பிக் பாஸே இப்படி செய்யலாமா? அர்ச்சனாவுக்கு எதிராக நடக்கும் சதி.. சிக்கிய பிரபலம்.. பரவும் ஸ்க்ரீன் ஷாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அர்ச்சனாவுக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சதி நடந்து வருவதாக அர்ச்சனாவின் ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அதுவும் அர்ச்சனாவுக்கு கடைசி நேரத்தில் வாக்கு செலுத்த முடியாத வகையில் புது பிரச்சனை வந்து கொண்டிருப்பதாகவும் சில ஸ்கிரீன்ஷாட்டையும் ரசிகர்கள் பகிர்ந்து இருக்கின்றனர்

அதே நேரத்தில் மாயாவை ஜெயிக்க வைப்பதற்காக தான் பிக் பாஸ் இப்படி ஒரு மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கிறாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே நேற்று மாயாவை நம்பி அர்ச்சனா பேசியிருந்த நிலையில் பூர்ணிமாவின் முதுகுக்கு பின்னாடி மாயா அவரை எட்டி மிதிப்பது போன்று பாவனை செய்தது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இப்போது பிக் பாஸ் இறுதிக் கட்டத்தில் அர்ச்சனா மற்றும் மணிக்கு வாக்கு செலுத்த முடியவில்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

 bigg boss 7 Archanas fans are alleging that there is a conspiracy against this show

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் இப்போது குறையும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு எப்போதும் போல இப்போதும் ஏமாற்றம்தான் கிடைக்கும்.

ஏனென்றால் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று சொல்ற மாதிரிதான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஆரம்பமான முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் இருந்து வருகிறது. அதிலும் கடைசியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையிலும் போட்டியாளர்கள் மனதிற்குள் இருக்கும் வன்மம் அடிக்கடி வெளியேறுவதை பார்க்க முடிகிறது. நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார்.

அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களின் நான் எவ்வளவு சிறந்தவர் என்பதை சொல்லும் வகையில் அந்த டாஸ்க் இருந்தது. அதில் எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சனா எல்லோரும் பேசி முடித்த பிறகு கடைசி ஆளாக பேச தொடங்கினார். ஆனால் அப்போது அர்ச்சனா பேசத் தொடங்கியதுமே நாங்கள் பேசியதற்கு ரிவ்யூ சொல்ல கூடாது..

நீங்க உங்களோட கருத்தை மட்டும் சொல்லுங்க என்று எல்லோரும் சொல்ல அதனால் கோபமான அர்ச்சனா தனக்கு மாயா மட்டும்தான் ஆறுதலாக இருக்கிறார் என்று மாயாதான் என்னை விட பெஸ்ட்டாக விளையாடுகிறார் என்று சொல்லிவிட்டு முடித்திருந்தார். இப்படியான நிலையில் தான் நம்பியவர்கள் தினேஷ், மணி எல்லாரும் தன்னைப் பற்றி இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்று அந்த டாஸ்க் முடிந்த பிறகு மாயாவிடம் புலம்பிக்கொண்டே அர்ச்சனா வந்து கொண்டு இருந்தார்.

அப்போது மாயா,அர்ச்சனாவை முன்னே போகவிட்டு அர்ச்சனாவுக்கு முதுகுக்கு பின்னாடி அவரை எட்டி உதைப்பது போன்று மாயா செய்கை காட்டி இருந்தார். இந்த போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்ததும் மாயா இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லையே என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

தன்னை நம்பி ஒருவர் அடைக்கலம் புகுந்து இருக்கும் நிலையில் அவரிடமும் இப்படியா தன்னுடைய வன்மத்தை காட்ட வேண்டும் என்பது பலருடைய கேள்விகளாக இருக்கிறது. அதுபோல கடைசி வாரத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு மக்கள் ஓட்டு அளிக்கும் வகையில் சில போன் நம்பர் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் ரசிகர்கள் அர்ச்சனா மற்றும் மணிக்கு போன் செய்யும்போது மட்டும் அந்த நம்பர் உபயோகத்தில் இல்லை, இது நீங்கள் தவறாக நம்பர் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று கூறப்படுகிறதாம். ஆனால் மீதம் உள்ள போட்டியாளர்களுக்கு எல்லாம் போன் போகிறதாம். இதனால் மாயாவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் எப்படி சூழ்ச்சி செய்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனாலும் உண்மையில் இது பிக் பாஸ் தரப்பிலிருந்து செய்யப்பட்ட சூழ்ச்சி தானா? அல்லது வேறு எதுவும் பிரச்சனையா? என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இந்த பிரச்சனையில் நீங்க என்ன நினைக்கிறீர்களோ அதை கமெண்ட் பாக்ஸில் வந்து சொல்லிட்டு போங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+