அடக்கடவுளே பிக் பாஸ் வீட்டில் டேனிக்கு ‘இப்படி’ ஒரு பிரச்சினையா?
பாலாஜியின் வாயுப் பிரச்சினை குறித்து வைஷ்ணவியிடம் கவுன்சிலிங் பெற்றார் டேனி.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பாலாஜியால் தனக்கேற்பட்டு வரும் பிரச்சினை குறித்து டேனி, வைஷ்ணவியிடம் கவுன்சிலிங் பெற்றார்.
பிக் பாஸ் வீட்டில் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், மன அழுத்தங்கள் குறித்து வைஷ்ணவியிடம் கவுன்சிலிங் பெறலாம் என போட்டியாளர்களுக்கு கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக வைஷ்ணவியிடம் ஒவ்வொருவராக வந்து தங்கள் பிரச்சினைகள், மனக்குமுறல்களைக் கொட்டினர். ஆனால், இது மற்றவர்களுக்கு கவுன்சிலிங் தருவதற்காக தரப்பட்ட அறிவிப்பாகத் தெரியவில்லை. மாறாக புறம் பேசுவதற்கு பேர் போன வைஷ்ணவிக்கு பிக் பாஸ் அளித்த மிகப்பெரிய தண்டனையாகவே இருந்தது.

கவுன்சிலிங்:
காரணம் அந்தளவிற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வினோதமான பிரச்சினைகளுடன் வந்து அமர்ந்தனர். வைஷ்ணவியின் பாடி லாங்குவேஜ் சொல்வதெல்லாம் உண்மையை நினைவு படுத்துவது போல் இருந்தது பெரிய காமெடி.

நாட்டாமை வைஷ்ணவி:
வந்ததெல்லாம் அக்கடா துக்கடா பிரச்சினைகள் தான். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு சொல்வது போல் கம்பீரமாக கவுன்சிலிங் கொடுத்தார் வைஷ்ணவி. சொம்பு மட்டும் தான் மிஸ்ஸிங்.

வில்லங்க பிரச்சினை:
கவுன்சிலிங் பெற முதல் நபராக வந்த டேனி சொன்ன பிரச்னையே ‘வில்லங்கமாக' இருந்தது. பிக் பாஸ் வீட்டில் டேனிக்கு இப்படி ஒரு சோதனையா என்ற ரேஞ்சில் இருந்தது அவரது கம்ப்ளையிண்ட்.

கேஸ் பிரச்சினை:
அதாவது, ‘பாலாஜி வாயு பிரச்னை காரணமாக அவ்வப்போது ‘டர்புர்'ரென்று சத்தம் போடுகிறாராம். எடுத்துச் சொன்னாலும் ‘நான் என்னப்பா பண்றது.. அதுவா வருது' ன பதில் அளிக்கிறாராம். இது அவருடையது மட்டுமல்ல, மற்றவர்களுடைய ஆரோக்கியம் தொடர்பான பிரச்னையும் இல்லையா?' என டேனி கவலையுடன் கூறினார்.

வைஷ்ணவியின் தீர்வு:
இப்படி ஒரு பிரச்சினையுடன் முதல் போட்டியாளர் வருவார் என எதிர்பார்க்காத வைஷ்ணவி, முதலில் எப்படி இதற்கு டேனிக்கு கவுன்சிலிங் கொடுப்பது எனத் திணறிப் போனார். பின் சுதாரித்துக் கொண்டு, ‘ஜனனி சொன்னா.. அவர் கேட்பார். மருந்து மாத்திரை எடுத்துக்கச் சொல்லலாம்.. சரியா...' என சமாதானப் படுத்தி டேனியை அனுப்பி வைத்தார்.

சாப்பாட்டுப் பிரச்சினை:
ஏற்கனவே, கடந்த சீசன் போல் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. போட்டியாளர்களுக்கு இடையே வரும் பிரச்சினைகளும் சிறுபிள்ளைத்தனமாக பெரும்பாலும் சாப்பாட்டிற்காகத் தான் இருக்கிறது. இந்நிலையில் கனா காணும் காலங்கள் என்ற பெயரில் பள்ளிக்கூட டாஸ்க் விளையாடிக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே டேனி இப்படி ஸ்கூல் மாணவர் போன்று புகார் அளித்தது சிரிப்பை வரவழைக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications