பாரதிகண்ணம்மா முடிவடைந்ததும் வேறு சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பழைய பாரதி..அதற்குள் அடுத்த வாய்ப்பு?
பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைந்ததும் நடிகர் அருண் வேறு சீரியலில் நடிக்க வந்துள்ளார் என புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகன் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாரதிகண்ணம்மா சீரியல் முடிவடைந்த நிலையில் அந்த சீரியலில் கதாநாயகன் அருண் ஈரமான ரோஜாவே சீரியல் அணியினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் அருண் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முடிவுக்கு வந்த முதல் பாகம்
விஜய் டிவியில் கடந்த நான்கரை வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் பெருத்த எதிர்பார்ப்போடு கடைசி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று ஆரம்பத்தில் இருந்தே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கொண்டு இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திருப்பு முனைகளோடு இந்த சீரியல் பல வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வந்தது. நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்ட சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். இந்த நிலையில் தற்போது கடந்த சனிக்கிழமையோடு இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்தது.

புதிய சீரியலில் அறிமுகம்
இரண்டாவது பாகம் நேற்றிலிருந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் பாகத்தில் எத்தனை கதாநாயகிகள் மாறினாலும் ஒரே கதாநாயகனாக நடித்து வந்த அருண்பிரசாத் தற்போது அந்த சீரியலில் முடிவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நடிகர்களோடு புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைந்த பிறகு அருண் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க இருக்கிறாரா என்று பல்வேறு கேள்விகள் எழும்பிய வண்ணமாக இருக்கிறது.

அதே கதாநாயகி
ஏற்கனவே இரண்டாவது பாகத்தில் முதல் பாகத்தில் கண்ணமாவாக நடித்த அதே வினுஷா தேவி தான் நடிகை இருக்கிறார். அது மட்டும் அல்லாமல
இந்த இரண்டாவது பாகத்தில் வினிஷா தேவி இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. முதல் நாளில் வினுஷா தேவி சித்ராவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுவும் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அவர் வெளியாவது போன்று நேற்றைய எபிசோடு இருந்திருக்கிறது. இந்த நிலையில் அதே பாரதி இடம்பெறவில்லையே என்று சிலர் கேள்விகளையும் தங்களுடைய விருப்பங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

நெட்டிசன்களின் கருத்துக்கள்
அதே கண்ணம்மா இரண்டாவது சீசனில் தொடரும்போது அதே பாரதி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து கூறி வரும் நிலையில், இந்த சீரியலுக்கு அதிகமாக ஆரம்பத்தில் இருந்தே நெகடிவ் கருத்துக்களை கூறி வந்த நெட்டிசன்கள் ஏற்கனவே பாரதியிடம் இருந்து இப்போது தான் பாரதி கண்ணம்மா தப்பியிருக்கிறது. அடுத்ததாக அதே அருணிடம் ஈரமான ரோஜாவே சீரியல் மாட்டிக் கொண்டதா? என்று வழக்கமான தங்களுடைய பாணியில் கமாண்டுகளை அனுப்பி வருகிறார்கள்.
-
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications