முடிவுக்கு வந்தது டிஎன்ஏ பிரச்சனை.. பாரதியின் குதர்க்கமான பேச்சு.. கண்ணம்மா எடுத்த இறுதியான முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிஎன்ஏ டெஸ்ட் இன்னும் ஒரு சில நாட்களில் வந்துவிடும் என்று டாக்டர் மீண்டும் உறுதி கூறியிருக்கிறார்.
மீண்டும் நாம் எங்கேயாவது போய் நன்றாக சேர்ந்து வாழுவோம் என்று கண்ணம்மா பாரதியிடம் வைத்த வேண்டுகோளுக்கு பாரதி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஹேமா மற்றும் லட்சுமிக்குள் சண்டை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ஸ்கூலில் இருந்து வெளியே வந்த ஹேமா மற்றும் லட்சுமி ஆட்டோக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நான் சமையல் அம்மாவை பார்த்து பலமுறை என்னுடைய அம்மாவாக இருக்கக்கூடாதா என்று நினைத்தேன் ஆனால் இப்போது என்னுடைய அம்மாவே அவங்க தான். ஆனால் உனக்கு முன்ன குட்டியே தெரியுமில்ல என்னோட அம்மா உன்னுடைய அம்மா ஒன்றுதான் என்று. ஆனா நீ என்னிடம் சொல்லவே இல்லை என்று ஹேமா லட்சுமியுடன் கோபப்பட்டு இருக்கிறார்.

கடுப்பான கண்ணம்மா
அடுத்ததாக பாரதி ஹேமாவை நினைத்து மருத்துவமனையில் இருந்து பீல் பண்ணி கொண்டிருக்கிறார். அப்போது கிளினிக்கில் இருந்து போன் வருகிறது. மெஷின் ரிப்பேர் செய்யப்பட்டு விட்டது .இன்னும் இரண்டு நாட்களில் ரிப்போர்ட் கிடைத்துவிடும் என்று கூறுகின்றனர். அப்போது கண்ணம்மா வந்து பாரதியின் அடுத்த மீட்டிங் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் .அப்போது பாரதி கண்ணம்மாவிடம் ஹேமாவை பற்றி பேசுகிறார். ஹேமா வீட்டை விட்டு வெளியே வந்து விட்ட பிறகு ஹேமாவினுடைய நினைவாகவே இருக்கிறது என்று உருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார் .அப்போது கண்ணம்மா நீங்க ஹேமாவை பற்றி மட்டுமே பேசுகிறீர்களே? அப்போ லட்சுமி என்று கேட்கிறார். லட்சுமியும் உங்களுடைய பொண்ணு தானே? லட்சுமியை மட்டும் எப்படி உங்களால் பிரிந்திருக்க முடிகிறது என்று கேள்வி கேட்கிறார்.

மீண்டும் குழப்பத்தில் பாரதி
கண்ணம்மாவின் கேள்விகளுக்கு குழப்பத்தில் இருக்கும் பாரதி பதில் சொல்லாமல் இருக்கிறார் .அப்போது உங்களுக்கு ஹேமாவை மட்டும் அல்ல லட்சுமி இருக்கிறார் .நானும் இருக்கிறேன் நாம எங்கேயாவது போய் ஒன்றாக வாழலாம், சந்தோஷமாக வாழலாம் என்று கூறிக் கொண்டிருக்கிறார் .ஏற்கனவே வெண்பா தன்னை ஏமாற்றி விட்டதால், உயிர் தோழியாக நினைத்து இருந்த வெண்பாவே இப்படி ஏமாற்றி விட்டால் அதனால் யாரையும் நம்ப வேண்டாம் டி என் எ ரிசல்ட் வரட்டும் என்று அதற்கு பிறகு தன்னுடைய முடிவை சொல்லலாம் என பாரதி இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று மட்டும் கண்ணம்மாவிடம் கூறுகிறார்.

கண்ணம்மாவின் இறுதி முடிவு
கண்ணம்மா நீங்கள் ஒருவேளை மனசு மாறி திரும்பி வந்தால் உங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அப்போது எனக்கு இருக்குமா? என்பது தெரியாது என்று கூறுகிறார். அதே நேரத்தில் வீட்டில் லட்சுமி, ஹேமாவிடம் பேச முயற்சி செய்கிறார்.ஆனால் ஹேமா நீ என்னிடம் பேசாதே என்று விலகி செல்கிறார்.உன் மீது கோபத்தில் இருக்கிறேன், நீ என்னிடம் பொய் சொன்னதே என்னால் ஏத்துக்க முடியாது என்று கோபத்தோடு எழுந்து வெளியே சென்று விடுகிறார்.இத்துடைய இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications