பாரதியை திருத்த கண்ணம்மா எடுத்த முடிவு... கண் கலங்கும் சௌந்தர்யா.. பாரதியின் ஆட்டம் ஆரம்பம்
பாரதியின் சகவாசத்தை நினைத்து சௌந்தர்யா கண்கலங்கி கொண்டிருக்க அதை பார்த்து கண்ணம்மா இனி பாரதியை திருத்துவதாக முடிவு எடுத்திருக்கிறார்.
சென்னை: பாரதி கண்ணம்மா இரண்டாவது பாகத்தில் கண்ணம்மாவுக்கு அடுத்தடுத்து மது சோதனைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்.
கண்ணம்மா பாரதியின் பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறார்.
பாரதியை நினைத்து கண்கலங்கிய சௌந்தர்யாவை பார்த்து பாரதி விஷயத்தில் கண்ணம்மா புது முடிவு எடுத்திருக்கிறார்.

நட்சத்திரத்தால் பிரச்சனை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இரண்டாவது பாகத்தில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கண்ணம்மா மது உடன் ஸ்கூலுக்கு வரும்போது அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விட்டு வரலாம் என்று மது கூற இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு அர்ச்சனை செய்கின்றனர். அப்போது ஐயர் பெயர் நட்சத்திரம் கேட்க கண்ணம்மா என்ன சொல்வது என தவித்து பிறகு சாந்தி சொன்ன விஷயத்தை வைத்து ராசி நட்சத்திரத்தை கூறுகிறார். அதைக் கேட்டால் மது இது கூட நீ மறக்காமல் அப்படியே ஞாபகம் வச்சு இருக்க என்று பாராட்டுகிறார்.

மதுவால் மீண்டும் பிரச்சனை
அடுத்ததாக தேங்காயில் பூ விழுந்திருப்பதை பார்த்து பூசாரி இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்று சொல்ல, கண்ணம்மா சந்தோஷப்படுகிறார். பிறகு எனக்கு இந்த கண்ணம்மாவின் பெயரில் வாழ்வது ரொம்பவே உறுத்தலாக இருக்கிறது வேறு வழி இல்லை கண்ணம்மாவுக்காக தான் இதை செய்கிறேன் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். ஸ்கூலுக்கு வந்த நிலையில் அப்போது அங்கிருந்து ஆடிட்டோரியத்தை பார்த்து உனக்கு நாலாவது படிக்கும் போது நடந்த விஷயம் ஞாபகம் இருக்கா என்று மது கேட்டுக் கொண்டிருக்க கண்ணம்மா என்ன சொல்வது என தெரியாமல் திணறுகிறார்.

பாரதியின் என்ட்ரி
அதே நேரத்தில் அங்கே சண்முகம் வாத்தியார் வந்துவிட சௌந்தர்யா அம்மா மேல தான் இருக்காங்க ரவுண்ட்ஸ் போறதுக்கு முன்னாடி போய் பாருங்க இங்கு நின்னுகிட்டு என்ன பேச்சு நடக்கிறது என்று அவர்களை திட்டி அனுப்புகிறார் அதே நேரத்தில் பாரதி ஸ்கூலுக்கு வர சௌந்தர்யா இங்க எதுக்கு இவன் வந்தான் என்று யோசித்தபடியே அங்கிருந்த நபரிடம் கேட்க நீங்கதான் ஸ்கூலுக்கு வந்து எல்லாத்தையும் பார்த்துக்கணும்னு சொன்னீங்க, இப்ப ஸ்கூலுக்கு வந்தா எதுக்கு வந்தனு கேக்குறீங்க. எனக்கு இங்கு டைரக்டர் ரூம் ஒன்று இருக்கு நான் அந்த ரூமுக்கு போகவா வேண்டாமா என்று கேட்கிறார் அதற்கு சௌந்தர்யா போக சொல்கிறார்.

கண்ணம்மாவின் புது முடிவு
பாரதி கிளம்பியதும் கண்ணம்மாவும் மதுவும் சௌந்தர்யாவின் ரூம் அருகே செல்லும்போது அங்கே சௌந்தர்யா பாரதியை நினைத்து பீல் பண்ணி கண்கலங்கி கொண்டிருக்கிறார். எல்லாம் இந்த வேண்டாத சகவாசத்தால் தான் பாரதி இப்படி எல்லாம் இருக்கிறார். அதை விட்டுவிடு என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்று புலம்பி கொண்டு இருப்பதை பார்த்து நான் என்ன சொன்னாலும் அந்த அம்மா நம்புனாங்க நான் அவங்களோட மகனை பற்றி குறை கூறும் போது கூட என்னை ஒரு வார்த்தை கேட்காமல் நம்புனாங்க. இதற்கு நான் தான் இனி ஏதாவது செய்ய வேண்டும் என்று பாரதியை திருத்துவது பற்றி மனதிற்குள்ளே நினைக்கிறார் .பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை ஹெட் மாஸ்டரை சந்திக்க சொல்ல, அப்போது வெளியே வரும் கண்ணம்மா பாரதியை நினைத்து சௌந்தர்யா மேடம் ரொம்ப வருத்தப்படுறாங்க நான் இனி திருத்த முயற்சி செய்யப் போகிறேன் என்று மதுவிடன் கூறுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications