பக்தி சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு ஃபைனலுக்கு முன்பு கிடைத்த திரைப்பட வாய்ப்பு, திறமைக்கு சரியான அங்கீகாரம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கடவுளின் பக்தி பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக பாடப்படும் சில போட்டியாளர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது இந்த நிகழ்ச்சியின் மூலமாக திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கிறது.
விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதில் பல்வேறு கோணத்தில் புதிய நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சில சர்ச்சைகளையும் சந்தித்தது.

அதாவது குலதெய்வம் பாடல்கள் பாடப்பட்டபோது தேவகோட்டை அபிராமி என்ற போட்டியாளர் "அங்கே இடி முழங்குது" என்ற பாடலை பாடியிருந்தார். அது அங்கிருந்த அனைவருக்கும் உணர்வு பூர்வமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த புஷ்பவனம் குப்புசாமி பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென அருள் வந்தது போல சாமி ஆடி இருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவருக்கு திருநீறு வைத்து அமைதிப்படுத்தி இருந்தனர். இந்த வீடியோ வெளியாகி விமர்சனங்களை சந்தித்தது.
இது ஒரு பக்கம் இருக்க தேவகோட்டை அபிராமிக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். ஜேம்ஸ் வசந்தனின் அடுத்த படத்தில் அவருடைய இசை அமைப்பில் ஒரு பாடலுக்கு பாடி இருக்கிறாராம். அது குறித்த மகிழ்ச்சி செய்தியை பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். அதை பலரும் பாராட்டி இருந்தனர். காரணம் தேவகோட்டை அபிராமி காரைக்குடி அருகில் உள்ள சின்ன கிராமத்தை சேர்ந்தவர்.
நாட்டுப்புற பாடகியான அபிராமி எந்த இசை பயிற்சியும் இல்லாதவர். கிராம திருவிழாக்களில் மட்டுமே பாடிய அனுபவம் உள்ள இவர் பக்தி சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டதிலிருந்து ரசிகர்களுடைய அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார். பத்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக இப்போது அபிராமி திரைப்பட பாடகியாக மாறி இருக்கிறார்.
அதுபோல இசை பட்டம் பெற்ற மகாராஜன் பவித்ரா மற்றும் அலெய்னா என்ற இரண்டு போட்டியாளர்களையும் தன்னுடைய வரவிருக்கும் பக்தி ஆல்பத்தில் பாட அழைத்திருக்கிறார். தெய்வீகமான பாடலை தேடி எனும் பக்தி சூப்பர் சிங்கரில் உண்மையிலே பல திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வைத்திருக்கிறது. பலருக்கு திறமை இருந்தாலும் அதற்கு சரியான அங்கீகாரம் வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இந்த வாரத்தில் இஷ்ட தேவதைகளின் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் போட்டியாளரான அருணா பாடிய பாடலை கேட்டு மனம் மகிழ்ந்த நடிகை நளினி அவருக்கு புடவையை பரிசாக கொடுத்திருக்கிறார். அதுவும் அம்மனுடைய புடவை இது உன்னுடைய உனக்கு வந்து சேர வேண்டும் என்ற அந்த அம்மனை ஆசை என்னால் நிறைவேறி இருக்கு அவ்வளவுதான் என்று நளினி கூறியிருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications