சீரியல் ஒளிபரப்பு ஆவதற்கு முன்பே பாரதிகண்ணம்மா 2கதாநாயகன் வெளியிட்ட பதிவு..கடைசி நேரத்தில் இப்படியா?
பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டாவது பாகத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிபு சூர்யன் உங்கள் அனைவரையும் பாரதியாக மகிழ்விப்பதாக உறுதி அளிக்கிறேன் என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீசன் இரண்டின் கதாநாயகன் சிபு சூர்யன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சிபு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீசன் இரண்டிலும் தனக்கு ஆதரவு தரும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இரண்டாவது சீசன்
விஜய் டிவியில் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா முதல் சீசன் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. புதிய அத்தியாயத்தோடும், கதைக்களத்தோடும் இன்று தொடங்கும் பாரதி கண்ணம்மா சீசன் 2 ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பும் நெகட்டிவ் கருத்துக்களும் இருந்து வருகிறது. ஒரு பக்கம் பாரதி கண்ணம்மா சீசன் 2 முதல் பாகத்தை போன்று இல்லை என்று பிரமோ பார்க்கும் போதே தெரிகிறது. பாரதியாக சன் டிவி ரோஜா சீரியலின் கதாநாயகன் சிபு சூர்யன் நடிக்கிறார். இவரை ரசிகர்கள் அதிகமாக அர்ஜுன் சார் என்று செல்லமாக அழைத்து வருவார்கள்.

ரசிகர்களின் கருத்துக்கள்
ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியல் முதல் பாகம் 4 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த இரண்டாவது பாகம் இன்னும் எத்தனை வருடங்களை இழுத்துக் கொண்டு செல்ல இருக்கிறது என்று ஒருத்தரப்பு ரசிகர்கள் இப்போதே கேள்வியை எழுப்ப, இன்னும் ஒரு சில ரசிகர்கள் இது ஏற்கனவே ஒரு கிரிஞ்ச் சீரியல் இதில் வந்து சிபு நடிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் இன்னும் சில ரசிகர்கள் ரோஜா சீரியலில் அர்ஜுன் தான் சின்னத்திரை சீரியல்களின் கிரிஞ்ச் கதாநாயகன். அவர் எப்படி இந்த சீரியலில் நடித்தால் இந்த சீரியல் பார்க்கிற மாதிரி இருக்குமா? என்று பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணமாக இருக்கிறது.

அந்த மாதிரி இருக்குமா
ஆனாலும் பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகத்திலும் அதே வினுஷா தேவி தான் கண்ணம்மாவாக நடிக்கிறார். இருவருக்கும் ப்ரோமோவிலே காதல் நவரசம் கொட்டுவதை பார்த்த நெட்டிசன்கள் இப்போதே கலாய்க்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே சின்னத்திரை சீரியல்களில் அதிகமான காதல் காட்சிகளும் ரொமான்ஸ்சும் இடம் பெற்ற சீரியல் என்றால் அது ரோஜா சீரியலாக தான் இருக்க முடியும் அதே கதாநாயகன் வந்தால்
பாரதி கண்ணம்மாவும் இனி அந்த மாதிரி தான் இருக்குமோ என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

உறுதி கூறுகிறாராம்
இந்த நிலையில் சீரியல் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நேரத்தில் முதல் முறையாக சிபு சூர்யன் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் எனது அடுத்த திட்டமான பாரதி கண்ணம்மா 2 சீரியலை பிப்ரவரி 6 முதல் விஜய் டிவியில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வரை எனது பயணத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இதற்கு உங்கள் அனைவரின் அன்பையும்,
ஆதரவையும், ஆசிகளையும் வேண்டுகிறேன். உங்கள் அனைவரையும் பாரதியாக மகிழ்விப்பதாக உறுதி அளிக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதுவரைக்கும் இந்த சீரியலில் தான் நடிப்பதை பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது இவர் கடைசி நேரத்தில் வெளியிட்ட பதிவை நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கும் நேரத்தில், இவருடைய ரசிகர்கள் பலரும் பாராட்டி இந்த சீரியலுக்காக நாங்கள் வெயிட்டிங் என்று கருத்து கூறி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications