20 நாளா அலைஞ்சேனே.. இன்ஸ்ட்டா ஸ்டோரி மணிக்கு இல்ல.. ஆனால் என் போட்டோவை இப்படி! ஐசுவின் தந்தை எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இதில் போட்டியாளராக கலந்து கொண்ட ஐசுவின் தந்தை முதல் முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தான் தன்னுடைய மகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக 20 நாட்களாக சென்னைக்கு வந்து பிக் பாஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சில விஷயங்களை சொன்னேன் என்பதை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நான் ஒரு ஸ்டோரி போட்டேன். அது மணிக்கு என்று சிலர் வதந்தி பரப்பி விட்டார்கள் ஆனால் அது மணிக்கு கிடையாது என்றும் முதல் முறையாக தன்னை பற்றி வந்த வதந்திகளுக்கும் ஐசுவின் தந்தை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஐசு மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர்கள் தான். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீருக்கு பல உதவிகளை செய்த அஷ்ரப் குறித்து அந்த நேரத்தில் அதிகமாக பாசிட்டிவாக பேசப்பட்டது.
அவர் குறித்து பலர் பாராட்டி பேசி வந்ததன் அடிப்படையில் இந்த சீசனில் ஐசுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஐசு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அஷ்ரப் குடும்பத்தினரை அதிகமானோர் திட்டி தீர்த்து வந்தனர். இதனால் வருத்தத்திலிருந்து முதல் முறையாக இது குறித்து பேட்டி ஒன்றில் அஸ்ரப் பேசி இருக்கிறார். அவர் அதில் பேசுகையில் என்னுடைய மகளுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த போது எனக்கு கொஞ்சம் கூட அவர் கலந்து கொள்ள விருப்பமே இல்லை.
அதனால் நான் ஐசுவிடம் பல அட்வைஸ் கொடுத்து இருந்தேன். எல்லாமே அவருக்கு தவறுகள் மட்டும்தான் சுட்டி காட்டி இருந்தேன். ஆனால் ஐசு மனம் மாறுவதாக எனக்கு தெரியவில்லை. அதனால் நானே சென்னைக்கு வந்து 20 நாட்களாக பிக் பாஸ் டீமிடம் ஐசு கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக பல பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். ஆனால் அது எடுபடாமல் போய்விட்டது.
சரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் மக்கள் அவர்களுடைய மனதில் இருந்த வன்மத்தை கொட்டுவதை பார்த்து நான் வேதனையின் உச்சத்துக்கே போய்விட்டேன். என் மகளைப் பற்றி பலர் தவறாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதோடு என்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்தினார்கள்.
எல்லாவற்றையும் பார்த்து நான் விரக்தியின் உச்சத்தில் இருந்தேன். என்னுடைய சின்ன மகளை பற்றி கூட நான் யோசிக்க கூட முடியாத லெவலில் இருந்தேன். இதனால் என்னுடைய ஒட்டு மொத்த குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாய் இருந்தது என்று அஸ்ரப் பேசியிருக்கிறார். அதோடு அவரிடம் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐசு இருக்கும்போது நாய் என்று குறிப்பிட்டு ஒரு இன்ஸ்டா ஸ்டோரி போட்டு இருந்தீங்களே அது மணிக்கு தானா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அது குறித்து காட்டமாக அஸ்ரப் பேசியிருக்கிறார். அதில் இது குறித்து எந்த சேனலும் என்னிடம் நீங்கள் யாருக்காக பதிவு போட்டீங்கன்னு கேட்கல. ஆனா என்னுடைய போட்டோவை மட்டும் பயன்படுத்தி இருக்கிறாங்க. இது எந்த வகையில் நியாயம். நான் மணியை குறிப்பிட்டு சொல்லவே இல்லை. அது வேறு ஒரு நபருக்காக வைக்கப்பட்ட ஸ்டோரி. என்னுடைய மனதில் என்ன தோன்றுகிறதோ அதை நான் ஸ்டோரியாக வைத்தேன்.
அது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தால் போதும் ஆனால் சம்பந்தமே இல்லாமல் சிலர் மணியின் பெயரை சொல்லிவிட்டார்கள் என்று குறிப்பிட்ட ஒரு யுடியுப் சேனல் மீதும் தன்னுடைய கோபத்தை அஷ்ரப் காட்டி இருக்கிறார். அதாவது ஐசு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது மணி மற்றும் ரவீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஐசு ரவீனாவிடம் உங்கள் இருவருக்கும் என்ன இருக்கிறது என்று அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததாக ஒரு நாள் ரவீனா மணி இடம் சொல்ல,
அதற்கு மணி நமக்குள் என்ன இருந்தால் இவளுக்கு என்ன இதை ஏன் இவ தெரிஞ்சுக்க விரும்புகிறார் என்று திட்டி இருக்கிறார். அந்த நேரத்தில் தான் ஐசுவின் தந்தை சில நாய்களுக்கு நாம என்ன செஞ்சாலும் அதை மறந்து விடுகிறார்கள் என்கிற மாதிரி ஒரு போஸ்ட் போட்டிருந்தாராம். அதனால் இது மணிக்கு தான் போட்டிருக்கிறார் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் அது கண்டிப்பாக மணிக்கு கிடையாது என்று அஷ்ரப் அதை மறுத்து இருக்கிறார்.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஐசு ஒரு நீண்ட பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் பிரதீப்பிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். அதுபோல மக்களிடமும் தான் விளையாடிய விளையாட்டு குறித்து மன்னிப்பு கேட்டிருந்தார். இது குறித்து அப்போது பலர் அஷ்ரப் மற்றும் அவருடைய மனைவி கட்டாயப்படுத்தி தான் ஐசு அப்படி ஒரு பதிவு வெளியிட்டார் என்று கூறி வந்தனர். அதற்கும் இப்போது அஸ்ரப் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது அந்த லெட்டர் என்னுடைய மகள் போஸ்ட் போடும்போது கூட நான் இதில் சில வார்த்தைகளை நீக்கிவிடலாம் என்று சொன்னேன். அதற்கு அவர் இது என்னுடைய மனதில் இருந்து முழுமையாக வந்தது. அதை நான் அப்படியே பதிவு செய்தால் தான் சரியாக இருக்கும். அதனால் இதில் நான் எந்த எடிட்டிங் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
அதுபோல அவருக்கு வேண்டாம் என்று தோன்றிய போது அவர் அந்த பதிவை டெலிட் செய்து விட்டார். அதில் நாங்கள் எந்த தலையிடும் செய்யவில்லை. ஆனால் இதை பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சிலர் தவறு தவறாக செய்திகளை பரப்புகிறார்கள் என்று எமோஷனலாக அஷ்ரப் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications