திருமணத்திற்கு பிறகும் அடங்காத வெண்பா செய்த செயல்.. மாட்டிக்காத பாரதி.. இதுதான் எதிர்பார்த்த முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் முடிவடைய போகின்றது .இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் மீண்டும் வெண்பாவின் புது பிளானுக்கு பாரதி சிறப்பான பதிலடி கொடுத்திருக்கிறார்.
குடும்பத்தினர் அனைவரும் வெறுத்து ஒதுக்கி விட்டனர் என்ற வேதனையில் இருக்கும் பாரதி கடைசி நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார்.
ரோஹித்தோடு திருமணம் நடைபெற்றாலும் மீண்டும் பாரதியோடு சேர வேண்டும் என்பதற்காக வெண்பா போட்ட புது நாடகம் ப்ளாஷ் ஆகிவிட்டது.

கர்ப்பம் கலைந்து விட்டது
பாரதிகண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் மருத்துவமனையில் சேர்த்து இருக்கும் வெண்பாவிற்காக ரோஹித் மற்றும் ஷர்மிளா வெளியே காத்திருக்கின்றனர் .அப்போது டாக்டர் வந்து வெண்பா ஒன்றரை மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததால் வயிற்றில் அடிபட்டு அவர் கர்ப்பம் கலைந்து விட்டது. வெண்பாவிற்கு காலிலும் கொஞ்சம் அடி இருக்கிறது என்று கூறுகிறார் இதை கேட்ட ரோஹித் கதறி அழுது கொண்டிருக்கிறார்.

ஹேமாவுக்கு லட்சுமியின் ஆறுதல்
அடுத்ததாக பாரதி வீட்டில் சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவரும் பேப்பர் படித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வந்த பாரதி அவர்கள் இருவருடைய முகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இருவரும் பாரதியை கண்டு கொள்ளாமல் அவர்களுடைய வேலையில் கவனமாக இருக்கின்றனர். அதனால் ஹேமாவின் ஷூவை எடுத்து துடைத்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஹேமா ஸ்கூலுக்கு கிளம்புகிறேன் என்று சொன்னதும் நான் கொண்டு விடுகிறேன் என்று பாரதி கூறுகிறார். வேண்டாம் நான் சித்தப்பா உடன் சென்று விடுகிறேன் என்று அகிலோடு ஹேமா ஸ்கூலுக்கு செல்கிறார். அங்கே லட்சுமி இடம் எனக்கு அந்த வீட்டில் இருப்பதற்கு பிடிக்கவே இல்லை .நான் எங்கயாவது போய்விடலாம் என்று இருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு லட்சுமி நீ எதற்கு எங்கேயாவது போகனும், எங்க வீட்டுக்கு வா, என். கூடவே இருந்துரு என்று கூறுகிறார் அதற்கு ஹேமா அப்போ சமையல் அம்மா வேலை முடித்து வந்ததும் வீட்டுக்கு கூட்டிட்டு வா நான் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறுகிறார்.

வெண்பாவின் புது நாடகம்
அடுத்ததாக பாரதி மருத்துவமனைக்கு இருக்கிறார். அங்கே பழைய ஹாஸ்பிடலில் வேலை செய்த வாட்ச்மேனுக்கு அடிபட்டு மருத்துவமனைக்கு வருகிறார். அவருடைய உடல் நிலையை குறித்து வாட்ச்மேன் மனைவியிடம் பாரதி பேசிக் கொண்டிருக்கிறார். பாரதியை அவர் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் .அதை நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து ஒரு பேஷண்டுக்கு அபார்ஷன் ஆகி இருக்கிறது இப்போ திடீரென மூச்சு இழுக்கிறது, வந்து பாருங்கள் டாக்டர் என்று கூறுகிறார். உடனே பாரதியும் யார் என்று பார்ப்பதற்காக ஓடுகிறார். அங்கே வெண்பாவிற்கு மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டிருக்கிறது .அதை பார்த்ததும் வெண்பாவா? இவளுக்கெல்லாம் ஒண்ணுமே செய்யாது .இவளால் தான் பலர் மூச்சு நிற்க போகுது என்று கூறுகிறார் .அடுத்தது வெண்பாவை போய் பார்க்கும், போது வெண்பா பாரதியிடம் என்னை மன்னித்துவிடு பாரதி என்று அழுது சீன் போட்டு மீண்டும் நடிக்கிறார்.

முழு வில்லியாக மாற்றம்
உன்னால் என்னுடைய அம்மா ,அப்பா, தம்பி, என்னுடைய மகளையும் நான் இழந்து விட்டேன். இனி உன்னுடைய நடிப்பை நம்பி நான் ஏமாற மாட்டேன். என்னுடைய முகத்திலே நீ முழிக்காதே என்று பேசுகிறார் .அதற்கு வெண்பா நான் தெரியாமல் செய்துவிட்டேன், உன்மேல் இருக்கும் பாசத்தில் தான் நீ என் கூடவே இருக்க வேண்டும் என்று அப்படி செய்து விட்டேன். எனக்கு திருமணம் ஆனாலும் என்னால் உன்னை மறக்க முடியாது என்று அழுது கொண்டிருக்கிறார் .ஆனால் பாரதி வெண்பாவை கண்டுகொள்ளாமல் கிளம்பி போய்விட்டார். அதற்கு பிறகு வெண்பா என்னிடமிருந்து நீ விலகி விடலாம் என்று நினைக்காத பாரதி,நான் எப்போதுமே உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று முழு வில்லியாக மாறி பேசிக் கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிந்துவிட்டது.












Click it and Unblock the Notifications