பாண்டியன் ஸ்டோரில் என்ட்ரி ஆகும் பாரதிகண்ணம்மா "அருண்”.. இனி கதை இதுதான்.. எதிர்பார்க்காத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதியதாக பாரதி கண்ணம்மா சீசன் ஒன்றில் நடித்த நடிகர் அருண் அறிமுகமாக போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதை இனி எப்படி பயணிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கும் நிலையில் தற்போது டாக்டர் பாரதியாக நடிகர் அருண் அறிமுகம் ஆகப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தனம் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஆப்ரேஷன் செய்வதற்காக டாக்டர் பாரதி கேரக்டரில் நடிகர் அருண் மீண்டும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறிமுகமாக போகிறாராம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது உணர்வு பூர்வமான கதை திருப்பத்தோடு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருப்பம் கொண்டு வருவது வழக்கமாக வைத்திருக்கிறது. அதுவும் சில வாரங்களுக்கு முன்பு முல்லை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறி இருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து முல்லையும், குழந்தையும் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்த நேரத்தில் அடுத்ததாக தனத்திற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதுவும் மார்பக புற்றுநோயின் இரண்டாவது கட்டத்தில் இருக்கும் தனம் அந்த நோயைப் பற்றி வீட்டில் யாரிடமும் கூறாமல் இருக்கிறார். அதே நேரத்தில் தனத்திற்கு சீக்கிரமாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர் கூறியிருக்கிறார்.
அதற்கு முன்பு குழந்தையை ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும் வீட்டில் சீக்கிரமாக சொல்லிவிடுங்கள் என்று டாக்டர் கூறியிருக்கிறார். ஏற்கனவே தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்பதை வீட்டில் சொல்லாமல் வைத்திருந்த நிலையில் தான் இப்போது அது இரண்டாவது கட்டத்தில் மாறி இருக்கிறது. இந்த நிலையில் மீனாவிற்கு தெரிந்த இந்த உண்மையை வீட்டில் சொல்லலாம் என்று பார்த்தாலும் தனம் ஒவ்வொரு முறையும் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல தனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து கொண்டு இருக்கும் தனம் தனக்கு ஏதாவது ஆவதற்கு முன்பு சீக்கிரமாக வீட்டில் எல்லாவற்றையும் தானே சரி செய்து விட்டு போக வேண்டும் என்று நினைத்து ஐஸ்வர்யாவின் வளைகாப்பை அவசர அவசரமாக நடத்தி முடித்து இருந்தார். அதை தொடர்ந்து இப்போது வீட்டு வேலையை சீக்கிரமாக முடித்து கிரகப்பிரவேசம் வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் இது குறித்து அதிகமாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் திட்டப்பட்டு வருகிறது. இந்த மாதிரி நெகட்டிவ் ஆகவும், அபத்தமாகவும் கதையை கொண்டு போய் இருப்பது இந்த சீரியலுக்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாதிரி புற்றுநோய் ட்ராக் வைத்தால் உணர்வு பூர்வமான திருப்பமாக இருக்கும் என்று இவர்கள் செய்வது பார்ப்பதற்கு எரிச்சலாக இருப்பதாக ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இது எத்தனை நாளைக்கு பிறகு வீட்டிற்கு தெரிய வந்து... தனத்திற்கு ஆபரேஷன் செய்யப் போகிறாரோ என்று தெரியவில்லை. ஆனாலும் தனத்திற்கு ஆபரேஷன் செய்து அவருடைய உயிரை காப்பாற்ற போவது பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகத்தில் நடித்த நடிகர் அருண் தான் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு அருண் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கும் நிலையில் இதல் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications