பாரதி கண்ணம்மா 2: ஜெயிலில் இருந்து வரும் கண்ணம்மா.. ஊதாரியாக சுற்றும் பாரதி..முதல் நாளே வில்லத்தனம்!
பாரதி தன்னுடைய பிறந்தநாளிலும் குடித்துவிட்டு, ஊர்காரர்கள் இடம் பாசமாக நடந்து கொள்ளும் பணக்கார வீட்டு பையனாக இருக்கிறார்.
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் நாள் எபிசோட்டில் பாரதி பணக்கார வீட்டு பையனாகவும் குடித்துவிட்டு ஊர் சுற்றும் நபராகவும் இருக்கிறார்.
ஊர்க்காரர்களிடம் பாசமாக நடந்து கொள்ளும் பாரதி தன்னுடைய வீட்டில் பணக்காரர்கள் ஏழை என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்று கூறுகிறார்.
கண்ணம்மா சித்ரா என்கிற பெயரில் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகின்றார்.

பணக்கார குடும்பத்து பாரதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 எபிசோட்டின் ஆரம்பத்தில் அன்னவாக்கம் என்ற ஒரு ஊரில் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாரதி தன்னுடைய 25 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவர் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், பாரதியின் அப்பா இறந்து போயிருக்கும் நிலையில் அவருடைய அம்மா பாரதியின் மீது பாசமாக இருக்கிறார். அப்பாவின் பிசினஸை பாரதி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பாரதி என் அம்மா நினைக்கிறார்.

தவறான சகவாசம்
தன்னுடைய 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் பாரதிக்கு வாழ்த்து சொல்ல தொழிலதிபர்கள், ஊர் பெரிய மனுஷர்கள், பொதுமக்கள் என அனைவரும் காத்துக் கொண்டிருக்க பாரதி ரூமில் ஒவ்வொரு பொருள்களையாக பார்த்துப் பார்த்து பிடித்ததை தேர்வு செய்து ரெடியாகிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் பாரதியின் அத்தனை மகன் விஜய் பெரிய மனுஷங்க நிறைய பேர் இருக்காங்க கூட்டத்தை பார்த்து நீ தடுமாறி விடுவ அதனால இந்த சரக்கு அடி என்று பாரதிக்கு ஊத்தி கொடுக்குறார். ஆரம்பத்தில் மறுத்த பாரதியும் பிறகு இது வழக்கமாக நடப்பது தானே என்று லைட்டாக கொடு என்று கேட்டு வாங்கி குடிக்கிறார்.

குடித்துவிட்டு சமத்துவம்
குடித்துவிட்டு டிரஸ் மாற்றிக் கொண்டு கீழே வந்த பாரதி அத்தை ( வில்லியாக இருக்கிறார். அவர் ஏற்கனவே சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நபர்தான்)அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார்.அப்போது அவருடைய அம்மா இன்னைக்கும் குடிச்சு இருக்கியா? என கேட்க, எல்லோருக்கும் கேட்டு விடப் போகுது சத்தம் போடாதீங்க என்று சொல்லிவிட்டு எல்லோரிடமும் கை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு ஊர் மக்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி அவர்களோடு குத்தாட்டம் போட்டு ஆடுகிறார். பிறகு அவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் என்று கூறுகிறார். அப்போது சாப்பாடு ஊர்காரர்களுக்கு தனியாகவும், பெரிய மனுஷர்களுக்கு தனியாகவும் இருப்பதாக சொல்ல, அப்படியெல்லாம் இருக்கக்கூடாது எல்லோரும் வீட்டுக்குள் சென்று சாப்பிடுங்கள் என்று சமத்துவம் பேசிக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார்.

நல்ல மனசு இருந்து எதுக்கு
பாரதி கிளம்பியதும் பாரதிக்கு நல்ல மனசு ஊர்காரர்கள் எல்லோரும் ஒன்றாக பார்க்கிறார் என்று உதவியாளர் சொல்ல, நல்ல மனசு இருந்தும் இப்படி சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து ஊதாரியா சுத்திக்கிட்டு இருக்கானே என பாரதியின் அம்மா வருத்தப்பட, உதவியாளர் கல்யாணம் பண்ணி வச்சா எல்லாம் சரியா போய்விடும் என்று கூறுகிறார். அதற்கு பாரதிக்கு அம்மாவும் நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். பிறகு பாரதியின் மனைவியாக போவது யாரோ எங்கே இருக்கிறாரோ என்று அவர்கள் யோசிக்க அப்படியே ஜெயிலில் சித்ரா என்கிற பெயரில் கண்ணம்மா காட்டப்படுகிறார்.

ஜெயிலுக்குள்ளே வில்லத்தனம்
இன்னைக்கு உனக்கு ரிலீஸ் என்ன சித்ராவை வெளியே அழைத்து வர அப்போது அவருக்கு எதிரே வரும் தனம் என்ற பெண் நீ சந்தோஷமாக வெளியே போறா, என்னை நிரந்தரமாக ஜெயிலுக்குள்ள வச்சுட்டா என கோபப்படுகிறார். அதற்கு சித்ரா ஜெயிலுக்குள் கஞ்சா விற்றால் உள்ளே தான் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். ஆனால் தனம் சித்ராவை முறைத்தபடி இருக்க பிறகு ஒரு வார்டன் சித்ராவை முறைத்தபடி திட்ட சித்ரா வெளியே அனுப்பி வைக்கப்படுகிறார். பிறகு தனமும் வார்டனும் சேர்ந்து சித்ராவை போட்டு தள்ள ஏற்பாடு செய்கின்றனர். இன்னைக்கு நைட் அவ கதையை முடித்து விடுவாங்க என்று தனம் சொல்வதோடு இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் 2 முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications