கண்ணம்மாவுக்காக பாரதி செய்த செயல்... வெண்பாவின் ஆட்டம் ஆரம்பம்.. சூடு பிடித்த சீரியல் கதை
கொலை செய்ய வந்த நபர்களிடம் சண்டை இட்டு பாரதி கண்ணம்மாவை காப்பாற்றுகிறார்.
சென்னை: பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலின் மார்ச் 16ஆம் தேதி எபிசோடில் கண்ணம்மாவிற்கு ரவுடிகளால் ஆபத்து வருகிறது.
ரவுடிகளிடமிருந்து பாரதி கண்ணம்மாவை காப்பாற்றுகிறார்.
பாரதியின் மீது கண்ணம்மாவிற்கு அவருக்கே தெரியாமல் காதல் ஏற்படுகிறது.

காப்பாற்றிய பாரதி
பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில், ரவுடி ஒருவர் கண்ணம்மாவை கத்தியால் குத்த வர கண்ணம்மா அவனை தடுத்து அவனிடம் போராடுகிறார். இந்த நேரத்தில் காரில் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த பாரதி போனில் சார்ஜ் இல்லாததால் வண்டியில் இருந்து ரூமிற்கு வருகிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா ரவுடி இடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க அங்கே வரும் பாரதி அந்த ரவுடியை அடித்து போலீசுக்கு தகவல் கொடுத்து அவனைப் பிடித்துக் கொடுக்கிறார்.

மனதிற்குள்ளே பேசும் கண்ணம்மா
பிறகு ரூமிற்கு வந்த பாரதி யார் காலிங் பெல் அடித்தாலும் யார் என்று கேட்க மாட்டியா? படிச்சிருக்க, இந்த அறிவு கூட உனக்கு இல்லையா? என்று திட்டுகிறார். நீ போன கொஞ்ச நேரத்திலேயே காலிங் பெல் அடிச்சது. அதனால நீ தான் இருக்கும் என்று திறந்தேன் என்று கண்ணம்மா சொல்ல, பாரதி சரி கதவை நல்லா சாத்திட்டு படுத்து தூங்கு. காலையில் வரேன்னு சொல்லி சார்ஜரை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். அப்போது கண்ணம்மா இங்கேயே இரு பாரதி என மனதிற்குள்ளே சொல்லிக் கொள்கிறார்.

கண்ணம்மாவின் சந்தேகம்
அதன்பிறகு கண்ணம்மா படுத்துக்கொள்ள திடீரென ரவுடி உள்ளே வந்து தன்னைக் கத்தியால் குத்துவது போல கனவு கண்டு அலறி அடித்து எழுந்து விட, வெளியில் யாரோ நடமாடுவது போலவே இருப்பதால் பயந்து போன கண்ணம்மா பாரதிக்கு போன் போட, பாரதியும் போன் சுவிட்ச் ஆப் என வருகிறது. இதனால் கண்ணம்மா ரவுடிகள் திரும்ப வந்துட்டாங்களா? என சந்தேகத்தோடு லென்ஸ் வழியாக வெளியே பார்க்க யாரும் இல்லாமல் இருக்கின்றனர்.

வருத்தத்தில் கண்ணம்மா
அதற்குப் பிறகு மெதுவாக கண்ணம்மா கதவை திறந்து பார்க்க கையில் இரும்பு கம்பியுடன் ரூமிற்கு வெளியே உட்கார்ந்து இருக்கிறார். எதுக்கு கதவை திறந்த என்ன ஆச்சு போய் படுத்து நன்றாகத் தூங்கு என்னை தாண்டி எவனும் வரமாட்டான் என சொல்லி கண்ணம்மாவை படுத்து தூங்கு என பாரதி சொல்கிறார். பாரதி இவ்வளவு நல்லவனா இருக்கானே, இது தெரியாம ரொம்ப காயப்படுத்தி விட்டேன் என கண்ணம்மா வருத்தப்பட்டு உள்ளே சென்று படுத்து தூங்கி விடுகிறார்.

பாரதிக்கு கொண்டாட்டம் தான்
கண்ணம்மா மறுநாள் காலையில் எழுந்து பார்க்க பாரதி அதே இடத்தில் உட்கார்ந்து அப்படியே தூங்குகிறார். பிறகு கண்ணம்மா குளிச்சு முடித்துவிட்டு பாரதியை எழுப்ப, பாரதி கண்ணம்மாவிடம் உன்னுடைய பாத்ரூம் நான் யூஸ் பண்ணிக்கட்டுமா என்று கேட்டு குளிக்கப் போகிறார். ட்ரெஸ்ஸை எல்லாம் எடுத்துக் கொண்டு போகும் பாரதி டவலை மட்டும் மறந்து விட, பாரதி என்ன செய்வது என தெரியாமல் பாத்ரூமில் இருந்து தவிக்க, கண்ணம்மா டவல் எடுத்து போகாததை பார்த்து டவலை எடுத்து கொடுக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications