பிக் பாஸில் அதிர்ச்சி.. பிரதீப் பற்றி பேசியதால் அதிரடியாக வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கிராண்ட் பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த சீசனில் இருந்து எலிமினேஷனாகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர்.

அப்போது உள்ளே வந்த போட்டியாளர்கள் வெளியே நடக்கும் நிகழ்வுகளை குறித்து எதுவும் சொல்லக்கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் அதை மீறி ஒரு சில போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு போட்டியாளரை பிக் பாஸ் திடீரென்று வெளியே அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே இந்த சீசன் முடிவடைய இருக்கும் நிலையில் ஏற்கனவே இதில் போட்டியாளர்களாக இருந்து எலிமினேஷனில் வெளியே போன போட்டியாளர்கள் கிராண்ட் பினாலே வாரத்தை கொண்டாடுவதற்காக உள்ளே வந்திருக்கிறார்கள்.

bigg boss 7 contestant Raveena was evicted for talking about Pradeep

ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த வன்மமும் சண்டை சச்சரவும் இப்போதும் உள்ளே நடக்கிறது. சில போட்டியாளர்கள் ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து விட்டு வெளியே போய் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு உள்ளே வந்திருந்த நிலையிலும் அவர்கள் கொஞ்சம் கூட மாறாமல் போட்டியாளர்கள் சிலர் உள்ளே நடந்து கொள்வதை பார்க்கையில் கடுப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் இணையத்தில் புலம்பி வருவதை காண முடிகிறது.

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் இன்னும் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதில் அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, மாயா, மணி ஐவரும் இறுதி கட்டத்திற்கு தேர்வாகி இருக்கும் நிலையில் அதில் விஷ்ணு இன்று இரவு அல்லது நாளை மிட் நைட் எவிக்ஷனில் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்களில் மனதை குழப்பம் வகையில் வெளியே போயிட்டு உள்ளே வந்த போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் பல போட்டியாளர்கள் அர்ச்சனாவை டார்கெட் செய்து அடித்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோல மாயாவிற்க்கு சப்போட்டாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில போட்டியாளர்கள் வெளியே நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் கோர்டுவேர்ட் வைத்து உள்ளே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அது குறித்து பிக் பாஸ் எச்சரித்து இருக்கிறார். ஆனால் பல நேரங்களில் சிலர் பேசுவதை கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை 24 மணி நேர லைவில் பிரதீப்க்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் பற்றியும் பிரதீப்புடைய வெளியேற்றம் பற்றியும் ரவீனா அதிகமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் திடீரென்று ரவீனாவை பிக் பாஸ் கன்செக்ஷன் ரூமுக்கு அழைத்திருக்கிறார்..

ஏற்கனவே ரவீனாவே பார்ப்பதற்காக அவருடைய குடும்பத்தினர் ஃப்ரீஸ் டாஸ்க்கில் வந்திருந்த போது அவர்கள் வெளி உலகத்தை பற்றி பேசியதால் அவர்களுக்கு வார்னிங் கொடுக்கப்பட்டது. அதுபோல இப்போது ரவீனா கன்ஸ்க்ஷன் ரூமுக்கு போயிட்டு திரும்பி வராததால் அவர்கள் வெளியே அனுப்பி வைத்திருக்கிறாரா என்று ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர்.

அது போல கன்செக்ஷன் ரூமுக்கு போகும்போது கூட ரவீனா நான் என்னத்த பேசி தொலைச்சேன்னு தெரியலையே வெளியே அனுப்பிவிடுவார்களோ என்று புலம்பி கொண்டு போகிறார் உள்ளே சென்ற பிறகு பிக் பாஸ் ரவீனா சில காரணங்களால் வெளியே சென்றுள்ளார் என்று கூறுகின்றனர். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

எல்லோரும் என்னாச்சு என்னாச்சு என்று குழம்பிக் கொண்டிருக்கும்போது பிக் பாஸ் யாரும் குழம்ப வேண்டாம் ரவீனா மீண்டும் வருவார் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் ரவீனா வெளியே போனதற்கான காரணம் ரவீனா பிரதீப் பற்றி பேசியதால் தானா? என்பது பலருடைய சந்தேகமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+