5 பேரு செஞ்ச கிரிமினல் வேலை.. இதை எதிர்பார்க்கல.. காலில் விழுந்து வணங்குகிறேன்.. கூல் சுரேஷ் பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் எலிமினேஷன் கூல் சுரேஷ் முதல் முறையாக பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஐந்து பேர் செஞ்ச கிரிமினல் வேலையால் திறமை இருக்கிறவங்க வெற்றி பெற முடியாம போய்விட்டது என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.

அதோடு பிரதீப் குறித்து பல விஷயங்களை கூல் சுரேஷ் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

bigg boss 7 Cool Suresh 1st Interview About Pradeep Maya Poornima

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான கூல் சுரேஷ் கடந்த சில நாட்களாகவே நான் வீட்டுக்கு போகிறேன் என்று அடிக்கடி கூறி இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை எலிமினேஷனில் வெளியேறி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதை பிக்பாஸ் வீட்டிற்குள் தான் இருந்தபோது ஏற்பட்ட மனநிலை பிறகு இப்போது இருக்கும் நிலைமை குறித்தும் பேசி இருக்கிறார்கள். அதில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக கூடிய முழு தகுதி பிரதீப்க்கு தான் இருந்தது. ஆனால் பிரதீப்க்கு ஒரு அஞ்சு பேரு செஞ்ச கிரிமினல் வேலையால்தான் வெளியேற்றப்பட்டார்.

அவர்கள் செஞ்ச வேலையை உண்மை என்று அடித்து சொன்னதால் நாம் எல்லோரும் உண்மை இது தான் என்று நம்பி விடுகிறோம். அந்த மாதிரி தான் பிரதீப்புக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. பிரதீப் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தால் கடைசி நேரத்தில் நானும் பிரதீப்பும் மேடையில் நின்றிருக்கும் நிலைமை வந்தால் கூட, பிரதீப் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர்னு சொல்லிருங்க கமல் சார் என்று நானே சொல்லி இருப்பேன்.

அந்த அளவிற்கு பிரதீப் இந்த நிகழ்ச்சியை ஜெயிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அதற்காக தகுதியும் இருந்தது. ஆனால் சிலர் செஞ்ச வேலையால் பிரதீப் வெளியேற்றப்பட்டான். அதுபோல பிக்பாஸ் வீட்டிற்குள் இப்போது மூன்று பேர் மட்டும் தான் உண்மையாக இருக்கிறார்கள். அது யாருன்னா விஷ்ணு தினேஷ் மணி தான். பலபேர் உள்ளே நடிச்சுகிட்டு தான் இருக்காங்க.

இப்ப கூட பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவின் அப்பா வந்திருக்காங்க. நான் எப்போதும் சொல்லும் வார்த்தையை உள்ளே சொல்லி இருப்பதாக கேள்விப்பட்டேன். அதாவது நீங்க இந்த வீட்டுக்குள்ள எப்படி நடந்துக்கிறீங்களோ அதுபடி தான் வெளியே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் சொன்னதை அங்கு சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அர்ச்சனாவின் அப்பா ஒரு ப்ரொபோசர் அவர் என்னுடைய வார்த்தையை சுட்டிக்காட்டி இருப்பது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அவருடைய காலில் விழுந்து நான் வணங்குகிறேன். இந்த மாதிரி பல பேர் என்னை இப்போ புரிஞ்சுகிட்டாங்க. இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும் போது இவ்வளவு வரவேற்பு எனக்கு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்ல. ஆனா இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என்னிடம் பல பேர் ரொம்ப பாசமா பேசுறாங்க.

bigg boss 7 Cool Suresh 1st Interview About Pradeep Maya Poornima

உங்களுடைய உண்மையான குணம் இதுதானு எங்களுக்கு இப்போது தெரிஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு இப்போ ரெண்டு மூணு திரைப்பட வாய்ப்பு வந்திருக்கு. அதுபோல பிக் பாஸ் வீட்டுல இருக்கிறதுல டைட்டில் ஜெயிக்கிறதுக்கு அஞ்சு பேருக்கு தகுதி இருக்கு. அதுல விஷ்ணு, தினேஷ், மணி, அர்ச்சனா, விசித்திராவை சொல்லுவேன்.

ஆனாலும் கடைசியில் லக்கு இருக்கவங்களுக்கு தான் டைட்டில் கிடைக்க போகுது. என்னதான் சிலர் நல்லவங்களா இருந்தாலும் சிலர் செய்த சூழ்ச்சியால உண்மையான வெற்றி கிடைக்காமல் போனதை நாம ஏற்கனவே பார்த்து இருக்கோம். அந்த மாதிரி இந்த சீசனிலும் நடக்க போகுதுன்னு எனக்கு தோணுது என்றும் அந்த பேட்டியில் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+