தன்னை அசிங்கப்படுத்திய பாண்டிக்கு கண்ணம்மா கொடுத்து அவமானம்..கோபத்தில் பாரதி..எதிர்பாராத கடைசிமுடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை தன்னோடு தொடர்பு படுத்தி பாண்டி ஊருக்குள்ளே தப்பாக வதந்திகளை பரப்பி விட்டு இருக்கிறார்.
தன்னைப் பற்றிய வதந்திகளை தெரிந்து கொண்ட கண்ணம்மா பாண்டிக்கு ஊர்க்காரர்களின் முன்பு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கண்ணம்மாவை தப்பாக ஊர்காரர்கள் பேசுவதை அறிந்த பாரதி கடும் கோபத்தில் இருக்கிறார்.
கடைசி நேரத்தில் கண்ணம்மா பாண்டி இடம் பேசும் வசனங்களை கேட்டு பாரதி மெய்மறந்து பாராட்டுகிறார்.

கண்ணம்மாவுக்கு தெரிய வந்த உண்மை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், கண்ணம்மாவின் அப்பா, நீ உன் புருஷனோடு சேர்ந்து வாழ் என்றும் இல்லையென்றால் நாம இந்த ஊரை விட்டு போய்விடலாம் என சொல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். எதற்காக இப்படி பேசுகிறீர்கள் என கேட்க ஊர் முழுவதும் கண்ணமாவை பாண்டியின் வப்பாட்டி என பேசும் பேச்சை பற்றி கூறுகிறார். யார் அப்படி சொன்னது என்று கண்ணம்மா கோபத்தோடு கேட்க, ஊரே அப்படிதான் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று கண்ணம்மாவின் அப்பா கூற இது அந்த பாண்டியின் வேலையாக தான் இருக்கும் என்று தாமரையும் கூறுகிறார்.

பாரதிக்கு தெரியும் செய்தி
இதை கேட்டா கண்ணம்மா அந்த பாண்டிக்கு இருக்கு என சொல்லி கோபமாக கிளம்ப, மறுபக்கம் பாரதி கணபதியிடம் ஏன் டீக்கடையில் அவங்க அப்படி பேசுறாங்க? என்ன பேசுறாங்க? கண்ணம்மா பத்தி தப்பா பேசுறாங்க என கேட்க கணபதியின் முகம் மாறுகிறது.அதே நேரத்தில் தாமரை வந்து பாரதியிடம் நடந்த விஷயங்களை சொல்ல அந்த பாண்டிக்கு இருக்கிறது என பாரதியும் மறுபக்கம் கோபமாக கிளம்பி செல்கிறார்.

கண்ணம்மாவின் சவால்
கண்ணம்மா கோபத்தில் தெருவில் நடந்து கொண்டு சென்று கொண்டிருக்கும்போது, அங்கே எதிரவரும் பாண்டியின் நண்பன் ஒருவன் பாண்டி மேல நீ கைய வச்ச, ஆனா அவன் உன் மேல கை வைக்காம மூச்சுக்காத்து படாமலே உன்னை வப்பாட்டியா ஆக்கிட்டேன். இதுதான் ஆம்பள பவர் என சொல்ல, கண்ணம்மா ஆம்பள பவர் என்னன்னு நீ சொல்லிட்ட பொம்பள பவர் என்னன்னு நான் காட்டுவேன். பாண்டி மேலே கை வைக்காமலே, அவனை மிரட்டாமலே நடந்த எல்லா விஷயத்தையும் சொல்ல வைக்கிறேன் என்று சவால் விடுகிறார். இதை பார்த்து பாரதி சந்தோஷப்படுகிறார்.

அதிர வைத்த கண்ணம்மா
பிறகு குஸ்தி போட்டியில் பாண்டி ஜெயித்ததாக அறிவிக்க அப்போது அவன் 3 வருஷமா தொடர்ந்து நான் தான் ஜெயித்திட்டு இருக்கிறேன். இனியும் நான் தான் ஜெயிப்பேன் என்னை எதிர்த்து சண்டை போட எவனுமே இல்லையா? இந்த சுத்துப்பட்டு கிராமத்தில் ஆம்பளையே கிடையாதா? என கேட்க அப்போது கண்ணம்மா கைதட்டியபடி என்ட்ரி கொடுக்கிறார். அதன் பிறகு அங்கு வேடிக்கை பார்க்கும் எல்லோரும் கண்ணம்மாவை தப்பாக பேச ஆமா பாண்டி என்னை வச்சுக்கிட்டு இருக்கிறது உண்மைதான் என கண்ணம்மா சொல்கிறார். அதைக் கேட்டு பாரதி அதிர்ச்சி அடைகிறார்.

பாண்டிக்கு சரியான பதிலடி
ஆனா அதைவிட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும் பாண்டி என்னமோ என் மேல ஆசைப்பட்டு தான் வந்தாரு, ஆனா அவர் உண்மையான ஆம்பளை கிடையாது. ஆம்பளைன்னா வெறும் நாலு பேர தூக்கி போட்டு அடிக்கிறது கிடையாது. அது வேற விஷயம் அது பாண்டிக்கு கிடையாது என சொல்ல, எல்லோரும் என்ன இந்த பொண்ணு இப்படி சொல்லுது என அதிர்ச்சி அடைகின்றனர் கண்ணம்மாவின் திடீர் அதிரடியை பார்த்து பாண்டி அதிர்ச்சியாகி நிற்கிறார். பாரதி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications