3 எழுத்து நடிகர்.. 3 எழுத்து நடிகை.. ஆர்த்தி, ஜெயம் ரவி மேட்டர்.. பயில்வான் ரங்கநாதன் தந்த நம்பிக்கை
சென்னை: ஜீவனாம்சம் கேட்கும் அளவுக்கு ஆர்த்தி - ஜெயம் ரவி போகாது என்றும், ஆர்த்தியின் அம்மா, ஜெயம் ரவியின் பெற்றோரிடம் பேசி இவர்கள் 2 பேரையும் சேர்த்து வைப்பார்கள் என்றும் ஒரு பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
காதலித்து மணம் முடித்த ஜெயம் ரவி, ஆர்த்தி ஜோடி தற்போது பிரிந்துள்ளனர்.. ஜெயம்ரவி தரப்பில் விவாகரத்து கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம்ரவியுடன் எடுத்த போட்டோக்களையும் டெலிட் செய்துள்ளார்.

இவர்களுக்குள் என்ன பிரச்சனை? எதனால் டைவர்ஸ் என்பதெல்லாம் உறுதியாக தெரியவில்லை. ஆனால், ஆர்த்தியின் அம்மா கொடுத்த டார்ச்சர், ஆர்த்தியின் அளவில்லாத செலவு, என யூகங்கள் றெக்கை கட்டி பறந்துவருகின்றன.
விவாகரத்து: எனினும், விவாகரத்து குறித்த வெளியான செய்திகளுக்கும் பதில் அளிக்காமல் தம்பதி இருவருமே மௌனமாக இருந்த நிலையில், ஜெயம் ரவி விவாகரத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்த்தி, தன்னுடைய சம்மதம் இல்லாமல் எடுக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இதற்கு நடுவில், பயில்வான் ரங்கநாதன் ஜெயம்ரவி - ஆர்த்தி விவகாரம் குறித்து சேனலுக்கு பேட்டிகளை ஒவ்வொன்றாக தந்து வருகிறார்.. அதில், "ஆர்த்தி அழகானவர், நிறைய டைரக்டர்கள் அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்டார்கள்.. ஆனால் ஆர்த்தி மறுத்துவிட்டார்.,,ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவுக்கு காரணம் இதுதான்.. ஆர்த்தி அழகாக இருந்தது மட்டுமே, ஜெயம் ரவியின் சந்தேகத்திற்கு காரணம்.
ஜெயம் ரவி: ஆர்த்தி ஒரு நடிகர் ஒருவருடன் பேஸ்புக்கில் பேசி கொண்டிருந்ததும், ஜெயம் ரவிக்கு பிடிக்கவில்லை.. இது தகறாராக உருவெடுத்தாலும், ஜெயம் ரவியிடம் ஆர்த்தி பேசி அந்த பிரச்சனையை சரி செய்துவிட்டார். அதற்கும் ஜெயம்ரவியின் இந்த முடிவுக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார் பயில்வான்.
அதேபோல இன்னொரு பேட்டியில், மருமகனை வைத்து 3 படம் எடுத்தார் மாமியார் சுஜாதா விஜயகுமார்.. அதில், 2 படங்கள் சுமாரா போனது.. பாண்டியராஜ் திரைக்கதையில் எடுக்க போகும் படத்துக்கு, பாண்டியராஜிடம் அட்வான்ஸ் தந்துவிட்டு, உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஜெயம்ரவியிடம் கேட்டுள்ளார் சுஜாதா விஜயகுமார்.
வாக்குவாதம்: உடனே ஜெயரம் ரவி, "அசாத்தியமான" சம்பளம் ஒன்றை கேட்டார். இதைக்கேட்டதும் ஷாக் ஆகி போன சுஜாதா, "உங்க மார்க்கெட்டு இப்போது இவ்வளவுதான், இதுதான் சம்பளம்" என்று சொல்லவும், அதை ஜெயம் ரவி சீரியஸா எடுத்துக்கிட்டு, வீராவேசம் பேசியிருக்கிறார். இதனால், தன்னுடைய அம்மாவுக்கு ஆர்த்தி சப்போர்ட்டாக பேசவும், 10 நாள் காணாமல் போயிட்டார் ஜெயம் ரவி.
மும்பைக்கு போனதாக தகவல் கிடைத்து. ஆனால், யாரையுமே அவர் பேசவிடல.. மும்பையில் உட்கார்ந்துட்டு போனையும் எடுக்கல. எப்படியும் வீட்டுக்குதானே வருவார்? என்று ஆர்த்தியும் இதை எளிதாக விட்டுவிட்டார். இந்த நேரத்தில்தான், ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்து விட்டார்" என்கிறார் பயில்வான் ரவி.
பிரபல நடிகர்: அதேபோல, "பிரபல நடிகருடன் இணைத்து ஆர்த்தி பேசப்படுவது, திரிஷாவுடன் திருமணமானதாக ஜெயம்ரவியுடன் பேசப்படுவது இதெல்லாம் பொய்.. அனைத்துமே வெட்டி ஒட்டி சேர்க்கப்பட்ட கட்டுக்கதைகள்..
நான் ஆர்த்தியின் அம்மாவிடம் பேசினேன்.. அவர் என்னிடம் சொல்லும்போது, "என் மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் அடிக்கடி சண்டை வந்தாலும், அவர்களுக்குள் சமாதானம் ஆகிவிடுவார்கள். ஆனால், இந்த முறை என்ன சண்டை என்று எனக்கே தெரியல. சில மாதமாகவே ஜெயம் ரவியிடம் பேச முயற்சி செய்தும் முடியவில்லை.. அவர் மும்பைக்கு தனியாக சென்றுவிட்டார்.
விவாகரத்து: யார் மனதையும் புண்படுத்தவில்லை என்று ஜெயம் ரவி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, ஆர்த்தியிடம் என்ன பிரச்சனை என்று அழைத்து பேசி இருக்கலாமே? விவாகரத்து பற்றியும் பேசியிருக்கலாமே? யாரிடமும் கலந்து பேசாமல், தன் விருப்பப்படி முடிவெடுத்துள்ளார்.. உடனே ஆர்த்தியும், இன்ஸ்டாகிராமிலிருந்து போட்டோக்களை டெலிட் செய்துவிட்டார். இருவருமே உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுத்துள்ளனர்" என்று என்னிடம் சொன்னார் ஆர்த்தியின் அம்மா.
எப்போதுமே கணவன் மனைவி பிரிந்து போக வேண்டும் என்று நான் நினைக்க மாட்டேன். அதுவும் லைக்குக்காக இப்படி பேசமாட்டேன். ஏனென்றால், எனக்கும் குடும்பம் மகன், மகள் இருக்கிறார்கள்.
ஜீவனாம்சம்: ஜீவனாம்சம் கேட்கும் அளவுக்கு இவர்கள் விவகாரம் போகாது. ஆர்த்தியின் அம்மா, ஜெயம் ரவியின் பெற்றோரிடம் பேசி இவர்கள் 2 பேரையும் சேர்த்து வைப்பார்கள். பேரன்களுக்காகவாவது ஜெயம்ரவியின் பெற்றோர் நல்ல முடிவு எடுப்பார்கள்.. விட்டு கொடுத்து போகவேண்டும் என்று ஜெயம் ரவியையும் சமாதானப்படுத்துவார்கள்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications