பிக் பாஸ்க்கு ஐசு வந்தா இதை தான் பண்ணுவேன்! அதுவும் கேமரா முன்னாடியே! ஓப்பனா பேசி மாட்டிய நிக்சன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையோடு முடிவடைய இருக்கும் நிலையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கின்றனர். அப்போது நிக்சன் மற்றும் விசித்திரா பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுபோல நிக்சன் பிரதீப் பற்றியும் பிக் பாஸ் வீட்டிற்குள் பேச அதற்கும் விசித்திரா நிக்சனை திட்டி இருக்கிறார். ஏற்கனவே பிரதீப் பற்றி ரவீனா பேசிக் கொண்டிருந்ததற்காகத்தான் அவருக்கும் பிக் பாஸ் வார்னிங் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அதைத்தொடர்ந்து நிக்சனும் பிரதீப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதுபோல ஐசு பிக் பாஸ்க்கு மீண்டும் வந்தால் நான் இதை தான் செய்யப் போகிறேன் என்று வெளிப்படையாகவே நிக்சன் சொல்லி இருந்த நிலையில் இதெல்லாம் உலக மகா நடிப்புடா சாமி என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை முடிவடைய இருக்கிறது. கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் முழுக்கவே ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியே போன போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து கொண்டே இருக்கின்றனர். அதிலும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிக்சன் விசித்ரா போன்றோரும் உள்ளே வந்திருக்கின்றனர்.
காரணம் நிக்சன் வினிஷாவிடம் எப்படி மன்னிப்பு கேட்கிறார் என்று பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்னொரு சம்பவமும் நடைபெற்றது. அதாவது நிக்சன் இந்த சீசனில் கலந்து கொள்ளும்போது ஐசு இந்த சீசனில் கலந்து கொள்வாரா என்பதும் பலருடைய கேள்வியாக இருந்தது.
ஏற்கனவே இவர்கள் இருவருடைய நடவடிக்கையை பார்த்து ஐசுவின் அப்பா கடும் கோபத்தில் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து வந்திருந்தார். அதுபோல நிக்சன் வெளியேறும் போது கூட தன்னுடைய சந்தோஷத்தை வெளிகாட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று நிக்சனும் விசித்திராவும் பேசிக் கொண்டிருக்கும்போது விசித்ரா நிக்சனிடம் நீ வெளியே போய் எல்லாரையும் பார்த்தியா என்று கேட்க அதற்கு நிக்சன் எல்லாரையும் மீட் பண்ணினேன்.
ஆனால் ஒருத்தரை மட்டும் தான் பார்க்க முடியல, அவரால்தான் சந்திக்கலையே என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்க அதற்கு விசித்திரா தெரியும் தெரியும் நானும் உங்க நியூஸை எல்லாம் பார்த்தேன் என்று கிண்டல் செய்து கொண்டிருக்க, அதற்கு நிக்சன் ஐசு மீண்டும் வந்தால் நானும் ஐசுவும் கேமரா முன்னாடி போய் சொல்ல போறோம்,
நாங்க கண்டெண்டுக்காக தான் உள்ள அப்படி நடந்துகிட்டோம்.. எங்களுக்குள்ள வேற எந்த உறவு முறையும் இல்லை என்று நான் விளக்கம் கொடுக்க போறேன் என்று சொல்ல அதற்கு விசித்திரா நீ இந்த பேச்சை விட்டுடு அங்க வெளியே ஐசு அப்பா ரொம்ப கோபத்தில் இருக்கிறார். ஸ்டேட்டஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு என்று சொல்ல அதற்கு நிக்சன் சிரித்து கொண்டிருக்கிறார்.
அதோடு நானும் ஐசுவும் காமெடிக்காக தான் அப்படி எல்லாம் பண்ணனும் என்று இந்த கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க போறோம் என்று மீண்டும் தன்னுடைய மாஸ்டர் பிளானை நிக்சன் சொல்லிக்கொண்டு,பிரதீப் இனி உள்ள திரும்பி வருவாரா? என்று கேட்க அதற்கு விசித்திரா, பிரதீப் கதையை பற்றி பேசியதற்கு தானே இப்போ தானே பிக் பாஸ் திட்டுனாரு அதனால பிரதீப் பற்றி பேசாத என்று சொல்ல அதைக்கேட்டு நிக்சன் குழப்பத்தில் இருக்கிறார்.
இப்படியாக நேற்று ஒரு உரையாடல் நடைபெற்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவ்வளவு பட்டும் நிக்சன் திருந்த மாட்டாரா? என்று ரசிகர்கள் சிலர் கலாய்த்து கொண்டிருக்கும் நிலையில் என்னதான் பிரதீப்பை வெளியே அனுப்பிவிட்டாலும் பிரதீப்பை பார்த்து இவங்களுக்கு பயம் பயங்கரமாக தான் இருக்குது என்று பிரதீப்புடைய ரசிகர்கள் இந்த நேரத்திலும் கெத்து காண்பித்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications