கண்ணம்மா கொடுக்கும் வார்னிங்..ஊர்காரர்களின் பதில்..பாரதியின் இறுதி முடிவு..எதிர்பாராத சீரியல் முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கண்ணம்மாவை ஊருக்கு கூட்டி சென்று விட வேண்டும் என வந்த பாரதி இப்போது இந்த ஊருக்கு மருத்துவமனை வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.
பாரதியிடம் லட்சுமி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் சாப்பிட்டு விடுங்கள் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.

பாரதியின் தன்னம்பிக்கை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மாவிடம் சென்று இந்த ஊருக்கு ஹாஸ்பிடல் வரும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். உண்ணாவிரதம் முடிந்த பிறகு நான் சாப்பிடும் சாப்பாடு உன் கையால் செய்ததாக இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என பேச்சு கொடுக்க கண்ணம்மா பதில் எதுவும் சொல்லாமல் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஊர்காரர்கள் இப்போது நான் இங்கே இருக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்த ஊருக்கு மருத்துவமனை வந்து அவர்களே இங்கே இருங்கள் என்று என்னை சொல்வார்கள் என்று பாரதி கூறிக் கொண்டிருக்க கண்ணம்மா எதுவும் பேசாமல் இருக்கும்போது பாரதி அங்கிருந்து திரும்பி விடுகிறார்.

லட்சுமியின் வேண்டுகோள்
அடுத்ததாக உண்ணாவிரதத்தை பற்றி தெரிந்து கொண்ட லட்சுமி அங்கிருந்த அழகு சுந்தரம் தாத்தாவிடம் போன் வாங்கி அதில் பாரதியிடம் நீங்க இப்படி பட்டினியா இருந்தா உங்க உடம்புக்கு ஏதாவது ஆகிடும் இப்படி எல்லாம் பண்றீங்க, என கேட்க பாரதி எனக்கு ஒன்றும் ஆகாது நீ கவலைப்படாத நான் ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கிறேன் என்று சொல்ல, நீங்க மட்டும் சொல்லுவீங்களா, நேரத்துக்கு சாப்பிட்டால் தான் நல்லா இருக்க முடியும் என்று வயிற்றில் புண்ணு வந்துவிடும் அதனால் சாப்பிட்டு விடுங்கள் டாடி என்று கெஞ்ச பாரதி லட்சுமிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும்போது கண்ணம்மா வந்து விட போனை கட் செய்து விடுகிறார்.

வெறுப்பேத்தும் கண்ணம்மா
இரவு பாரதியும் கணபதியும் கட்டிலில் அமர்ந்திருக்கும் போது கண்ணம்மா ஹோட்டலில் இருந்து பிரியாணி வாங்கி வந்து நிலா சோறு சாப்பிடலாம் என குழந்தைகள் மற்றும் தாமரையை வெளியே உட்கார வைத்து பிரியாணி சாப்பிட்டு வெறுப்பேற்றுகிறார். பாரதி சாப்பிடாமல் இருப்பதை பார்த்து லட்சுமி எனக்கு சாப்பாடு வேண்டாம் என பாதியில் எனக்கு வயிறு சரியில்லை என சொல்லி எழுந்து விடுகிறார். இவர்கள் சாப்பிடுவதை பார்த்து கணபதி பசியால் துடித்துக் கொண்டிருக்க பாரதி சிரித்தபடியே இருக்கிறார்.

ஊர்க்காரர்களிடம் அசிங்கப்படும் பாரதி
அடுத்ததாக காலையில் ஊர் பெரியவர்கள் நீங்க இன்னும் போகலையா? என கேட்க, பாரதி நான் போக மாட்டேன் என்னை போக சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் முறைப்படி யாரு இடம் அனுமதி வாங்க வேண்டுமோ, அவர்களிடம் வாங்கிக் கொண்டுதான் இந்த ஊருக்குள்ள வந்து இருக்கேன் என சொல்கிறார். கணபதி இடம் நீயாவது எடுத்து சொல்லலாம் என கேட்க, அவர் வாய் திறக்காமல் இருக்கும் போது அனைவரும் வாயை திறந்து பேசு என சொல்ல வாயிலிருந்து பன் வந்து விழுகிறது. இதனால் ஊர் மக்கள் பொய்யாக உண்ணாவிரதம் இருப்பதாக நினைத்து இருவரையும் திட்டி செல்கின்றனர்.

கணபதி கூறிய உண்மை
கணபதியின் செயலை பார்த்து பாரதி கணபதியை தீட்டியதால் கணபதி அந்த இடத்தை விட்டு விலகி தனியாக போய் இருக்கிறார். அப்போது அங்கே வரும் கண்ணம்மா கணபதியிடம் இப்படி எல்லாம் பண்றது நல்லா இல்லை. ஒழுங்கா ஊரு போய் பிழைக்கிற வேலையை பாருங்க என எச்சரிக்கிறார். அதற்கு சத்தியமா பாரதி இன்னும் பச்ச தண்ணி கூட குடிக்கல என்ற உண்மையை கூறுகிறார். பிறகு பாரதியிடம் கணபதி நான் ஊரு பக்கம் போறேன் என சொல்ல பாரதி அவரை தடுத்து நிறுத்தி கூடவே இருக்குமாறு கூறுகிறார். அழைத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications