என்னோட வளர்ப்பைப் பற்றி பேசி விட்டார் கதறி அழுத சுருதி...தாமரைக்கு குவியும் நெகட்டிவ் கமெண்ட்டுகள்
சென்னை: விளையாட்டு இப்போ வினை ஆயிடுச்சு என பிக்பாஸ் போட்டியாளர்கள் கதறி அழுது வருகின்றனர்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணீர் கடலாக தான் தெரிகிறது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பேசும் முன்பு வார்த்தைகளை யோசித்து பேச வேண்டும் என தாமரைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

விளையாட்டு புரியலையா? ?
பிக் பாஸ் பற்றி தெரியாமலே பச்சை மண்ணாக இருந்து கொண்டு தாமரை செய்யும் அட்டூழியங்கள் சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. விளையாட்டை விளையாடி தான் பார்க்கவேண்டும் என்று கூட தெரியவில்லையே!!?? இவரை எப்படி இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார்கள் என்று பலர் பிக்பாஸ் மீதும் குறை கூறி வருகிறது. டாஸ்க் இதுதான் என்று தெரிந்த பிறகும் அதில் குறை கூறிக்கொண்டு எனக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கும் தாமரையைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இப்படி பேசலாமா??
இது என்ன பிக் பாஸுக்கு வந்த சோதனையா என்று பலர் குழம்பி வருகின்றனர். இவ்வளவு நாளாக பெண் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் ஜாலியாகவும் இருந்து வந்த நிலையில் இன்றைய ப்ரமோக்கள் போட்டியாளர்களுக்கு இருக்கும் புரிதல் இல்லாத தன்மைகளை வெளிப்படுத்தி வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் தாமரை தற்போது பேசிய வார்த்தைகள் தான் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களை ஷாக் ஆகி இருக்கிறது.

டாஸ்க் புரியலையா
காயின் டாஸ்க் போன வாரமே தொடங்கிய நிலையில், இந்த வாரமும் அந்த காயின்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதனை அடுத்தவர் எடுத்து விட்டால் அந்த காயின் அவர்களுக்கு சொந்தம் ஆகிவிடும் என்பது நிபந்தனை. ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் இப்போது போட்டியாளர்கள் முன்னுக்கு பின்னாக பேசி வருகின்றனர். அதுவும் தாமரை சுருதியிடம் பேசிய வார்த்தைகள் தான் இவருக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட் களை கொடுத்து வருகிறது. போன வாரம் வரைக்கும் அபிஷேக் தான் இந்த வேலையை செய்துகொண்டே இருந்தார். ஆனால் தற்போது அபிஷேக் வெளியே சென்று விட்ட பிறகு தாமரை இப்போது தொடங்கி இருக்கிறார் என்று சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அழுது உருகும் சுருதி
தாமரை பேசியதை கேட்டதும் அதுவரைக்கும் போல்டாக இருந்த சுருதி கதறி அழுது கொண்டிருப்பது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பலர் பீல் பண்ணி சுருதிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ரசிகர்களை பார்க்கும்போது இந்த வாரம் ஸ்ருதி தான் டாப்பில் வந்துவடுவார் போல, அவருக்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் விளையாட்டைப் பற்றி கொஞ்சமும் ஆரம்பத்திலிருந்தே புரியாமல் இருந்து வந்த தாமரைச்செல்வி இப்போது உச்சக்கட்டத்தில் செய்யும் செயல்கள் அவர் மீது ரசிகர்களுக்கு நெகட்டிவ் சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சுருதியின் வளர்ப்பைப் பற்றி தாமரை பேசிவிட்டார் என்று சுருதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications