பாரதி கண்ணம்மா 2: மதுவிடம் மாட்டிக்கொண்ட கண்ணமாவாக வந்த சித்ரா.. சௌந்தர்யா கொடுத்த அதிர்ச்சி
கண்ணமாவாக சித்ரா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மதுவுக்கு சித்ராவின் மீது சந்தேகம் வந்திருக்கிறது.
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணமாவாக சித்ரா நடித்துக் கொண்டிருப்பதை வீட்டில் இருக்கும் அனைவரும் நம்பி விட்டனர்.
முதல் முறை கண்ணமாவை பார்ப்பதற்காக மது வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
கண்ணம்மாவின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக மதுவிற்கு சந்தேகம் வருகிறது.
பாரதிக்கு வெண்பாவை திருமணம் செய்து வைப்பதற்காக வீட்டில் ஷர்மிளாவால் சூழ்ச்சி நடக்கிறது.

டெஸ்ட் வைத்த மது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் கண்ணம்மாவாக வந்த சித்ரா அம்மாவுக்கு கஞ்சி ஊட்டி கொண்டிருக்கிறார். அவர் சாப்பிட முடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் மது பின்னாடி வந்து கண்ணம்மாவின் கண்களை மூடி நான் யாருன்னு கண்டுபிடி என்று சொல்ல, கண்ணம்மா அதிர்ச்சியாகி திணறிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் அகிலன் என்ன மது அக்கா என்று குரல் கொடுக்க கண்ணம்மா வாயாடி மது தானே என்று கூறுகிறார்.

கதை கேட்க ஆர்வம்
பிறகு மது கண்ணம்மா இங்கே இருந்து போன பிறகு ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் நடந்தது என்பதை நான் அவரிடம் கேட்க வேண்டும் என்று சொல்ல, நான் இந்த கதையை கேட்டு எனக்கு புடிச்சு போயிட்டு, நான் வீட்டை விட்டுப் போகிறேன் என்று சொல்கிறார். அப்போது அம்மாவுக்கு மருந்து வாங்க வேண்டும் என்று கண்ணம்மாவின் அக்கா கூற, அதற்கு அகிலன் முடியாது எனக் கூற, அதற்கு மது நான் பைக்கில் தான் வந்திருக்கிறேன். நானும் கண்ணமாவும் போய் வாங்கிட்டு வரோம் என்று கூறி வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

மதுவுக்கு வரும் சந்தேகம்
மறுபக்கம் பாரதி ரோட்டில் நின்று கொண்டு குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் தம்பதி ஒருவர் தங்களுடைய குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் என்றும் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் சொல்கின்றனர். அவர்களுடைய மருத்துவ செலவுக்காக பாரதி ஏற்பாடு செய்கிறார் .அப்போது மதுவும் கண்ணம்மாவும் ஒரு இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு பெண்மணி அங்கே சித்ரா என இன்னொரு பெண்ணை கூப்பிட கண்ணம்மா திரும்பிப் பார்க்கிறார். இதனால் மதுவுக்கு சந்தேகம் வருகிறது.

சௌந்தர்யாவின் எதிர்பாராத பதில்
பிறகு உண்மையில் வந்திருப்பது கண்ணம்மா தானா என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக டெஸ்ட் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து கண்ணம்மாவை பைக்கில் கூட்டிக்கொண்டு செல்கிறார். மறுபக்கம் சௌந்தர்யாவின் அண்ணன் பாரதிக்கு வெண்பாவை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்ல, அதற்கு சௌந்தர்யா எனக்கும் இந்த யோசனை தோன்றியது என்று கூறியதும் ஷர்மிளா சந்தோஷப்படுகிறார். ஆனால் இது சரிப்பட்டு வராது என்று கடைசியில் கூறுகிறார். காரணம் சின்ன வயசுல இருந்து பாரதிக்கு பிடிக்கிறது வெண்பாவுக்கு பிடிக்காது. இருவரும் வேற வேற ரசனை கொண்டவங்க. அதனால கட்டாயப்படுத்தி அவர்கள் இருவரையும் கல்யாணம் பண்ணி அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட கூடாது என்று கூறுகிறார்.

சித்ராவை நம்பிய மது
சௌந்தர்யாவின் பதிலைக் கேட்டு ஷர்மிளா அதிர்ச்சி அடைகிறார். பிறகு தன்னுடைய மகன் விஜய் இடம் எப்படியாவது அஞ்சலியை கல்யாணம் பண்ற வழியை பாரு என்று கூறுகிறார். அடுத்ததாக மது கண்ணம்மாவை ஒரு குளத்தின் அருகே கூட்டிக் கொண்டு வருகிறார். கண்ணம்மாவுக்கு குழப்பமாக இருக்க நாம இங்கேதான் குளிக்க வருவோம். எந்த கரையில் குளிப்போம்னு சொல்லு பார்ப்போம் எனக் கேட்க, கண்ணம்மா யோசித்து ஒரு பக்கத்தை காட்ட முயற்சிக்க அப்போது மதுவின் முகம் மாறுகிறதை பார்த்து உடனே கண்ணம்மா அந்த கரை என மாற்றி சொல்ல, மது கரெக்டா சொல்லிட்ட நீ என் கண்ணம்மாவே தான் என சந்தோஷப்பட்டு கண்ணம்மாவை கட்டிபிடித்து கொள்கிறார். சித்ரா நிம்மதி அடைகிறார் .இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications