலை.. நல்ல தோழியா பார்க்கறான். இருந்தாலும் நம்ம சீரியல்களில் பொண்ணுங்க விடமாட்டங்களே...
டாக்டரா இருக்கும் வெண்பா பாரதிக்கு குழந்தை பிறக்காதுன்னு பொய்யா சர்டிஃபிகேட் கொடுத்துடறா. அதோடு நிறுத்திட்டா எப்படி.. அவன் கல்யாணம் செய்து கொண்டு வந்து இருக்கும் கண்ணம்மாவுக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் இல்லைன்னு அதே பொய் சர்டிஃபிகேட் கொடுத்துடறா.
கதைக்குழு இப்போ கண்ணம்மா குழந்தை உண்டானது போல் கதையைக் கொண்டு போகணும்.. என்ன செய்வது.. கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காமல் இருக்க மாத்திரை கொடுத்து வந்த வெண்பாவை கொஞ்சம் வெளியில் அனுப்பி வச்சு இருக்காய்ங்க. கண்ணம்மா உண்டாகி இருக்கா.

முதலில் கருப்பு
சீரியல் ஆரம்பம் கருப்பு நிறத்தை மையப்படுத்தி இருந்தது. கருப்பு கண்ணம்மாவை பாரதி கல்யாணம் செய்துக்கொண்டு வர, வீட்டில் அம்மா சவுந்தர்யாவுக்கு கருப்புன்னாலே பிடிக்காது. இதனால், கண்ணம்மாவை பல விதத்திலும் வெறுத்து வந்தவங்க சவுந்தர்யா. நடுவில் வெண்பாவும் புகுந்து கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட அடுத்து இந்த பிரச்சனை பூதாகரமா கிளம்புது.

பாரதி கண்ணம்மா
பாரதி, கண்ணம்மா ரெண்டு பேருக்குமே குழந்தை பிறக்காதுன்னு சர்டிஃபிகேட் குடுத்துட்ட வெண்பா, பாரதியிடம்..உனக்கு குழந்தை பிறக்காதுன்னு வீட்டில் தெரியாதுல்லடா.. அதனால்தான் கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காதுன்னு பொய் சொன்னேன். வீட்டில் போயி உண்மையை சொன்னா கண்ணம்மா தாங்குவாளான்னு சமாளிக்கிறாள்.

கண்ணம்மா வருண்
கண்ணம்மாவுடன் படித்த வருண், கண்ணம்மாவை சந்திக்க நேரிடுகிறது. இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பதை வெண்பா பாரதி சந்தேகப்படும் வகையில் கொளுத்திப் போடுகிறாள். ஆனால், பாரதி வெண்பாவை அடிச்சுட்டு, இனிமே இந்த ஆஸ்பத்திரி பக்கமே வராதேன்னு சொல்லிட்டான். இப்போ பாரதி தனக்கு குழந்தை பிறக்காதுன்னு வெண்பா சொன்னதை நம்பி இருக்கான்.

கண்ணம்மா குழந்தை
வெண்பா மாத்திரை கொடுக்க முடியாமல் போக, கண்ணம்மா குழந்தை உண்டாகி விடுகிறாள், பாரதி கண்ணம்மாவை சந்தேகப்படுவானா? இல்லை தான் இப்போதாவது இன்னொரு டெஸ்ட் வேறு டாக்டரிடம் சென்று எடுத்து பார்ப்பானா? இல்லை கண்ணம்மா குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று மகிழ்ச்சி அடைவானா? இதை எல்லாம் சஸ்பென்ஸாக வைத்து, வெண்பாவை கொஞ்ச நாள் வெளியில் அனுப்பி வச்சு இருக்காய்ங்க.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications