பாரதியிடம் கெஞ்சும் கண்ணம்மா... ஊர்காரர்களின் எதிர்பாராத முடிவு.. கடைசியில் எதிர்பாராத சீரியல் முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
பாரதியிடம் லட்சுமி ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதை ஹேமா பார்த்து விட லட்சுமி கடைசியில் சமாளித்து இருக்கிறார்.
பூஜாவின் உடல் நிலை திடீரென சரி இல்லாமல் போகவே கண்ணம்மா பாரதியிடம் பேசி பாரதியை மருத்துவம் பார்க்க அழைத்து இருக்கிறார்.
பூஜாவுக்கு பாரதி மருத்துவம் பார்த்ததை தெரிந்து கொண்ட ஊர்காரர்கள் கண்ணம்மாவை திட்டுகிறார்கள்.

ஹேமாவின் சந்தேகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் எபிசோடின் ஆரம்பத்தில் பாரதி உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் உட்கார்ந்து இருக்க லட்சுமி பாரதியிடம் சைகையில் நீங்கள் சாப்பிடாமல் இருப்பது பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. நான் எப்படியாவது சாப்பாடு எடுத்துக் கொண்டு வரவா என்று கேட்க? அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பின்னாடியே ஹேமா வர பாரதி எங்கேயோ பார்த்த மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார். பின்பு லட்சுமி இடம் நீ டாக்டரிடம் பேசினியா? என்று ஹேமா கேட்க லட்சுமி கோபமாக இருப்பது போல நடித்துவிட்டு செல்கிறார். லட்சுமி மனசு மாறிட்டாலோனு நினைச்சேன் நம்மள விட லட்சுமி கோவமா தான் இருக்கா என்று ஹேமாவும் சமாதானம் அடைகிறார்.

பாரதியின் பாட்டு
இரவு அனைவரும் தூங்குவதற்காக படுக்கும் போது பாரதி கண்ணம்மாவை நினைத்து பாட்டு படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது தாமரை வெளியே பாட்டு சத்தம் கேட்கிறது, உன் பெயரை சொல்லி தான் பாட்டு படிக்கிறாங்க, நான் இதை சினிமாவிலும் கேட்கவில்லையே என்று சொல்ல அதற்கு கண்ணம்மா இது நாங்க சந்தோஷமாக இருக்கும்போது ஒரு நாள் உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா? என நான் கேட்டேன். அதற்கு ஒரு வாரமாக யோசித்து இதை எழுதினார் என்று சொல்ல, தாமரை நீ டாக்டர் மேல உண்மையில் கோவத்தில் தான் இருக்கியா? இல்ல டாக்டர் உன்னிடம் கெஞ்ச வேண்டும் என்று நினைக்கிறாயா? என கேட்க கண்ணம்மா தூங்குங்க அக்கா என்று தாமரையை கூறிவிட்டு படுத்து கொள்கிறார்.

பூஜாவுக்கு ஏற்பட்ட மயக்கம்
அடுத்த நாள் காலையில் கண்ணம்மா வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டிருக்கும்போது பாரதி விசில் அடித்து கொண்டிருக்கிறார். பின்பு கண்ணம்மா பாரதியை அருகில் சென்று திட்டும்போது மயக்கம் போட்டு விடவே பாரதியிடம், கண்ணம்மா இது நடிப்பா என்று திட்டிக் கொண்டிருக்கும் போது கணபதி வந்து பாரதியை தண்ணீர் தெளித்து எழுப்பி விடுகிறார். பின்பு இளவெயிலில் ரொம்ப நேரம் நின்னதால் இப்படி ஆகி இருக்கும் என பாரதி கூறுகிறார். பின்பு கண்ணம்மா அந்த இடத்தை விட்டு சென்று விடவே பூஜா திடீரென மயக்கம் போட்டு எழாமல் இருக்கவே, தாமரை கதறி அழுது கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா பாரதியை மருத்துவம் பார்க்க அழைக்க பாரதி சென்று பூஜாவை செக் செய்து பார்த்துவிட்டு ஆம்புலன்ஸ் வர வைத்து ஆம்புலன்ஸில் வைத்து பூஜாவிற்கு மருத்துவம் பார்க்கிறார்.

ஊர்க்காரர்களின் திட்டல்கள்
அப்போது ஊர்காரர்கள் அங்கே வந்து அந்த டாக்டரிடம் மருத்துவம் பார்க்க கூடாது என்று நாம் கட்டுப்பாட்டு வைத்திருக்கிறோம். கண்ணமாவே போய் அவரை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். கண்ணம்மா கூட்டிக்கொண்டு வந்ததால் தான் பாரதி மருத்துவம் பார்க்க தொடங்கி இருக்கிறார். இது நமக்கு செய்யும் அவமரியாதையாக இருக்கிறது என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, தாமரை அழுது கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பூஜாவுக்கு மூச்சு வந்து விடுகிறது. பின்பு ஆம்புலன்ஸ் விட்டு கீழே இறங்கி வந்ததும் தாமரை குழந்தை கண் முழித்து விட்டாளா? என கேட்ட இன்னும் சில நேரங்களில் கண் முழித்து விடுவாள், அவள் சரியானதும் நான் சில டெஸ்ட்களை எடுத்துவிட்டு பிறகு ட்ரீட்மென்ட் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு செல்ல ஊர்காரர்கள் இன்று குழந்தைக்கு ரொம்பவே அவசரம் என்கிறதால் நாங்கள் உன்னை விட்டு விடுகிறோம். ஆனால் நீ நாளைக்கு ஊரை விட்டு கிளம்பி போய் விட வேண்டும் என்று வார்னிங் கொடுத்து அதுமட்டுமல்லாமல் நீ உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் இந்த ஊருக்கு ஹாஸ்பிடல் வந்து விடுமா நாங்கள் எத்தனையோ முறை என்னென்னமோ செய்தாச்சி இன்னும் வரவில்லை என்று கூறி விட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications