Barathi Kannamma Serial: பாரதி வாழக்கையில் இப்படி விளையாடறாங்களே...!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் மூணு பெண்கள் விளையாடறாங்களே... என்னத்த சொல்ல?
கட்டின பொண்டாட்டி கருப்பு கண்ணம்மா உண்மை நிலை புரியாமல் அவனுக்கு விளையாட்டு காட்டுகிறாள். கண்ணம்மாவின் தங்கச்சி அஞ்சலி பாரதி, கண்ணம்மாவோடு சந்தோஷமாக இருக்க கூடாதுன்னு விளையாட்டு காட்டறா.
கூட படிச்ச வெண்பா பாரதியைத் தான் அடையணும்னு பாரதிக்கு விளையாட்டு காட்டறதோடு, கண்ணம்மாவுக்கு சேர்த்து கண்ணாமூச்சு விளையாட்டு காண்பிக்கறா.

பாரதி விரும்பி
கருப்பு கண்ணம்மாவை பாரதியின் அம்மாவே வெறுக்க பாரதி அவங்களை எதிர்த்து கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கறான் பாரதி. அதற்கு முன்பே தனக்கு குழந்தை பிறக்காது என்கிற உண்மையையும், தாம்பத்ய வாழ்வில் எந்த குறையும் இருக்காது என்கிற உண்மையையும் கண்ணம்மாவின் அப்பாவிடம் சொல்லி சொல்ல சொல்றான். அவர் சொல்லாமல் விட்டுவிடுகிறார்.

குழந்தை பிறக்கும்
நமக்கு குழந்தை பிறந்தால் என்னை அப்படி பார்த்துக்கோங்க.. இப்படி பார்த்துக்கோங்க பாரதி மாமான்னு கண்ணம்மா சொல்லும்போது எல்லாம் பாரதிக்கு நெஞ்சு வலிக்கிறது. போதா குறைக்கு கர்ப்பிணி விளையாட்டு வேற விளையாடுகிறாள். வயிற்றில் துணி மூட்டையைக் கட்டிக்கொண்டு. பாரதி குற்ற உணர்ச்சியில் தவிச்சு போகிறான்.

பாரதி அஞ்சலி
கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியை பாரதியின் தம்பிக்கு பெண் பார்க்கப் போகையில் அவளுக்கு தம்பி அகிலனைப் பிடிக்காமல் பாரதியைப் பிடித்துப் போகிறது. அன்றிலிருந்து பாரதி கண்ணம்மா ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று அவளும் தன் பங்குக்கு பாரதியிடம் விளையாட்டு காண்பிக்கிறாள்.

பாரதி வெண்பா
மெடிக்கல் காலேஜில் உடன் படித்த வெண்பா பாரதியை காதலிச்சது பாரதிக்குத் தெரியாது . அவன் வேறு பெண்ணை காதலிக்க அவளை சாகடிக்க நினைச்ச வெண்பா கார் விபத்தை ஏற்படுத்துகிறான். அதில் பாரதிக்கும் அடிபட்டுவிட, நன்றாக இருக்கும் அவனுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லிவிடுகிறாள். அப்போதுதான் அவன் வெண்பாவுக்காக காத்து இருப்பானாம்.

ஏன் இப்படி?
பாரதிக்கு குழந்தை பிறக்கும் என்று வெண்பாவுக்கு தெரியும். பிறக்காது என்று பாரதி நினைச்சுகிட்டு இருக்கான். ரெண்டு பேரும் சேர கூடாது என்று அஞ்சலி நினைக்கிறாள். பாரதியை அடையணும்னு வெண்பா நினைக்கிறாள். இப்படி போகுது பாரதியின் இல் வாழ்க்கை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications