மீண்டும் பழையப்படி திரும்பிய பாரதி..கடைசியில் இப்படி ஆகிவிட்டது.. பாரதிகண்ணம்மாவில் புது ட்விஸ்ட்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த புது திருப்பம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
ஒரு பக்கம் இது தானா?? என்று சலிப்பு தட்டி விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

வருடங்களை கடந்த சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து வருடக் கணக்கை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் டிஆர்பி சீரியலுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதனால் இதில் இருக்கும் ஒரு ட்விஸ்ட் உடைத்து விடாமல் பல வருடங்களை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஒரு டிஎன்ஏ டெஸ்ட்டில் முடிந்துவிடும் விஷயத்தை பல வருடங்களாக இழுத்துக் கொண்டு இருப்பதை பார்க்கும் போது ரசிகர்கள் பலருக்கும் வெறுப்பாக இருந்தாலும் கதைக்களம் ரசிகர்கள் விரும்பும் வகையில் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தற்போது கூட பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் விவகாரத்திற்காக கோர்ட்டில் அணுகி இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியதால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில கண்ணம்மா தப்பு செய்யவில்லை என்று ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் பாரதிக்கு ஒவ்வொரு செயல்களும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதனால் பாரதி திருந்தி விடுவாரா?? கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வாரா?? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

பாரதியின் சஸ்பென்ஸ் கேள்வி
இந்த நிலையில் இந்த வாரத்தில் ப்ரமோக்களில் பாரதி தான் உன்னோடு மீண்டும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ தொடங்க இருக்கிறேன்.. ஆனால் அதற்காக ஒன்று செய்ய வேண்டுமென்று சஸ்பெண்ட் கொடுத்திருந்தார். அதற்கான விடை என்ன என்பது இன்று இரவு எபிசோடில் தெரியும் அது லட்சுமி அதாவது கண்ணம்மாவின் மகள் தனக்கும் கண்ணமாவிருக்கும் பிறந்த குழந்தை இல்லை என்று மட்டும் நீ ஒத்துக்கொள்ளவேண்டும். அப்படி உன்னுடைய தவறை நீ ஒத்துக் கொண்டால் நான் உன்னோட கடந்த கால கசப்புகளை மறந்து மீண்டும் சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்குகிறேன். லட்சுமியையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டதும் கண்ணம்மா என்ன சொல்லப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் கண்ணம்மா கையெடுத்துக் கும்பிட்டு விட்டு கோபத்தோடு வீட்டைவிட்டு கிளம்புகிறார்.

வழக்கமாக நடைபெறுவது தான்
கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்பும் போது வழக்கமாக நடைபெறுவதாக இருந்தாலும் தற்போது வழக்கம் போல வீட்டில் உள்ள அனைவரும் வந்து கண்ணம்மாவை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களின் கையை உதறிவிட்டு கண்ணம்மா கோபத்தோடு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் அனைவரும் பாரதியை வழக்கம்போல குறைகூறி வருகின்றனர். ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த எபிசோடு இப்படி மாறிவிட்டது என்பது பலருக்கும் சலிப்பாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர். இன்னும் தெளிவாக காரணத்தை கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications