இழந்த இமேஜை மீட்க இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க போகிறாரா அஸ்வின்..!! ரசிகர்களின் அட்வைஸ்
சென்னை:இழந்த புகழையும் பெயரையும் மீட்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஸ்வின் கலந்து கொள்ளப் போவதாக ஒரு சில நாட்களாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இதைப் பார்த்த பல அஸ்வின் அபிமானிகள் அஸ்வின் மிகப்பெரிய ரிஸ்க் எடுப்பதாகவும், ஆனால் அதையும் தாண்டி பிக் பாஸ் போட்டியில் அஸ்வின் களமிறங்கினால் நிச்சயம் அவருக்கு சப்போர்ட் செய்வோம் என்று சபதம் எடுத்து வருகின்றனர்.

கெத்தா பேசியதால் தொக்கா சிக்கினார்
சீரியலில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த அஸ்வின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் எந்த படத்திலும் நடிக்காமலேயே பிரபல கதாநாயகன் அளவிற்கு பிரபலமானார். புதிய பட வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பித்தன, பல இயக்குனர்களும் அஸ்வீனை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க காத்திருந்தனர்.எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தன் முதல் பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கெத்தாக பேசி தொக்காக நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டார் அஸ்வின்.

தூக்கத்தை கெடுத்த தூக்கம்
ஆடியோ ரிலீஸ் முழுவதும் நடந்த சம்பவங்களை மறந்துவிட்டு அஸ்வின் கதை கேட்கும் போது தூங்கியதாக சொன்னதை வைத்து அவரை தூங்க விடாமல் செய்துவிட்டனர் இனையவாசிகள். பல படங்கள் நடித்து தன் பெயருக்கு முன் அடைமொழியாக பட்டம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் தன்னுடைய முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே "ஸ்லீப்பிங் ஸ்டார்" என்று பட்டம் கொடுத்து ஒரு பாடு படுத்தி விட்டனர். தற்பொழுது வரை அஸ்வின் எந்த போஸ்ட் போட்டாலும் கமெண்ட் பாக்ஸ்களில் அஸ்வினின் தூக்கம் குறித்த கமாண்டுகள் குவிந்து விடுகிறது.

நானே களமிறங்குகிறேன்
கொஞ்ச நாட்களுக்கு முன்பு கூட தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் தன்னை பற்றி கிண்டல் செய்வதுபோல் காட்சியை வைத்திருந்த இயக்குனர் அறிவழகனை திட்டி தீர்த்திருந்தார் அஸ்வீன்.இருந்தாலும் பல செலிபிரிட்டிகள் அஸ்வினுக்கு ஆதரவாக தான் பேசியிருந்தனர். அஸ்வின் சொல்ல நினைத்த கருத்துகள் வேறு ஆனால் வார்த்தை தவறி அப்படி பேசி விட்டார் என்று அஸ்வினின் ஆடியோ லான்ச் பேச்சுக்கு முட்டு கொடுத்து வந்தனர். தற்பொழுது பரவும் செய்திகளை பார்த்தால் தன்னை பற்றிய நெகட்டிவ் இமேஜை மாற்ற அஸ்வினே நேரடியாக களத்தில் இறங்க முடிவு செய்துவிட்டார் போல!!!

ஆரம்பிக்கப்பட்ட அஸ்வின் ஆர்மி
பிக் பாஸ் சீசன் 6 அறிவிப்பு வந்தது முதல் அதில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது சில செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது.அதில் தற்போது அஸ்வினும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள போவதாக ஒரு செய்தி பரவுகிறது. இதுவரை நடந்த பிக் பாஸ் போட்டிகளில் வெளியில் நல்ல இமேஜை வைத்திருந்தவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தங்கள் இமேஜை டேமேஜ் செய்து கொண்டனர்.ஏற்கனவே டேமேஜ் ஆன இமேஜில் இருக்கும் அஸ்வின் பிக் பாஸ் போட்டியை எப்படி எதிர்கொள்ளப் போகிறாரோ!!? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அஸ்வினுக்கு ஆதரவாக இருக்கும் அஸ்வின் வெறியர்கள் இப்போதே அஸ்வினுக்கு ஆர்மி அமைக்கும் பணி ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications