பாரதி கண்ணம்மா 2: எப்படியும் இதுதான் நடக்க போகுது.. முதல் நாளே இப்படியா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
கண்ணம்மாவாக ரேஷ்மா அறிமுகமான நிலையில் அவர் இறந்து போவது போன்றும் அவருடைய இடத்தில் இனி சித்ரா கண்ணம்மாவாக நடிப்பது போன்று தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை: பாரதி கண்ணம்மா 2 சீரியலில் கண்ணமாவாக இன்று ரேஷ்மா முரளிதரன் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
கடந்த சீசனில் கண்ணமாவாக நடித்த வினுஷா தேவி நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று சித்ராவும் வினுஷா தேவியும் முதல் முறையாக பஸ்ஸில் சந்தித்துக் கொள்கின்றனர்.
இனி அடுத்ததாக கண்ணம்மா இறப்பது போன்றும் அவருடைய இடத்தில் கண்ணமாவாக சித்ரா நடிப்பது போன்று தான் சீரியல் இருக்கப்போகிறது என்று இப்போதே நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

முதல் நாள் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியல் தொடங்கி இரண்டு நாட்களில் தற்போது நெட்டிசன்களின் வசம் மாட்டியிருக்கிறது. ஏற்கனவே முதல் சீசன் அதிகமாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சீரியல் தொடங்கி இரண்டு நாட்களில் மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். சீரியல் ஆரம்பிக்கும் போது கடந்த சீசனில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவி சித்ராவாக ஜெயிலில் இருந்து விடுதலை ஆவது போன்று சீன்கள் இருந்தது. ஜெயிலிருந்து வந்தவருக்கு அவருடைய குடும்பத்தினர் யாரும் வீட்டில் அடைக்கலம் கொடுக்காமல் இன்று அனாதையாக வெளியே துரத்தப்பட்டிருக்கிறார்.

கண்ணம்மாவோடு சந்திப்பு
சித்ரா இனி எங்கே செல்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையில் வழியே வரும் பஸ்ஸில் ஏறி பஸ் எங்கே செல்கிறதோ அங்கே டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டு பஸ்ஸில் பயணிக்கிறார். அப்போது அந்த பஸ்ஸில் கடைசி நேரத்தில் ஓடி வந்து ஏறும் நபர் கண்ணம்மாவாக இருக்கிறார். அந்த கண்ணம்மா கேரக்டரில் ஏற்கனவே ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடித்த ரேஷ்மா முரளிதரன் வருகிறார்.இருவரும் ஒரே சீட்டில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணம்மா சித்ராவிற்கு நன்றி மழைகளை பொழிகிறார்.

இதுதான் கதையாம்
பிறகு இருவரும் எந்த ஊருக்கு போகிறீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஏற்கனவே சித்ராவை கொலை செய்ய வேண்டும் என்று ஜெயிலில் இருக்கும் தனம் என்கிற பெண் அனுப்பி இருந்த அடியாள்கள் பஸ்ஸை பின் தொடர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் கண்ணம்மாவும் பல வருடம் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறேன் என்று சந்தோஷமாக கூறுகிறார். இந்த நிலையில் இனி அந்த ரவுடிகளால் கண்ணம்மா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு அவர் இறந்து போகப் போகிறார். அவரை முதல் நாளே இறப்பது போன்று காட்டிவிட்டு கண்ணம்மா கேரக்டரில் இனி சித்ரா கண்ணம்மாவின் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார். இதுதான் கதையாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இனி கண்ணம்மா இவர்தானாம்
சீரியல் தொடங்கி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே ரசிகர்கள் இந்த சீரியல் என்ன மாதிரி கதையாக இருக்கப் போகிறது என்று எதிர்பார்ப்போடு இருந்தனர். இதுதான் கதையாக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில் இன்று அடுத்தடுத்த நிகழ்வுகளை பார்த்து கதை சொல்ல தொடங்கி விட்டார்கள். சமூக வலைதளத்தில் எப்படியும் ரேஷ்மாவை போட்டு தள்ளப் போகிறார்கள். எதற்காக இந்த சீரியலில் அவர் நடித்தார் என்று பலர் கேள்வி எழுப்ப, போன பாரதி கண்ணம்மா முதல் பாகத்தில் ஆலியா மானசா நடித்தது போல இதில் ரேஷ்மாவா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications