Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த படத்தை இயக்கியதற்காக வீடு தேடி மிரட்ட வந்த 200 பேரு.. எல்லாம் ஒரு ஆக்சிடென்ட்.. சேரன் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் யதார்த்தமான இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வரும் சேரன் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் தான் எப்படி சினிமா வாழ்க்கைக்குள் நுழைந்தேன் என்பது பற்றியும் தன்னுடைய முதல் திரைப்பட இயக்கம் குறித்து அதனால் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

அந்த வகையில் முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஜாதி கொடுமை பற்றி பேசி இருந்ததால் இரவு நேரத்தில் தன் வீட்டிற்கு 400 பேர் வந்து மிரட்டியது குறித்தும் சேரன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Bharthi Kannamma Movie Experiences by Director Cheran

பொதுவாக ஆரம்பத்தில் இருந்தே நாம் ஒரு குறிக்கோளை இலட்சியமாக வைத்திருப்போம். ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அது தேவையா? என்ற ஒரு சிந்தனை வரும். அந்த மாதிரி தான் இயக்குனரும் நடிகருமான பிரபலமான சேரனின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. சிறு வயதிலிருந்து நடிக்க வேண்டும் என்று ஆசையோடு இருந்த சேரன் பிறகு நடிப்பதற்காகவே ஊரை விட்டு கிளம்பி வந்து இருந்த நிலையில் சென்னைக்கு வந்ததும் இங்கிருக்கும் நிலைமையை பார்த்து நாம நடிக்க வேண்டுமா? என்ற ஒரு கேள்வி அவருக்குள் எழுந்து விட்டதாம்.

பொதுவாக சேரனுடைய திரைப்படங்கள் மக்களின் அடிப்படை பிரச்சனை சார்ந்ததாகவும், சமுதாயத்தின் நிலவும் கஷ்டங்களை பற்றியதாகவுமே இருந்து வரும் அதற்கு எடுத்துக்காட்டாக பல திரைப்படங்களை சொல்லலாம். அவர் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா, அதைத் தொடர்ந்து பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி அதுபோல நடித்து இயக்கிய சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவம் இருந்து தவமாய் தவமிருந்து என்று பல திரைப்படங்கள் இருக்கிறது.

அந்த வகையில் ஆரம்பத்தில் நடிக்க வேண்டுமா என்று யோசனையோடு இருந்த சேரன் நாம ஒரு நடிகராவதற்கு முன்பு ஒரு இயக்குனராக வேண்டும் என்று முடிவெடுத்தாராம். அதற்கு காரணம் சேரனுக்கு போலீஸ் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். நம்மால் தான் ஒரு போலீசாக முடியவில்லை. ஆனால் சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை கூறி சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக தான் இயக்குனராக மாறினேன் என்று சேரன் கூறி இருக்கிறார்.

அதோடு சேரன் முதன்முதலாக பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்கியிருக்கிறார். அப்போது நடந்த நிகழ்வுகளை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. அந்த காலகட்டத்திலேயே அதில் நடித்த கேரக்டர்களின் பெயர்களுக்கு அவர்களை சார்ந்த ஜாதி அடையாளத்தை வைத்திருந்தேன்.

அதனால் பல பிரச்சனைகள் எனக்கு வந்தது. அந்த திரைப்படம் வெளியாகும் போது நான் மதுரையில் தான் இருந்தேன். மதுரையில் இருக்கும் ஒரு தியேட்டரில் சாதாரணமாக டிக்கெட் எடுத்துக்கொண்டு நானும் உள்ளே இருந்தேன். படம் ஓடிக் கொண்டிருக்கும் போது அந்த பக்கத்தில் ஒரு தரப்பினரும், இந்த பக்கத்தில் ஒரு தரப்பினரும் கத்திக்கொண்டே இருந்தனர். அடி, வெட்டு என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆனால் கடைசியில் திரைப்படத்தின் முடிவின்போது எல்லோரும் அமைதியாக இருந்தனர். அது எனக்கு பார்க்க சந்தோஷமாக இருந்தது. அந்த நேரத்தில் சில நாட்கள் கழித்து திரைப்படம் வெளியானதும் இரவு நேரத்தில் ஒரு நாள் கதவு தட்டப்பட்டது. நான் என்னவென்று பார்க்க என் வீட்டுக்கு வெளியே 200 பேர் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் எங்க வீட்டில் இருந்தவர்களும் பயப்பட்டார்கள்.

Bharthi Kannamma Movie Experiences by Director Cheran

உடனே நான் அவர்களை ஒன்றும் இல்லை பேசிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து அவர்களிடம் விடியற்காலை 5 மணி வரைக்கும் நின்று பேசிக்கொண்டே இருந்தேன். ஆனால் யாரும் என்னை அடிக்கவில்லை. கடும் கோபத்தில் இருந்தவர்கள் நான் பேசியே அவர்களை சமாளித்து இருந்தேன். இப்படியான நிலைமைகளை எல்லாம் நான் முதல் படத்திலேயே சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஆனாலும் மனம் தளராமல் என்னுடைய அடுத்தடுத்து திரைப்படங்களில் மக்களின் கஷ்டங்களை சொல்லிக் கொண்டிருந்தேன் என்று சேரன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+