பாஸ்போர்ட்டை பிடுங்கி வச்சுக்கிட்டாங்க..சாப்பாடு இல்லாம கஷ்டம்..அர்ஜுன் சொன்ன வார்த்தை!- பெசன்ட் ரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பெசன்ட் ரவி அந்த நிகழ்ச்சியில் தான்பட்ட கஷ்டம் குறித்து எமோஷனலாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். மற்ற நிகழ்ச்சிகளை போல அந்த நிகழ்ச்சி இல்லை. அங்கே சாப்பாடு இல்லாமல் காட்டுக்குள் பட்ட கஷ்டங்கள் குறித்து அவர் சொன்னது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார். பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பல திரை பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் நடிகர் பெசன்ட் ரவியும் ஒருவர்.

television zee tamil besant ravi

அவரை திரைப்படங்களில் வில்லனாக பார்த்த ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் அவருடைய உண்மையான கேரக்டரை புரிந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பெசன்ட் ரவி மட்டுமல்ல அதை கலந்து கொண்ட எல்லா நடிகர்களுமே ரியல் சர்வைவராக தான் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சர்வைவர் நிகழ்ச்சிக்கு தான் எப்படி தேர்வானேன்? என்று அங்கு என்ன நடந்தது என்பது பற்றி நடிகர் பெசன்ட் ரவி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

பிக் பாஸ் 8: இளைஞர்களின் கனவு கன்னி முதல்.. குடும்ப பிரச்சனையால் பிரபலமான நடிகர் வரை! லீக்கான லிஸ்ட்
அதில் அவர் பேசுகையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு முதலில் எனக்கு மெடிக்கல் டெஸ்ட் பார்த்தார்கள். அதற்கு பிறகு என்னுடைய மனைவி, மகளிடம் என்று தனித்தனியாக பேட்டி எடுத்தார்கள். அப்போது எனக்கு அந்த நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் சீரியஸாக எதுவும் தெரியாது. அது போல யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று கேட்டேன். அப்போது கூட அது பற்றி சொல்லவில்லை.

நிகழ்ச்சி தொடங்கி நாங்கள் ஐலாண்ட் போன பிறகு என்னுடைய பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொண்டார்கள். கையில் இரண்டு டாலர் மட்டும்தான் இருந்தது. உடுக்க மூன்று துணி மட்டும்தான் இருந்தது. குளிப்பதற்கு அங்க இருக்கும் உப்பு தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். குடிப்பதற்கு மட்டும் தண்ணி கிடைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சாப்பாட்டிற்கு நாங்கள் தான் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும். தங்குவதற்கு வசதி கிடையாது.

பகல் முழுக்க ஏதாவது டாஸ்க் செய்துவிட்டு இரவு நாங்கள் தான் டென்ட் போட்டு படுத்துக்கொள்ள வேண்டும். அங்கு சரியான பாதுகாப்பு கிடையாது. நாங்கள் தூங்கும் இடத்தில் எங்களை சுற்றி பாம்புகள் போகும். பெரிய பூச்சிகள் போகும் அந்த பூச்சிகள் எல்லாம் கடித்து உடல் எல்லாம் வீங்கிவிடும். இரவு சரியாக தூக்கம் இல்லை என்றாலும் அடுத்த நாள் டாஸ்க் செய்ய வேண்டும். அதுக்குள்ள டாஸ்க் செய்வதற்கு ஒரு இடத்திற்கு இரவிலே போட்டில் கூட்டிட்டு போவாங்க.

அந்த போட் மேலும் கீழும் போகும் அதிலே பயமாக இருக்கும். ஒருவேளை கடலுக்குள் விழுந்து விடுவோமோ என்றெல்லாம் தோன்றும் அதற்குப் பிறகு அடுத்த நாள் டாஸ்க் செய்யும்போது யாருடைய உடம்பிலும் சக்தி இருக்காது. டாஸ்க் செய்கிற வரைக்கும் அது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. அந்த இடத்திற்கு நாங்கள் போன பிறகுதான் எங்களுக்கு அர்ஜுன் சார் அங்கு என்னென்ன நடக்கப்போகிறது என்பது பற்றி சொல்லுவார்.

நாங்கள் டாஸ்க் செய்ய போகும்போது கூட அவர் எங்களிடம் தனியாக வந்து டாஸ்க் செய்ய வேண்டும் என்று உங்களுடைய உடலை கெடுத்துக்காதீங்க. இது ஒரு போட்டி அவ்வளவுதான். இதை தாண்டி நமக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. இந்த போட்டிக்காக உடலை கெடுத்துக்கொள்ள கூடாது. முடிந்த வரைக்கும் ட்ரை பண்ணுங்க என்று சொல்லுவார். எனக்கு ஒரு முறை ஒரு பெரிய தென்னை மரத்தை தூக்கும்போது முதுகில் பிடித்துக் கொண்டது.

television zee tamil besant ravi

அதனால் என்னால் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இருக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் நாம் இவ்வளவு நாளா எவ்வளவு சொகுசாக வில்லனாக நடித்துக் கொண்டு இருந்தோம் என்று எனக்கு புரிந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் சர்வைர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்ட கஷ்டத்தை பார்த்து எங்களுக்கு பிறகு அந்த நிகழ்ச்சி அடுத்த சீசன் தொடங்குவதற்கு பலரிடம் பேசி இருக்கிறார்கள்.

ஆனால் யாரும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் தான் அந்த நிகழ்ச்சி நடக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்து பலர் ஐயோ அம்மா பெருசா சாதித்ததா சொல்கிறார்கள். அவர்களை சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விட வேண்டும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் முடியாது என்று தெறித்து ஓடி வந்து விடுவார்கள் என்று அந்த பேட்டியில் பெசன்ட் ரவி எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+