பிக் பாஸ்க்கு பிறகு முதல் முறை வீடியோ வெளியிட்ட பூர்ணிமா.. வாயை கொடுத்து மாட்டிக் கொண்டாரே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பூர்ணிமா நேற்று பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் வெளியே வந்ததும் முதல் முறையாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தனக்கு வந்த பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் கமாண்டுகளுக்கு விளக்கம் கொடுத்து பூர்ணிமா பேசியிருக்கையில் வழக்கம் போல பூர்ணிமாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவர் செய்த செயலுக்கு இணையத்தில் அதிகமான கருத்துப் போர் ஏற்பட்டது.
இந்த நிலையில் இப்போது பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எடுத்த முடிவாக இருந்தாலும் வெளியே வந்ததும் பூர்ணிமாவிடம் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்த பிரச்சனை பற்றி பலர் பேசி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறி இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக முதல் ப்ரோமோவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நேற்றைய தினமே பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். அது குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பூர்ணிமா வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எல்லோருக்கும் வணக்கம்... நான் உங்க பூர்ணிமா ரவி. நான் வெளியே வந்ததும் சமூக வலைதளத்தை பார்த்தேன். அதில் எவ்வளவு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருக்கிறதோ அந்த மாதிரி நெகட்டிவ் கமெண்ட்ஸ் எனக்கு வந்திருக்கிறது.
நான் எனக்கு வந்த பாசிட்டிவ் கமெண்ட்ஸை பார்த்து நல்லா ஹேப்பியா இருக்கேன். அதனால எந்த நெகட்டிவ் கமெண்ட்டையும் நான் என்னுடைய தலையில் போட மாட்டேன் என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் பல நிலையில் பூர்ணிமா ஒன்றுமில்லாமல் இந்த வாரம் எலிமினேஷனில் வெளியாவதற்கு பதிலாக 16 லட்சம் ரூபாயை எடுத்துட்டு போனது நல்ல விஷயம் என்று பலர் பாராட்டி வருகின்றனர்.
ஆனாலும் ஆரம்பத்தில் இவர் பிரதீப்க்கு எதிராக பேசியதை வைத்து இப்போதும் பலர் கலாய்த்து கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி ஜூலி எதிர்மறையான கமாண்டால் பிரபலமானாரோ அதுபோலத்தான் பூர்ணிமாவும் மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் நன்றாக தன்னுடைய விளையாட்டை கொண்டு போய் கொண்டு இருந்த பூர்ணிமா மாயா கூட்டணியில் சேர்ந்த பிறகு தான் நெகட்டிவ் இமேஜ் வரத் தொடங்கியது.
ஆனால் பூர்ணிமா மட்டும் தனியாக விளையாடி இருந்தால் அவரும் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர்களின் வரிசையில் மக்களின் மனதில் இடம் பிடித்து இருப்பார். அதே நேரத்தில் பூர்ணிமா பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்ததும் அவரை தாக்கும் விதமாக பிரதீப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், அதுவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது பூர்ணிமா அம்மாகிட்ட கொடுத்த வாக்கு.. அதனால் தான் நான் அமைதியாக இருக்கிறேன். ஆனால் கூலிக்கு மார் அடிக்கிற கும்பல் எல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாய கிளறாதீங்க. நான் மற்றவர்களின் கேரக்டரை கெடுத்து விளையாடுபவன் இல்லை. அது என் வேலையும் கிடையாது என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அப்படி என்ன பூர்ணிமாவின் அம்மா கிட்ட பிரதீப் வாக்கு கொடுத்து இருப்பாராக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதோடு ஒரு சில ரசிகர்கள் பிரதீப்க்கு அட்வைஸும் கொடுத்து வருகிறார்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும். நீங்கள் உங்களுடைய அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருங்கள். எதற்காக இப்படி உங்களுடைய நேரத்தை வீணடித்து இப்படிப்பட்டவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அட்வைஸும் கொடுக்கிறார்கள்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஒரு சில போட்டியாளர்கள் பிரதீப்க்கு எதிராக பேசிவிட்டு வெளியே வந்ததும் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு போஸ்ட் போட்ட கதை எல்லோருக்கும் தெரியும். அந்த மாதிரி பூர்ணிமா செய்யப் போகிறாரா? அல்லது தான் எடுக்க முடிவு சரிதான் என்று இருக்கப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications